சூரா 2 ஸூரத்துல் பகரா (பசு மாடு), அயாஹ் 71

  1. قَالَ إِنَّهُ يَقُولُ إِنَّهَا بَقَرَةٌ لَا ذَلُولٌ تُثِيرُ الْأَرْضَ وَلَا تَسْقِي الْحَرْثَ مُسَلَّمَةٌ لَا شِيَةَ فِيهَا ۚ قَالُوا الْآنَ جِئْتَ بِالْحَقِّ ۚ فَذَبَحُوهَا وَمَا كَادُوا يَفْعَلُونَ

    சொல் வாரியான மொழிபெயர்ப்பு

    قَالَ
    கூறினார்
    إِنَّهُۥ
    நிச்சயமாக அவன்
    يَقُولُ
    கூறுகிறான்
    إِنَّهَا
    நிச்சயமாக அது
    بَقَرَةٌ
    பசு
    لَّا ذَلُولٌ
    பயன்படுத்தப்படாதது
    تُثِيرُ
    உழுவதற்கு
    ٱلْأَرْضَ
    நிலத்தை
    وَلَا تَسْقِى
    நீர் இறைக்காது
    ٱلْحَرْثَ
    விளை நிலத்திற்கு
    مُسَلَّمَةٌ
    குறையற்றது
    لَّا
    அறவே இல்லை
    شِيَةَ فِيهَا
    வடு/அதில்
    قَالُوا۟
    கூறினார்கள்
    ٱلْـَٰٔنَ جِئْتَ
    இப்போது/வந்தீர்
    بِٱلْحَقِّ
    உண்மையைக் கொண்டு
    فَذَبَحُوهَا
    அறுத்தார்கள்/அதை
    وَمَا كَادُوا۟
    அவர்கள் நெருங்கவில்லை
    يَفْعَلُونَ
    செய்வார்கள்

    அவர் (மூஸா) “நிச்சயமாக அப்பசுமாடு நிலத்தில் உழவடித்தோ, நிலத்திற்கு நீர் பாய்ச்சவோ பயன்படுத்தப்படாதது; ஆரோக்கியமானது; எவ்விதத்திலும் வடுவில்லாதது என்று இறைவன் கூறுகிறான்” எனக் கூறினார். “இப்பொழுதுதான் நீர் சரியான விபரத்தைக் கொண்டு வந்தீர்” என்று சொல்லி அவர்கள் செய்ய இயலாத நிலையில் அப்பசு மாட்டை அறுத்தார்கள்.

    2:71

மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்

சூரா 2 ஸூரத்துல் பகரா (பசு மாடு)