சூரா 60 ஸூரத்துல் மும்தஹினா (பரிசோதித்தல்), அயாஹ் 12
-
يَا أَيُّهَا النَّبِيُّ إِذَا جَاءَكَ الْمُؤْمِنَاتُ يُبَايِعْنَكَ عَلَىٰ أَنْ لَا يُشْرِكْنَ بِاللَّهِ شَيْئًا وَلَا يَسْرِقْنَ وَلَا يَزْنِينَ وَلَا يَقْتُلْنَ أَوْلَادَهُنَّ وَلَا يَأْتِينَ بِبُهْتَانٍ يَفْتَرِينَهُ بَيْنَ أَيْدِيهِنَّ وَأَرْجُلِهِنَّ وَلَا يَعْصِينَكَ فِي مَعْرُوفٍ ۙ فَبَايِعْهُنَّ وَاسْتَغْفِرْ لَهُنَّ اللَّهَ ۖ إِنَّ اللَّهَ غَفُورٌ رَحِيمٌ
சொல் வாரியான மொழிபெயர்ப்பு
- يَٰٓأَيُّهَا ٱلنَّبِىُّ
- நபியே!
- إِذَا جَآءَكَ
- உம்மிடம் வந்தால்
- ٱلْمُؤْمِنَٰتُ
- முஃமினான பெண்கள்
- يُبَايِعْنَكَ
- உம்மிடம் அவர்கள் வாக்குறுதி கொடுப்பவர்களாக
- عَلَىٰٓ أَن لَّا يُشْرِكْنَ
- அவர்கள் இணைவைக்க மாட்டார்கள்
- بِٱللَّهِ
- அல்லாஹ்விற்கு
- شَيْـًٔا
- எதையும்
- وَلَا يَسْرِقْنَ
- இன்னும் திருட மாட்டார்கள்
- وَلَا يَزْنِينَ
- இன்னும் விபச்சாரம் செய்ய மாட்டார்கள்
- وَلَا يَقْتُلْنَ
- இன்னும் கொலை செய்ய மாட்டார்கள்
- أَوْلَٰدَهُنَّ
- தங்கள் குழந்தைகளை
- وَلَا يَأْتِينَ
- இன்னும் கொண்டுவர மாட்டார்கள்
- بِبُهْتَٰنٍ
- ஒரு பொய்யை
- يَفْتَرِينَهُۥ
- அதை தாங்கள் இட்டுக்கட்டுகின்றனர்
- بَيْنَ
- முன்னர்
- أَيْدِيهِنَّ
- தங்கள் கைகள்
- وَأَرْجُلِهِنَّ
- இன்னும் தங்கள் கால்களுக்கு
- وَلَا يَعْصِينَكَ
- இன்னும் உமக்கு அவர்கள் மாறுசெய்ய மாட்டார்கள்
- فِى مَعْرُوفٍ
- நல்ல காரியங்களில்
- فَبَايِعْهُنَّ
- அவர்களிடம் வாக்குறுதி வாங்குவீராக!
- وَٱسْتَغْفِرْ
- பாவமன்னிப்புக் கோருவீராக!
- لَهُنَّ
- அவர்களுக்காக
- ٱللَّهَ
- அல்லாஹ்விடம்
- إِنَّ ٱللَّهَ
- நிச்சயமாக அல்லாஹ்
- غَفُورٌ
- மகா மன்னிப்பாளன்
- رَّحِيمٌ
- மகா கருணையாளன்
நபியே! முஃமினான பெண்கள் உங்களிடம் வந்து; அல்லாஹ்வுக்கு எப்பொருளையும் இணைவைப்பதில்லையென்றும்; திருடுவதில்லை என்றும்; விபச்சாரம் செய்வதில்லை என்றும், தங்கள் பிள்ளைகளை கொல்வதில்லை என்றும், தங்கள் கைகளுக்கும், தங்கள் கால்களுக்கும் இடையில் எதனை அவர்கள் கற்பனை செய்கிறார்களோ, அத்தகைய அவதூறை இட்டுக்கட்டிக் கொண்டு வருவதில்லை என்றும், மேலும் நன்மையான (காரியத்)தில் உமக்கு மாறு செய்வதில்லையென்றும் அவர்கள் உம்மிடம் பைஅத்து - வாக்குறுதி செய்தால் அவர்களுடைய வாக்குறுதியை ஏற்றுக் கொள்வீராக; மேலும் அவர்களுக்காக அல்லாஹ்விடம் மன்னிப்புத் தேடுவீராக; நிச்சயமாக அல்லாஹ் மிகவும் மன்னிப்பவன்; மிக்க கிருபையுடையவன்.
60:12
மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்