சூரா 38 ஸூரத்து ஸாத்
-
إِلَىٰ يَوْمِ الْوَقْتِ الْمَعْلُومِ
“குறிப்பிட்டகாலத்தின் நாள்வரையில்” (உனக்கு அவகாசம் உண்டு எனவும் கூறினான்).
38:81 -
قَالَ فَبِعِزَّتِكَ لَأُغْوِيَنَّهُمْ أَجْمَعِينَ
அப்பொழுது| “உன் கண்ணியத்தின் மீது சத்தியமாக, நிச்சயமாக நான் அவர்கள் யாவரையும் வழிகெடுப்பேன்” என்று (இப்லீஸ்) கூறினான்.
38:82 -
إِلَّا عِبَادَكَ مِنْهُمُ الْمُخْلَصِينَ
“(எனினும்) அவர்களில் அந்தரங்க சுத்தியான உன் அடியார்களைத் தவிர” (என்றான்).
38:83 -
قَالَ فَالْحَقُّ وَالْحَقَّ أَقُولُ
(அதற்கு இறைவன்|) “அது உண்மை; உண்மையையே நான் கூறுகிறேன் என்று இறைவன் கூறினான்.
38:84 -
لَأَمْلَأَنَّ جَهَنَّمَ مِنْكَ وَمِمَّنْ تَبِعَكَ مِنْهُمْ أَجْمَعِينَ
“நிச்சயமாக, உன்னைக் கொண்டும், அவர்களில் உன்னைப் பின்பற்றியவர்கள் அனைவரைக் கொண்டும் நரகத்தை நான் நிரப்புவேன்” (என்றான்)
38:85 -
قُلْ مَا أَسْأَلُكُمْ عَلَيْهِ مِنْ أَجْرٍ وَمَا أَنَا مِنَ الْمُتَكَلِّفِينَ
(நபியே!) நீர் கூறும்| (“இக் குர்ஆனுக்காக) நான் உங்களிடம் யாதொரு கூலியும் கேட்கவில்லை; அன்றியும், (இதை இட்டுக் கட்டி) சிரமம் எடுத்துக் கொண்டவனும் அல்லன்.
38:86 -
إِنْ هُوَ إِلَّا ذِكْرٌ لِلْعَالَمِينَ
“இது அகிலங்களுக்கெல்லாம் நல்லுபதேசமேயன்றி வேறில்லை.”
38:87 -
وَلَتَعْلَمُنَّ نَبَأَهُ بَعْدَ حِينٍ
“நிச்சயமாக (சிறிது) காலத்திற்குப் பின்னர், நீங்கள் இதன் உண்மையைத் திட்டமாக அறிந்து கொள்வீர்கள்.”
38:88
மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்