சூரா 5 ஸூரத்துல் மாயிதா (ஆகாரம் / உணவு மரவை), அயாஹ் 110

  1. إِذْ قَالَ اللَّهُ يَا عِيسَى ابْنَ مَرْيَمَ اذْكُرْ نِعْمَتِي عَلَيْكَ وَعَلَىٰ وَالِدَتِكَ إِذْ أَيَّدْتُكَ بِرُوحِ الْقُدُسِ تُكَلِّمُ النَّاسَ فِي الْمَهْدِ وَكَهْلًا ۖ وَإِذْ عَلَّمْتُكَ الْكِتَابَ وَالْحِكْمَةَ وَالتَّوْرَاةَ وَالْإِنْجِيلَ ۖ وَإِذْ تَخْلُقُ مِنَ الطِّينِ كَهَيْئَةِ الطَّيْرِ بِإِذْنِي فَتَنْفُخُ فِيهَا فَتَكُونُ طَيْرًا بِإِذْنِي ۖ وَتُبْرِئُ الْأَكْمَهَ وَالْأَبْرَصَ بِإِذْنِي ۖ وَإِذْ تُخْرِجُ الْمَوْتَىٰ بِإِذْنِي ۖ وَإِذْ كَفَفْتُ بَنِي إِسْرَائِيلَ عَنْكَ إِذْ جِئْتَهُمْ بِالْبَيِّنَاتِ فَقَالَ الَّذِينَ كَفَرُوا مِنْهُمْ إِنْ هَٰذَا إِلَّا سِحْرٌ مُبِينٌ

    சொல் வாரியான மொழிபெயர்ப்பு

    إِذْ قَالَ
    சமயம்/கூறினான்
    ٱللَّهُ
    அல்லாஹ்
    يَٰعِيسَى
    ஈஸாவே
    ٱبْنَ
    மகன்
    مَرْيَمَ
    மர்யமுடைய
    ٱذْكُرْ
    நினைவு கூர்வீராக
    نِعْمَتِى
    என் அருளை
    عَلَيْكَ
    உம்மீது
    وَعَلَىٰ وَٰلِدَتِكَ
    இன்னும் மீது/உம் தாய்
    إِذْ
    சமயம்
    أَيَّدتُّكَ
    பலப்படுத்தினேன்/உம்மை
    بِرُوحِ
    ஆத்மாவைக்கொண்டு
    ٱلْقُدُسِ
    பரிசுத்தமான
    تُكَلِّمُ
    பேசுவீர்
    ٱلنَّاسَ
    மக்களிடம்
    فِى ٱلْمَهْدِ
    தொட்டிலில்
    وَكَهْلًا
    இன்னும் வாலிபராக
    وَإِذْ
    இன்னும் சமயம்
    عَلَّمْتُكَ
    கற்பித்தேன்/உமக்கு
    ٱلْكِتَٰبَ
    எழுதுவதை
    وَٱلْحِكْمَةَ
    இன்னும் ஞானத்தை
    وَٱلتَّوْرَىٰةَ
    இன்னும் தவ்றாத்தை
    وَٱلْإِنجِيلَ
    இன்னும் இன்ஜீலை
    وَإِذْ تَخْلُقُ
    இன்னும் சமயம்/படைப்பீர்
    مِنَ
    இருந்து
    ٱلطِّينِ
    களிமண்
    كَهَيْـَٔةِ
    உருவத்தைப் போல்
    ٱلطَّيْرِ
    பறவையின்
    بِإِذْنِى
    என் அனுமதியினால்
    فَتَنفُخُ
    ஊதுவீர்
    فِيهَا
    அதில்
    فَتَكُونُ
    அது/ஆகிவிடும்
    طَيْرًۢا
    பறவையாக
    بِإِذْنِى
    என் அனுமதியினால்
    وَتُبْرِئُ
    இன்னும் சுகமளிப்பீர்
    ٱلْأَكْمَهَ
    பிறவிக் குருடரை
    وَٱلْأَبْرَصَ
    இன்னும் வெண்குஷ்டரை
    بِإِذْنِى
    என் அனுமதியினால்
    وَإِذْ
    இன்னும் சமயம்
    تُخْرِجُ
    வெளியாக்குவீர்
    ٱلْمَوْتَىٰ
    மரணித்தவர்களை
    بِإِذْنِى
    என் அனுமதியினால்
    وَإِذْ كَفَفْتُ
    இன்னும் சமயம்/தடுத்தேன்
    بَنِىٓ إِسْرَٰٓءِيلَ
    இஸ்ரவேலர்களை
    عَنكَ
    உம்மைவிட்டு
    إِذْ
    போது
    جِئْتَهُم
    வந்தீர்/அவர்களிடம்
    بِٱلْبَيِّنَٰتِ
    தெளிவான அத்தாட்சிகளைக் கொண்டு
    فَقَالَ
    கூறினார்(கள்)
    ٱلَّذِينَ
    எவர்கள்
    كَفَرُوا۟
    நிராகரித்தார்கள்
    مِنْهُمْ
    அவர்களில்
    إِنْ هَٰذَآ إِلَّا
    இல்லை/இது/தவிர
    سِحْرٌ مُّبِينٌ
    சூனியம்/தெளிவானது

    அப்பொழுது அல்லாஹ் கூறுவான்| “மர்யமுடைய மகன் ஈஸாவே நான் உம்மீதும், உம் தாயார் மீதும் அருளிய என் நிஃமத்தை (அருள் கொடையயை) நினைவு கூறும்; பரிசுத்த ஆன்மாவைக் கொண்டு உமக்கு உதவியளித்து நீர் தொட்டிலிலும் (குழந்தைப் பருவத்திலும்), வாலிபப் பருவத்திலும் மனிதர்களிடம் பேசச் செய்ததையும், இன்னும் நான் உமக்கு வேதத்தையும், ஞானத்தையும், தவ்ராத்தையும், இன்ஜீலையும் கற்றுக் கொடுத்ததையும் (நினைத்துப் பாரும்); இன்னும் நீர் களிமண்ணினால் என் உத்தரவைக் கொண்டு பறவை வடிவத்தைப் போலுண்டாக்கி அதில் நீர் ஊதியபோது அது என் உத்தரவைக் கொண்டு பறவையாகியதையும், இன்னும் என் உத்தரவைக் கொண்டு பிறவிக் குருடனையும், வெண் குஷ்டக்காரனையும் சுகப்படுத்தியதையும், (நினைத்துப் பாரும்); இறந்தோரை என் உத்தரவைக் கொண்டு (உயிர்ப்பித்துக் கல்லறைகளிலிருந்து) வெளிப்படுத்தியதையும் (நினைத்துப் பாரும்); அன்றியும் இஸ்ராயீலின் சந்ததியினரிடம் நீர் தெளிவான அத்தாட்சிகளைக் கொண்டு வந்தபோது, அவர்களில் நிராகரித்தவர்கள், “இது தெளிவான சூனியத்தைத் தவிர வேறு இல்லை” என்று கூறிய வேளை, அவர்கள் (உமக்குத் தீங்கு செய்யாதவாறு) நான் தடுத்து விட்டதையும் நினைத்துப் பாரும்.

    5:110

மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்

சூரா 5 ஸூரத்துல் மாயிதா (ஆகாரம் / உணவு மரவை)