சூரா 59 ஸூரத்துல் ஹஷ்ர் (ஒன்று கூட்டுதல்), அயாஹ் 11
-
أَلَمْ تَرَ إِلَى الَّذِينَ نَافَقُوا يَقُولُونَ لِإِخْوَانِهِمُ الَّذِينَ كَفَرُوا مِنْ أَهْلِ الْكِتَابِ لَئِنْ أُخْرِجْتُمْ لَنَخْرُجَنَّ مَعَكُمْ وَلَا نُطِيعُ فِيكُمْ أَحَدًا أَبَدًا وَإِنْ قُوتِلْتُمْ لَنَنْصُرَنَّكُمْ وَاللَّهُ يَشْهَدُ إِنَّهُمْ لَكَاذِبُونَ
சொல் வாரியான மொழிபெயர்ப்பு
- أَلَمْ تَرَ
- நீர் பார்க்கவில்லையா?
- إِلَى ٱلَّذِينَ نَافَقُوا۟
- நயவஞ்சகர்களை
- يَقُولُونَ
- கூறுகின்றனர்
- لِإِخْوَٰنِهِمُ
- தங்கள் சகோதரர்களுக்கு
- ٱلَّذِينَ
- எவர்கள்
- كَفَرُوا۟
- நிராகரித்தனர்
- مِنْ أَهْلِ ٱلْكِتَٰبِ
- வேதக்காரர்களில்
- لَئِنْ أُخْرِجْتُمْ
- நீங்கள் வெளியேற்றப்பட்டால்
- لَنَخْرُجَنَّ
- நிச்சயமாக நாங்களும் வெளியேறுவோம்
- مَعَكُمْ
- உங்களுடன்
- وَلَا نُطِيعُ
- நாங்கள் கட்டுப்பட மாட்டோம்
- فِيكُمْ
- உங்கள் விஷயத்தில்
- أَحَدًا أَبَدًا
- யாருக்கும்/எப்போதும்
- وَإِن قُوتِلْتُمْ
- நீங்கள் போர் செய்யப்பட்டால்
- لَنَنصُرَنَّكُمْ
- நிச்சயமாக நாங்கள் உங்களுக்கு உதவுவோம்
- وَٱللَّهُ
- அல்லாஹ்
- يَشْهَدُ
- சாட்சி சொல்கிறான்
- إِنَّهُمْ
- நிச்சயமாக இவர்கள்
- لَكَٰذِبُونَ
- பொய்யர்கள்தான்
(நபியே!) நயவஞ்சகம் செய்வோரை நீர் கவனிக்கவில்லையா? அவர்கள், வேதத்தை உடையோரிலுள்ள நிராகரித்துக் கொண்டிருப்போரான தம் சகோதரர்களிடம் “நீங்கள் வெளியேற்றப்பட்டால், உங்களுடன் நாங்களும் நிச்சயமாக வெளியேறுவோம்; அன்றியும், (உங்களுக்கெதிராக) நாங்கள் எவருக்கும், எப்பொழுதும் நாம் வழிப்பட மாட்டோம்; மேலும், உங்களுக்கெதிராக போர் செய்யப்பெற்றால், நிச்சயமாக நாங்கள் உங்களுக்கு உதவி செய்வோம்” என்று கூறுகின்றனர்; ஆனால் நிச்சயமாக அவர்கள் பொய்யர்கள் என்று அல்லாஹ் சாட்சியங் கூறுகிறான்.
59:11
மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்