சூரா 17 பனீ இஸ்ராயீல் (இஸ்ராயீலின் சந்ததிகள்), அயாஹ் 7
-
إِنْ أَحْسَنْتُمْ أَحْسَنْتُمْ لِأَنْفُسِكُمْ ۖ وَإِنْ أَسَأْتُمْ فَلَهَا ۚ فَإِذَا جَاءَ وَعْدُ الْآخِرَةِ لِيَسُوءُوا وُجُوهَكُمْ وَلِيَدْخُلُوا الْمَسْجِدَ كَمَا دَخَلُوهُ أَوَّلَ مَرَّةٍ وَلِيُتَبِّرُوا مَا عَلَوْا تَتْبِيرًا
சொல் வாரியான மொழிபெயர்ப்பு
- إِنْ أَحْسَنتُمْ
- நீங்கள் நன்மை செய்தால்
- أَحْسَنتُمْ
- நன்மை செய்தீர்கள்
- لِأَنفُسِكُمْ
- உங்கள் ஆன்மாக்களுக்குத்தான்
- وَإِنْ أَسَأْتُمْ
- நீங்கள் தீமை செய்தால்
- فَلَهَا
- அதுவும் அவற்றுக்கே
- فَإِذَا جَآءَ
- வந்த போது
- وَعْدُ ٱلْءَاخِرَةِ
- முறை/மறு
- لِيَسُۥٓـُٔوا۟
- அவர்கள் கெடுப்பதற்கு
- وُجُوهَكُمْ
- உங்கள் முகங்களை
- وَلِيَدْخُلُوا۟
- இன்னும் அவர்கள் நுழைவதற்கு
- ٱلْمَسْجِدَ
- மஸ்ஜிதில்
- كَمَا دَخَلُوهُ
- அவர்கள் நுழைந்தது போன்று/அதில்
- أَوَّلَ
- முதல்
- مَرَّةٍ
- முறை
- وَلِيُتَبِّرُوا۟
- இன்னும் அவர்கள் அழிப்பதற்காக
- مَا عَلَوْا۟
- எவற்றை/மிகைத்தனர்
- تَتْبِيرًا
- அழித்தல்
நீங்கள் நன்மை செய்தால் உங்களுக்கே நன்மை செய்து கொள்கிறீர்கள். நீங்கள் தீமை செய்தால் அதுவும் உங்களுக்கே(தீமை)யாகும், உங்கள் முகங்களை சோகம் அடையச் செய்வதற்காகவும் பைத்துல் முகத்தஸில் முதல் முறையாக அவர்கள் நுழைந்தது போல் நுழைந்து அவர்கள் தாங்கள் கைப்பற்றிக் கொண்டவைகளை முற்றாக அழித்து விடுவதற்காகவும் (எதிரிகளை) இரண்டாம் வாக்குறுதி வரும்பொழுது (நாம் அனுப்பினோம்).
17:7
மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்