சூரா 9 ஸூரத்துத் தவ்பா (மனவருந்தி மன்னிப்பு தேடுதல்), அயாஹ் 38
-
يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا مَا لَكُمْ إِذَا قِيلَ لَكُمُ انْفِرُوا فِي سَبِيلِ اللَّهِ اثَّاقَلْتُمْ إِلَى الْأَرْضِ ۚ أَرَضِيتُمْ بِالْحَيَاةِ الدُّنْيَا مِنَ الْآخِرَةِ ۚ فَمَا مَتَاعُ الْحَيَاةِ الدُّنْيَا فِي الْآخِرَةِ إِلَّا قَلِيلٌ
சொல் வாரியான மொழிபெயர்ப்பு
- يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُوا۟
- நம்பிக்கையாளர்களே
- مَا
- என்ன?
- لَكُمْ
- உங்களுக்கு
- إِذَا قِيلَ
- கூறப்பட்டால்
- لَكُمُ
- உங்களுக்கு
- ٱنفِرُوا۟
- புறப்படுங்கள்
- فِى سَبِيلِ
- பாதையில்
- ٱللَّهِ
- அல்லாஹ்வின்
- ٱثَّاقَلْتُمْ
- சாய்ந்து விட்டீர்கள்
- إِلَى
- பக்கம்
- ٱلْأَرْضِ
- பூமி, உலகம்
- أَرَضِيتُم
- திருப்தியடைந்தீர்களா
- بِٱلْحَيَوٰةِ
- வாழ்க்கையைக் கொண்டு
- ٱلدُّنْيَا
- உலக
- مِنَ
- விட
- ٱلْءَاخِرَةِ
- மறுமை
- فَمَا
- இல்லை
- مَتَٰعُ
- இன்பம்
- ٱلْحَيَوٰةِ
- வாழ்க்கை
- ٱلدُّنْيَا
- உலகம்
- فِى ٱلْءَاخِرَةِ
- மறுமையில்
- إِلَّا
- தவிர
- قَلِيلٌ
- அற்பமானதே
ஈமான் கொண்டவர்களே! அல்லாஹ்வின் பாதையில் (போருக்குப் புறப்பட்டுச்) செல்லுங்கள் என்று உங்களுக்குக் கூறப்பட்டால், நீங்கள் பூமியின் பக்கம் சாய்ந்து விடுகிறீர்களே உங்களுக்கு என்ன நேர்ந்து விட்டது? மறுமையைவிட இவ்வுலக வாழ்க்கையைக் கொண்டே நீங்கள் திருப்தியடைந்து விட்டீர்களா? மறுமை(யின் வாழ்க்கை)க்கு முன்பு இவ்வுலக வாழ்க்கையின் இன்பம் மிகவும் அற்பமானது.
9:38
மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்