சூரா 9 ஸூரத்துத் தவ்பா (மனவருந்தி மன்னிப்பு தேடுதல்), அயாஹ் 70
-
أَلَمْ يَأْتِهِمْ نَبَأُ الَّذِينَ مِنْ قَبْلِهِمْ قَوْمِ نُوحٍ وَعَادٍ وَثَمُودَ وَقَوْمِ إِبْرَاهِيمَ وَأَصْحَابِ مَدْيَنَ وَالْمُؤْتَفِكَاتِ ۚ أَتَتْهُمْ رُسُلُهُمْ بِالْبَيِّنَاتِ ۖ فَمَا كَانَ اللَّهُ لِيَظْلِمَهُمْ وَلَٰكِنْ كَانُوا أَنْفُسَهُمْ يَظْلِمُونَ
சொல் வாரியான மொழிபெயர்ப்பு
- أَلَمْ يَأْتِهِمْ
- வரவில்லையா/அவர்களுக்கு
- نَبَأُ
- செய்தி, சரித்திரம்
- ٱلَّذِينَ
- எவர்கள்
- مِن قَبْلِهِمْ
- இவர்களுக்கு முன்னர்
- قَوْمِ
- சமுதாயம்
- نُوحٍ
- நூஹூடைய
- وَعَادٍ
- இன்னும் ஆது
- وَثَمُودَ
- இன்னும் ஸமூது
- وَقَوْمِ
- இன்னும் சமுதாயம்
- إِبْرَٰهِيمَ
- இப்றாஹீம்
- وَأَصْحَٰبِ مَدْيَنَ
- இன்னும் மத்யன் வாசிகள்
- وَٱلْمُؤْتَفِكَٰتِ
- தலைகீழாக புரட்டப்பட்ட ஊர்கள்
- أَتَتْهُمْ
- அவர்கள் வந்தார்கள்
- رُسُلُهُم
- அவர்களுடைய தூதர்கள்
- بِٱلْبَيِّنَٰتِ
- அத்தாட்சிகளைக் கொண்டு
- فَمَا كَانَ
- இருக்கவில்லை
- ٱللَّهُ
- அல்லாஹ்
- لِيَظْلِمَهُمْ
- அவர்களுக்கு அநீதியிழைப்பவனாக
- وَلَٰكِن كَانُوٓا۟
- எனினும்/இருந்தனர்
- أَنفُسَهُمْ
- தங்களுக்கே
- يَظْلِمُونَ
- அநீதியிழைப்பவர்களாக
இவர்களுக்கு முன்னிருந்த நூஹ்வுடைய சமுதாயம், ஆது, ஸமூதுடைய சமுதாயம் இப்ராஹீம் உடைய சமுதாயம் மத்யன் வாசிகள் தலைகீழாய்ப் புரண்டுபோன ஊரார் ஆகியவர்களின் வரலாறு அவர்களிடம் வரவில்லையா? அவர்களுக்கு (நாம் அனுப்பிய) அவர்களுக்குரிய (இறை) தூதர்கள் தெளிவான அத்தாட்சிகளை கொண்டு வந்தார்கள்; (தூதர்களை நிராகரித்ததினால் அவர்கள் அழிந்தனர்.) அல்லாஹ் அவர்களுக்கு ஒரு தீங்கும் இழைக்கவில்லை; எனினும் அவர்கள் தமக்குத் தாமே தீங்கிழைத்துக் கொண்டார்கள்.
9:70
மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்