சூரா 53 ஸூரத்துந்நஜ்ம் (நட்சத்திரம்), அயாஹ் 5 – 14
-
عَلَّمَهُ شَدِيدُ الْقُوَىٰ
மிக்க வல்லமையுடைவர் (ஜிப்ரீல்) அவருக்குக் கற்றுக் கொடுத்தார்.
53:5 -
ذُو مِرَّةٍ فَاسْتَوَىٰ
(அவர்) மிக்க உறுதியானவர்; பின்னர் அவர் (தம் இயற்கை உருவில்) நம் தூதர் முன் தோன்றினார்.
53:6 -
وَهُوَ بِالْأُفُقِ الْأَعْلَىٰ
அவர் உன்னதமான அடி வானத்தில் இருக்கும் நிலையில்-
53:7 -
ثُمَّ دَنَا فَتَدَلَّىٰ
பின்னர், அவர் நெருங்கி, இன்னும், அருகே வந்தார்.
53:8 -
فَكَانَ قَابَ قَوْسَيْنِ أَوْ أَدْنَىٰ
(வளைந்த) வில்லின் இரு முனைகளைப் போல், அல்லது அதினும் நெருக்கமாக வந்தார்.
53:9 -
فَأَوْحَىٰ إِلَىٰ عَبْدِهِ مَا أَوْحَىٰ
அப்பால், (அல்லாஹ்) அவருக்கு (வஹீ) அறிவித்ததையெல்லாம் அவர், அவனுடைய அடியாருக்கு (வஹீ) அறிவித்தார்.
53:10 -
مَا كَذَبَ الْفُؤَادُ مَا رَأَىٰ
(நபியுடைய) இதயம் அவர் கண்டதைப் பற்றி, பொய்யுரைக்க வில்லை.
53:11 -
أَفَتُمَارُونَهُ عَلَىٰ مَا يَرَىٰ
ஆயினும், அவர் கண்டவற்றின் மீது அவருடன் நீங்கள் தர்க்கிக்கின்றீர்களா?
53:12 -
وَلَقَدْ رَآهُ نَزْلَةً أُخْرَىٰ
அன்றியும், நிச்சயமாக அவர் மற்றொரு முறையும் (ஜிப்ரீல்) இறங்கக் கண்டார்.
53:13 -
عِنْدَ سِدْرَةِ الْمُنْتَهَىٰ
ஸித்ரத்துல் முன்தஹா என்னும் (வானெல்லையிலுள்ள) இலந்தை மரத்தருகே.
53:14
மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்