சூரா 63 ஸூரத்துல் முனாஃபிஃகூன் (நயவஞ்சகர்கள்), அயாஹ் 7
-
هُمُ الَّذِينَ يَقُولُونَ لَا تُنْفِقُوا عَلَىٰ مَنْ عِنْدَ رَسُولِ اللَّهِ حَتَّىٰ يَنْفَضُّوا ۗ وَلِلَّهِ خَزَائِنُ السَّمَاوَاتِ وَالْأَرْضِ وَلَٰكِنَّ الْمُنَافِقِينَ لَا يَفْقَهُونَ
சொல் வாரியான மொழிபெயர்ப்பு
- هُمُ ٱلَّذِينَ
- இவர்கள்தான்
- يَقُولُونَ
- கூறுகிறார்கள்
- لَا تُنفِقُوا۟
- தர்மம் செய்யாதீர்கள்
- عَلَىٰ
- மீது
- مَنْ عِندَ رَسُولِ ٱللَّهِ
- அல்லாஹ்வின் தூதரிடம் இருப்பவர்கள்
- حَتَّىٰ
- இறுதியாக
- يَنفَضُّوا۟
- பிரிந்து விடுவார்கள்
- وَلِلَّهِ
- அல்லாஹ்விற்கே
- خَزَآئِنُ
- பொக்கிஷங்கள்
- ٱلسَّمَٰوَٰتِ
- வானங்கள்
- وَٱلْأَرْضِ
- இன்னும் பூமியின்
- وَلَٰكِنَّ
- என்றாலும்
- ٱلْمُنَٰفِقِينَ
- நயவஞ்சகர்கள்
- لَا يَفْقَهُونَ
- புரிய மாட்டார்கள்
இவர்கள் தாம், அல்லாஹ்வின் தூதருடன் இருப்பவர்கள்; (அவரை விட்டுப்) பிரிந்து செல்லும் வரை அவர்களுக்காக நீங்கள் செலவு செய்யாதீர்கள்” என்று கூறியவர்கள்; வானங்களிலும், பூமியிலுமுள்ள பொக்கிஷங்கள் அல்லாஹ்வுக்கே சொந்தமானவை; ஆனால் இந்நயவஞ்சகர்கள் (அதை) உணர்ந்து கொள்ளமாட்டார்கள்.
63:7
மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்