சூரா 14 ஸூரத்து இப்ராஹீம், அயாஹ் 35
-
وَإِذْ قَالَ إِبْرَاهِيمُ رَبِّ اجْعَلْ هَٰذَا الْبَلَدَ آمِنًا وَاجْنُبْنِي وَبَنِيَّ أَنْ نَعْبُدَ الْأَصْنَامَ
சொல் வாரியான மொழிபெயர்ப்பு
- وَإِذْ قَالَ
- கூறியபோது
- إِبْرَٰهِيمُ
- இப்றாஹீம்
- رَبِّ
- என் இறைவா
- ٱجْعَلْ
- ஆக்கு
- هَٰذَا ٱلْبَلَدَ
- இந்த ஊரை
- ءَامِنًا
- அபயமளிப்பதாக
- وَٱجْنُبْنِى
- இன்னும் தூரமாக்கு/என்னை
- وَبَنِىَّ
- இன்னும் என் பிள்ளைகளை
- أَن نَّعْبُدَ
- நாங்கள் வணங்குவதை
- ٱلْأَصْنَامَ
- சிலைகளை
நினைவு கூறுங்கள்! “என் இறைவனே! இந்த ஊரை (மக்காவை சமாதானமுள்ளதாய்) அச்சந்தீர்ந்ததாய் ஆக்குவாயாக! என்னையும், என் மக்களையும் சிலைகளை நாங்கள் வணங்குவதிலிருந்து காப்பாற்றுவாயாக!” என்று இப்ராஹீம் கூறியதை (நபியே! நீர் அவர்களுக்கு நினைவு கூறும்).
14:35
மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்