சூரா 65 ஸூரத்துத் தலாஃக் (விவாகரத்து), அயாஹ் 6
-
أَسْكِنُوهُنَّ مِنْ حَيْثُ سَكَنْتُمْ مِنْ وُجْدِكُمْ وَلَا تُضَارُّوهُنَّ لِتُضَيِّقُوا عَلَيْهِنَّ ۚ وَإِنْ كُنَّ أُولَاتِ حَمْلٍ فَأَنْفِقُوا عَلَيْهِنَّ حَتَّىٰ يَضَعْنَ حَمْلَهُنَّ ۚ فَإِنْ أَرْضَعْنَ لَكُمْ فَآتُوهُنَّ أُجُورَهُنَّ ۖ وَأْتَمِرُوا بَيْنَكُمْ بِمَعْرُوفٍ ۖ وَإِنْ تَعَاسَرْتُمْ فَسَتُرْضِعُ لَهُ أُخْرَىٰ
சொல் வாரியான மொழிபெயர்ப்பு
- أَسْكِنُوهُنَّ
- அவர்களை தங்க வையுங்கள்
- مِنْ حَيْثُ سَكَنتُم
- நீங்கள் தங்கும் இடத்தில்
- مِّن وُجْدِكُمْ
- உங்கள் வசதிக்கேற்ப
- وَلَا
- தீங்கு செய்யாதீர்கள்
- تُضَآرُّوهُنَّ
- தீங்கு செய்யாதீர்கள் அவர்களுக்கு
- لِتُضَيِّقُوا۟
- நீங்கள் நெருக்கடியை ஏற்படுத்துவதற்காக
- عَلَيْهِنَّ
- அவர்கள் மீது
- وَإِن كُنَّ
- அவர்கள் இருந்தால்
- أُو۟لَٰتِ حَمْلٍ
- கர்ப்பம் உள்ள பெண்களாக
- فَأَنفِقُوا۟
- செலவு செய்யுங்கள்
- عَلَيْهِنَّ
- அவர்களுக்கு
- حَتَّىٰ
- வரை
- يَضَعْنَ
- அவர்கள் பெற்றெடுக்கின்ற
- حَمْلَهُنَّ
- தங்கள் கர்ப்பத்தை
- فَإِنْ أَرْضَعْنَ
- அவர்கள் பாலூட்டினால்
- لَكُمْ
- உங்களுக்காக
- فَـَٔاتُوهُنَّ
- அவர்களுக்கு கொடுங்கள்
- أُجُورَهُنَّ
- அவர்களின் ஊதியங்களை
- وَأْتَمِرُوا۟
- ஒருவருக்கொருவர் ஏற்றுக் கொள்ளுங்கள்
- بَيْنَكُم
- உங்களுக்கு மத்தியில்
- بِمَعْرُوفٍ
- நல்லதை
- وَإِن تَعَاسَرْتُمْ
- நீங்கள் சிரமமாகக் கருதினால்
- فَسَتُرْضِعُ
- பாலூட்டுவாள்
- لَهُۥٓ
- அவருக்காக
- أُخْرَىٰ
- வேறு ஒரு பெண்
உங்கள் சக்திக்கேற்ப நீங்கள் குடியிருக்கும் இடத்தில் (“இத்தா”விலிருக்கும்) பெண்களை நீங்கள் குடியிருக்கச் செய்யுங்கள்; அவர்களுக்கு நெருக்கடியுண்டாக்குவதற்காக அவர்களுக்குத் தொல்லை கொடுக்காதீர்கள், அவர்கள் கர்ப்பமுடையவர்களாக இருந்தால், அவர்கள் பிரசவிக்கும் வரை, அவர்களுக்காகச் செலவு செய்யுங்கள்; அன்றியும் அவர்கள் உங்களுக்காக (உங்கள் குழந்தைகளுக்குப்) பாலூட்டினால், அதற்கான கூலியை அவர்களுக்குக் கொடுத்து விடுங்கள். (இதைப் பற்றி) உங்களுக்குள் நேர்மையாகப் பேசி முடிவு செய்து கொள்ளுங்கள்; ஆனால் (இது பற்றி) உங்களுக்குள் சிரமம் ஏற்பட்டால் (அக்குழந்தைக்கு) மற்றொருத்தி பால் கொடுக்கலாம்.
65:6
மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்