சூரா 109 ஸூரத்துல் காஃபிரூன் (காஃபிர்கள்), அயாஹ் 1 – 6
-
قُلْ يَا أَيُّهَا الْكَافِرُونَ
(நபியே!) நீர் சொல்வீராக| காஃபிர்களே!
109:1 -
لَا أَعْبُدُ مَا تَعْبُدُونَ
நீங்கள் வணங்குபவற்றை நான் வணங்கமாட்டேன்.
109:2 -
وَلَا أَنْتُمْ عَابِدُونَ مَا أَعْبُدُ
இன்னும், நான் வணங்குகிறவனை நீங்கள் வணங்குகிறவர்களல்லர்.
109:3 -
وَلَا أَنَا عَابِدٌ مَا عَبَدْتُمْ
அன்றியும், நீங்கள் வணங்குபவற்றை நான் வணங்குபவனல்லன்.
109:4 -
وَلَا أَنْتُمْ عَابِدُونَ مَا أَعْبُدُ
மேலும், நான் வணங்குபவனை நீங்கள் வணங்குபவர்கள் அல்லர்.
109:5 -
لَكُمْ دِينُكُمْ وَلِيَ دِينِ
உங்களுக்கு உங்களுடைய மார்க்கம்; எனக்கு என்னுடைய மார்க்கம்.”
109:6
மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்