சூரா 7 ஸூரத்துல் அஃராஃப் (சிகரங்கள்), அயாஹ் 142
-
وَوَاعَدْنَا مُوسَىٰ ثَلَاثِينَ لَيْلَةً وَأَتْمَمْنَاهَا بِعَشْرٍ فَتَمَّ مِيقَاتُ رَبِّهِ أَرْبَعِينَ لَيْلَةً ۚ وَقَالَ مُوسَىٰ لِأَخِيهِ هَارُونَ اخْلُفْنِي فِي قَوْمِي وَأَصْلِحْ وَلَا تَتَّبِعْ سَبِيلَ الْمُفْسِدِينَ
சொல் வாரியான மொழிபெயர்ப்பு
- وَوَٰعَدْنَا
- வாக்களித்தோம்
- مُوسَىٰ
- மூஸாவுக்கு
- ثَلَٰثِينَ
- முப்பது
- لَيْلَةً
- இரவு(களை)
- وَأَتْمَمْنَٰهَا
- இன்னும் முழுமைப்படுத்தினோம்/அதை
- بِعَشْرٍ
- பத்து இரவுகளைக் கொண்டு
- فَتَمَّ
- ஆகவே முழுமையடைந்தது
- مِيقَٰتُ
- குறிப்பிட்ட காலம்
- رَبِّهِۦٓ
- அவருடைய இறைவனின்
- أَرْبَعِينَ
- நாற்பது
- لَيْلَةً
- இரவு(களாக)
- وَقَالَ مُوسَىٰ
- கூறினார்/மூஸா
- لِأَخِيهِ
- தன் சகோதரருக்கு
- هَٰرُونَ
- ஹாரூன்
- ٱخْلُفْنِى
- நீர் எனக்கு பிரதிநிதியாக இரு
- فِى قَوْمِى
- என் சமுதாயத்தில்
- وَأَصْلِحْ
- இன்னும் சீர்திருத்து
- وَلَا تَتَّبِعْ
- பின்பற்றாதே
- سَبِيلَ
- பாதையை
- ٱلْمُفْسِدِينَ
- விஷமிகளுடைய
மூஸாவுக்கு நாம் முப்பது இரவுகளை வாக்களித்தோம்; பின்னர், மேலும் அதை பத்து (இரவுகளைக்) கொண்டு பூர்த்தியாக்கினோம்; இவ்வாறாக அவருடைய இறைவன் (வாக்களித்த) காலக்கெடு நாற்பது இரவுகளாக முழுமை பெற்றது. அப்போது மூஸா தம் சகோதரர் ஹாரூனை நோக்கி, “நீங்கள் என்னுடைய சமூகத்தாருக்கு, என் கலீஃபாவாக இருந்து, (அவர்களைத்) திருத்துவீர்களாக! குழப்பமுண்டாக்குபவரின் வழியைப் பின் பற்றாதிருப்பீர்களாக!” என்று கூறினார்.
7:142
மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்