சூரா 32 ஸூரத்துஸ் ஸஜ்தா (சிரம் பணிதல்), அயாஹ் 3
-
أَمْ يَقُولُونَ افْتَرَاهُ ۚ بَلْ هُوَ الْحَقُّ مِنْ رَبِّكَ لِتُنْذِرَ قَوْمًا مَا أَتَاهُمْ مِنْ نَذِيرٍ مِنْ قَبْلِكَ لَعَلَّهُمْ يَهْتَدُونَ
சொல் வாரியான மொழிபெயர்ப்பு
- أَمْ يَقُولُونَ
- அல்லது கூறுகிறார்களா?
- ٱفْتَرَىٰهُ
- இதை அவர் இட்டுக் கட்டினார் என்று
- بَلْ
- மாறாக
- هُوَ
- இதுதான்
- ٱلْحَقُّ
- உண்மையா(ன வேதமா)கும்
- مِن رَّبِّكَ
- உமது இறைவனிடமிருந்து
- لِتُنذِرَ
- நீர் எச்சரிப்பதற்காக
- قَوْمًا
- ஒரு சமுதாயத்தை
- مَّآ أَتَىٰهُم
- அவர்களிடம் வராத
- مِّن نَّذِيرٍ
- எச்சரிப்பவர் எவரும்
- مِّن قَبْلِكَ
- இதற்கு முன்னர்
- لَعَلَّهُمْ يَهْتَدُونَ
- அவர்கள் நேர்வழி பெறுவதற்காக
ஆயினும் அவர்கள் “இவர் இதை இட்டுக்கட்டிக் (கற்பனை செய்து) கொண்டார்” என்று (உம்மைப் பற்றிக்) கூறுகிறார்களா? அவ்வாறல்ல! எவர்களுக்கு உமக்கு முன் அச்சமூட்டி எச்சரிப்பவர் வந்ததில்லையோ, அந்த சமூகத்தாருக்கு, அவர்கள் நேர்வழியில் செல்லும் பொருட்டு நீர் அச்சமூட்டி எச்சரிக்கை செய்வதற்காக உம்முடைய இறைவனிடமிருந்து வந்துள்ள உண்மை(வேதமாகும்).
32:3
மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்