சூரா 83 ஸூரத்துல் முதஃப்ஃபிஃபீன் (அளவு நிறுவையில் மோசம் செய்தல்), அயாஹ் 1 – 6

  1. وَيْلٌ لِلْمُطَفِّفِينَ

    அளவு (எடையில்) மோசம் செய்பவர்களுக்கு கேடுதான்.

    83:1
  2. الَّذِينَ إِذَا اكْتَالُوا عَلَى النَّاسِ يَسْتَوْفُونَ

    அவர்கள் மனிதர்களிடமிருந்து அளந்து வாங்கும் போது நிறைவாக அளந்து வாங்குகின்றனர்.

    83:2
  3. وَإِذَا كَالُوهُمْ أَوْ وَزَنُوهُمْ يُخْسِرُونَ

    ஆனால், அவர்கள் அளந்தோ, நிறுத்தோ கொடுக்கும்போது குறை(த்து நஷ்டமுண்டா)க்குகிறார்கள்.

    83:3
  4. أَلَا يَظُنُّ أُولَٰئِكَ أَنَّهُمْ مَبْعُوثُونَ

    நிச்சயமாக அவர்கள் எழுப்பப்படுபவர்களென்பதை அவர்கள் கருத்தில் கொள்ளவில்லையா?

    83:4
  5. لِيَوْمٍ عَظِيمٍ

    மகத்தான ஒரு நாளுக்காக,

    83:5
  6. يَوْمَ يَقُومُ النَّاسُ لِرَبِّ الْعَالَمِينَ

    அகிலத்தாரின் இறைவன் முன் மனிதர்கள் நிற்கும் நாள்-

    83:6

மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்