சூரா 60 ஸூரத்துல் மும்தஹினா (பரிசோதித்தல்), அயாஹ் 9
-
إِنَّمَا يَنْهَاكُمُ اللَّهُ عَنِ الَّذِينَ قَاتَلُوكُمْ فِي الدِّينِ وَأَخْرَجُوكُمْ مِنْ دِيَارِكُمْ وَظَاهَرُوا عَلَىٰ إِخْرَاجِكُمْ أَنْ تَوَلَّوْهُمْ ۚ وَمَنْ يَتَوَلَّهُمْ فَأُولَٰئِكَ هُمُ الظَّالِمُونَ
சொல் வாரியான மொழிபெயர்ப்பு
- إِنَّمَا يَنْهَىٰكُمُ
- நிச்சயமாக உங்களை தடுப்பதெல்லாம்
- ٱللَّهُ
- அல்லாஹ்
- عَنِ ٱلَّذِينَ
- எவர்களை விட்டும்
- قَٰتَلُوكُمْ فِى ٱلدِّينِ
- உங்களிடம் போர் செய்தார்களோ/ மார்க்கத்தில்
- وَأَخْرَجُوكُم
- இன்னும் உங்களை வெளியேற்றினார்களோ
- مِّن دِيَٰرِكُمْ
- உங்கள் இல்லங்களில் இருந்து
- وَظَٰهَرُوا۟
- இன்னும் உதவினார்களோ
- عَلَىٰٓ إِخْرَاجِكُمْ
- உங்களை வெளியேற்றுவதற்கு
- أَن تَوَلَّوْهُمْ
- அவர்களை நீங்கள் நேசிப்பதை
- وَمَن
- யார்
- يَتَوَلَّهُمْ
- அவர்களை நேசிக்கின்றார்களோ
- فَأُو۟لَٰٓئِكَ هُمُ
- அவர்கள்தான்
- ٱلظَّٰلِمُونَ
- அநியாயக்காரர்கள்
நிச்சயமாக அல்லாஹ் உங்களை விலக்குவதெல்லாம் மார்க்க விஷயத்தில் உங்களிடம் போர் செய்து உங்களை உங்கள் இல்லங்களை விட்டும் வெளியேற்றி, நீங்கள் வெளியேற்றப்படுவதற்கு உதவியும் செய்தார்களே, அத்தகையவர்களை நீங்கள் நேசர்களாக ஆக்கிக் கொள்வதைத் தான் - எனவே, எவர்கள் அவர்களை நேசர்களாக்கிக் கொள்கிறார்களோ அவர்கள்தாம் அநியாயம் செய்பவர்கள்.
60:9
மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்