சூரா 60 ஸூரத்துல் மும்தஹினா (பரிசோதித்தல்), அயாஹ் 4
-
قَدْ كَانَتْ لَكُمْ أُسْوَةٌ حَسَنَةٌ فِي إِبْرَاهِيمَ وَالَّذِينَ مَعَهُ إِذْ قَالُوا لِقَوْمِهِمْ إِنَّا بُرَآءُ مِنْكُمْ وَمِمَّا تَعْبُدُونَ مِنْ دُونِ اللَّهِ كَفَرْنَا بِكُمْ وَبَدَا بَيْنَنَا وَبَيْنَكُمُ الْعَدَاوَةُ وَالْبَغْضَاءُ أَبَدًا حَتَّىٰ تُؤْمِنُوا بِاللَّهِ وَحْدَهُ إِلَّا قَوْلَ إِبْرَاهِيمَ لِأَبِيهِ لَأَسْتَغْفِرَنَّ لَكَ وَمَا أَمْلِكُ لَكَ مِنَ اللَّهِ مِنْ شَيْءٍ ۖ رَبَّنَا عَلَيْكَ تَوَكَّلْنَا وَإِلَيْكَ أَنَبْنَا وَإِلَيْكَ الْمَصِيرُ
சொல் வாரியான மொழிபெயர்ப்பு
- قَدْ
- திட்டமாக
- كَانَتْ
- இருக்கிறது
- لَكُمْ
- உங்களுக்கு
- أُسْوَةٌ
- முன்மாதிரி
- حَسَنَةٌ
- அழகிய
- فِىٓ إِبْرَٰهِيمَ
- இப்ராஹீமிடத்திலும்
- وَٱلَّذِينَ
- எவர்கள்
- مَعَهُۥٓ
- அவர்களுடன்
- إِذْ قَالُوا۟
- அவர்கள் கூறிய சமயத்தை
- لِقَوْمِهِمْ
- தங்கள் மக்களுக்கு
- إِنَّا
- நிச்சயமாக நாங்கள்
- بُرَءَٰٓؤُا۟
- விலகியவர்கள்
- مِنكُمْ
- உங்களை விட்டும்
- وَمِمَّا تَعْبُدُونَ
- நீங்கள் வணங்குகின்றவற்றை விட்டும்
- مِن دُونِ ٱللَّهِ
- அல்லாஹ்வையன்றி
- كَفَرْنَا
- நாங்கள் மறுத்துவிட்டோம்
- بِكُمْ
- உங்களை
- وَبَدَا
- வெளிப்பட்டுவிட்டன
- بَيْنَنَا
- எங்களுக்கு மத்தியிலும்
- وَبَيْنَكُمُ
- உங்களுக்கு மத்தியிலும்
- ٱلْعَدَٰوَةُ
- பகைமையும்
- وَٱلْبَغْضَآءُ
- குரோதமும்
- أَبَدًا
- எப்போதும்
- حَتَّىٰ تُؤْمِنُوا۟
- நீங்கள் நம்பிக்கை கொள்கின்ற வரை
- بِٱللَّهِ
- அல்லாஹ்
- وَحْدَهُۥٓ
- ஒருவனை மட்டும்
- إِلَّا
- எனினும்
- قَوْلَ
- கூறியதை
- إِبْرَٰهِيمَ
- இப்ராஹீம்
- لِأَبِيهِ
- தனது தந்தைக்கு
- لَأَسْتَغْفِرَنَّ
- நிச்சயமாக நான் பாவமன்னிப்பு கேட்பேன்
- لَكَ
- உமக்காக
- وَمَآ أَمْلِكُ
- நான் உரிமை பெறமாட்டேன்
- لَكَ
- உமக்கு
- مِنَ ٱللَّهِ
- அல்லாஹ்விடம்
- مِن شَىْءٍ
- எதையும்
- رَّبَّنَا
- எங்கள் இறைவா!
- عَلَيْكَ
- உம்மீது
- تَوَكَّلْنَا
- நாங்கள் நம்பிக்கை வைத்தோம்
- وَإِلَيْكَ
- உன் பக்கமே
- أَنَبْنَا
- பணிவுடன் திரும்பிவிட்டோம்
- وَإِلَيْكَ ٱلْمَصِيرُ
- உன் பக்கமே மீளுமிடம்
இப்ராஹீமிடமும், அவரோடு இருந்தவர்களிடமும், நிச்சயமாக உங்களுக்கு ஓர் அழகிய முன்மாதிரி இருக்கிறது; தம் சமூகத்தாரிடம் அவர்கள், “உங்களை விட்டும், இன்னும் அல்லாஹ்வையன்றி நீங்கள் வணங்குகிறவற்றைவிட்டும், நாங்கள் நிச்சயமாக நீங்கிக் கொண்டோம்; உங்களையும் நாங்கள் நிராகரித்து விட்டோம்; அன்றியும் ஏகனான அல்லாஹ் ஒருவன் மீதே நீங்கள் நம்பிக்கை கொள்ளும் வரை, நமக்கும் உங்களுக்குமிடையில் பகைமையும், வெறுப்பும் நிரந்தரமாக ஏற்பட்டு விட்டன” என்றார்கள். ஆனால் இப்ராஹீம் தம் தந்தையை நோக்கி| “அல்லாஹ்விடத்தில் உங்களுக்காக (அவனுடைய வேதனையிலிருந்து) எதையும் தடுக்க எனக்குச் சக்தி கிடையாது; ஆயினும் உங்களுக்காக நான் அவனிடத்தில் நிச்சயமாக மன்னிப்புத் தேடுவேன்” எனக் கூறியதைத் தவிர (மற்ற எல்லாவற்றிலும் முன் மாதிரியிருக்கிறது, அன்றியும், அவர் கூறினார்)| “எங்கள் இறைவா! உன்னையே முற்றிலும் சார்ந்திருக்கிறோம்; (எதற்கும்) நாங்கள் உன்னையே நோக்குகிறோம்; மேலும், உன்னிடமே எங்கள் மீளுதலும் இருக்கிறது,”
60:4
மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்