சூரா 59 ஸூரத்துல் ஹஷ்ர் (ஒன்று கூட்டுதல்), அயாஹ் 18
-
يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللَّهَ وَلْتَنْظُرْ نَفْسٌ مَا قَدَّمَتْ لِغَدٍ ۖ وَاتَّقُوا اللَّهَ ۚ إِنَّ اللَّهَ خَبِيرٌ بِمَا تَعْمَلُونَ
சொல் வாரியான மொழிபெயர்ப்பு
- يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُوا۟
- நம்பிக்கையாளர்களே!
- ٱتَّقُوا۟
- அஞ்சிக்கொள்ளுங்கள்
- ٱللَّهَ
- அல்லாஹ்வை
- وَلْتَنظُرْ
- பார்த்துக் கொள்ளட்டும்
- نَفْسٌ مَّا قَدَّمَتْ
- ஓர் ஆன்மா/எதை அது முற்படுத்தி இருக்கிறது
- لِغَدٍ
- மறுமைக்காக
- وَٱتَّقُوا۟
- அஞ்சிக் கொள்ளுங்கள்!
- ٱللَّهَ
- அல்லாஹ்வை
- إِنَّ ٱللَّهَ
- நிச்சயமாக அல்லாஹ்
- خَبِيرٌۢ
- ஆழ்ந்தறிபவன்
- بِمَا تَعْمَلُونَ
- நீங்கள் செய்பவற்றை
ஈமான் கொண்டவர்களே! அல்லாஹ்வுக்கு அஞ்சி நடந்து கொள்ளுங்கள்; மேலும், ஒவ்வொருவரும் (மறுமை) நாளுக்காக தான் முற்படுத்தி வைத்திருப்பதைப் பார்த்துக் கொள்ளட்டும்; இன்னும், நீங்கள் அல்லாஹ்வை அஞ்சி நடந்து கொள்ளுங்கள்; நீங்கள் செய்பவற்றை, நிச்சயமாக அல்லாஹ் நன்கறிந்தவன்.
59:18
மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்