சூரா 26 ஸூரத்துஷ்ஷுஃரா (கவிஞர்கள்), அயாஹ் 147 – 155
-
فِي جَنَّاتٍ وَعُيُونٍ
“தோட்டங்களிலும், நீரூற்றுக்களிலும்-
26:147 -
وَزُرُوعٍ وَنَخْلٍ طَلْعُهَا هَضِيمٌ
“வேளாண்மைகளிலும், மிருதுவான குலைகளையுடைய பேரீச்ச மரங்களிலும்,
26:148 -
وَتَنْحِتُونَ مِنَ الْجِبَالِ بُيُوتًا فَارِهِينَ
“மேலும், ஆணவம் கொண்டவர்களாக நீங்கள் மலைகளைக் குடைந்து வீடுகளை அமைத்துக் கொள்கிறீர்களே! (இவற்றிலெல்லாம் அச்சந்தீர்ந்தவர்களாக விட்டுவைக்கப்படுவீர்களா?)
26:149 -
فَاتَّقُوا اللَّهَ وَأَطِيعُونِ
“ஆகவே, நீங்கள் அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள்; எனக்கு கீழ்படிந்து நடங்கள்.
26:150 -
وَلَا تُطِيعُوا أَمْرَ الْمُسْرِفِينَ
“இன்னும், நீங்கள், வரம்பு மீறியோரின் கட்டளைக்கு வழிப்படாதீர்கள்.
26:151 -
الَّذِينَ يُفْسِدُونَ فِي الْأَرْضِ وَلَا يُصْلِحُونَ
“அவர்கள் பூமியில் குழப்பம் உண்டாக்குவார்கள்; நன்மை செய்ய மாட்டார்கள்” என்றுங் கூறினார்).
26:152 -
قَالُوا إِنَّمَا أَنْتَ مِنَ الْمُسَحَّرِينَ
அதற்கு அவர்கள்| “நிச்சயமாக நீர் மிகுதம் சூனியம் செய்யப்பட்டவராக இருக்கின்றீர்” என்று சொன்னார்கள்.
26:153 -
مَا أَنْتَ إِلَّا بَشَرٌ مِثْلُنَا فَأْتِ بِآيَةٍ إِنْ كُنْتَ مِنَ الصَّادِقِينَ
“நீரும் எங்களைப் போன்ற ஒரு மனிதரேயன்றி (வேறு) இல்லை; எனவே, நீர் உண்மை சொல்பவராக இருந்தால் ஓர் அத்தாட்சியைக் கொண்டு வாரும்” (என்றனர்).
26:154 -
قَالَ هَٰذِهِ نَاقَةٌ لَهَا شِرْبٌ وَلَكُمْ شِرْبُ يَوْمٍ مَعْلُومٍ
அவர் சொன்னார்| “இதோ (அத்தாட்சியாக) ஒரு பெண் ஒட்டகம்! (கிணற்றிலிருந்து) அதற்கு (ஒரு நாள்) தண்ணீர் குடிப்புண்டு; உங்களுக்கும் குறிப்படப்பட்ட ஒரு நாளில் தண்ணீர் அருந்தும் முறை வரும்.”
26:155
மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்