முஸ்ஹப், பக்கம் 383

  1. أَمَّنْ يَبْدَأُ الْخَلْقَ ثُمَّ يُعِيدُهُ وَمَنْ يَرْزُقُكُمْ مِنَ السَّمَاءِ وَالْأَرْضِ ۗ أَإِلَٰهٌ مَعَ اللَّهِ ۚ قُلْ هَاتُوا بُرْهَانَكُمْ إِنْ كُنْتُمْ صَادِقِينَ

    முதன் முதலில் படைப்பைத் துவங்குபவனும், பின்னர் அதனை மீண்டும் உண்டாக்கி வைப்பவனும் யார்? வானத்திலிருந்தும், பூமியிலிருந்தும் உங்களுக்கு ஆகாரம் அளிப்பவன் யார்? அல்லாஹ்வுடன் (வேறு) நாயன் இருக்கின்றானா? (நபியே!) நீர் கூறுவீராக| “நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால், உங்களுடைய ஆதாரங்களைக் கொண்டு வாருங்கள்.”

    27:64
  2. قُلْ لَا يَعْلَمُ مَنْ فِي السَّمَاوَاتِ وَالْأَرْضِ الْغَيْبَ إِلَّا اللَّهُ ۚ وَمَا يَشْعُرُونَ أَيَّانَ يُبْعَثُونَ

    (இன்னும்) நீர் கூறுவீராக| “அல்லாஹ்வைத் தவிர்த்து, வானங்களிலும், பூமியிலும் இருப்பவர் எவரும் மறைவாயிருப்பதை அறிய மாட்டார்; இன்னும்| (மரித்தோர் இறுதியில்) எப்போது எழுப்பப்படுவார்கள் என்பதையும் அவர்கள் அறியமாட்டார்கள்.”

    27:65
  3. بَلِ ادَّارَكَ عِلْمُهُمْ فِي الْآخِرَةِ ۚ بَلْ هُمْ فِي شَكٍّ مِنْهَا ۖ بَلْ هُمْ مِنْهَا عَمُونَ

    ஆனால் மறுமையைப் பற்றிய அவர்களுடைய அறிவோ மிகக் கீழ்நிலையிலே உள்ளது; அவர்கள் அதில் (பின்னும்) சந்தேகத்திலேயே இருக்கின்றனர்; அது மட்டுமா? அதைப்பற்றி அவர்கள் குருடர்களாகவே இருக்கின்றனர்.

    27:66
  4. وَقَالَ الَّذِينَ كَفَرُوا أَإِذَا كُنَّا تُرَابًا وَآبَاؤُنَا أَئِنَّا لَمُخْرَجُونَ

    மேலும், நிராகரிப்பவர்கள் கூறுகிறார்கள்| “நாங்களும் எங்கள் மூதாதையரும் (மரித்து) மண்ணாகிப் போன பின்னர், மீண்டும் வெளியே கொண்டு வரப்படுவோமா?

    27:67
  5. لَقَدْ وُعِدْنَا هَٰذَا نَحْنُ وَآبَاؤُنَا مِنْ قَبْلُ إِنْ هَٰذَا إِلَّا أَسَاطِيرُ الْأَوَّلِينَ

    நிச்சயமாக, இ(ந்த அச்சுறுத்தலான)து எங்களுக்கும் எங்களுக்கு முன் சென்று போன எங்கள் மூதாதையருக்கும் வாக்களிக்கப்பட்டே வருகிறது; இது முன்னோர்களின் கட்டுக்கதைகளேயன்றி வேறில்லை” (என்றுங் கூறுகின்றனர்).

    27:68
  6. قُلْ سِيرُوا فِي الْأَرْضِ فَانْظُرُوا كَيْفَ كَانَ عَاقِبَةُ الْمُجْرِمِينَ

    “பூமியில் பிராயாணம் செய்து, குற்றவாளிகளின் முடிவு என்னவாயிற்று என்று பாருங்கள்” என்று (அவர்களிடம் நபியே!) நீர் கூறுவீராக.

    27:69
  7. وَلَا تَحْزَنْ عَلَيْهِمْ وَلَا تَكُنْ فِي ضَيْقٍ مِمَّا يَمْكُرُونَ

    அவர்களுக்காக நீர் கவலைப்படாதீர்; மேலும், அவர்கள் செய்யும் சூழ்ச்சியைப் பற்றியும் நீர் சங்கடத்தில் ஆக வேண்டாம்.

    27:70
  8. وَيَقُولُونَ مَتَىٰ هَٰذَا الْوَعْدُ إِنْ كُنْتُمْ صَادِقِينَ

    இன்னும்| “நீங்கள் உண்மை கூறுபவர்களாக இருந்தால் (வேதனை பற்றிய) இந்த வாக்குறுதி எப்பொழுது (நிறைவேறும்?)” என்றும் அவர்கள் கேட்கிறார்கள்.

    27:71
  9. قُلْ عَسَىٰ أَنْ يَكُونَ رَدِفَ لَكُمْ بَعْضُ الَّذِي تَسْتَعْجِلُونَ

    “நீங்கள் அவசரப்படுபவற்றில் சில இப்பொழுதே உங்களுக்கு வந்து சேரக்கூடும்” என்று (நபியே!) நீர் கூறிவிடுவீராக.

    27:72
  10. وَإِنَّ رَبَّكَ لَذُو فَضْلٍ عَلَى النَّاسِ وَلَٰكِنَّ أَكْثَرَهُمْ لَا يَشْكُرُونَ

    இன்னும் நிச்சயமாக உம் இறைவன் மனிதர்கள் மீது மிக்க கிருபையுடையவனாகவே இருக்கின்றான்; ஆனால் அவர்களில் பெரும்பாலோர் நன்றி செலுத்துவதில்லை.

    27:73
  11. وَإِنَّ رَبَّكَ لَيَعْلَمُ مَا تُكِنُّ صُدُورُهُمْ وَمَا يُعْلِنُونَ

    மேலும்| அவர்களின் இருதயங்கள் மறைத்து வைத்திருப்பதையும், அவர்கள் வெளிப்படுத்துவதையும் நிச்சயமாக உம் இறைவன் நன்கறிவான்.

    27:74
  12. وَمَا مِنْ غَائِبَةٍ فِي السَّمَاءِ وَالْأَرْضِ إِلَّا فِي كِتَابٍ مُبِينٍ

    வானத்திலும், பூமியிலும் மறைந்துள்ளவற்றில் நின்றும் எதுவும் (லவ்ஹுல் மஹ்ஃபூள் என்னும்) தெளிவான குறிப்பேட்டில் பதிவு செய்யப்படாமல் இல்லை.

    27:75
  13. إِنَّ هَٰذَا الْقُرْآنَ يَقُصُّ عَلَىٰ بَنِي إِسْرَائِيلَ أَكْثَرَ الَّذِي هُمْ فِيهِ يَخْتَلِفُونَ

    நிச்சயமாக இந்த குர்ஆன் பனூ இஸ்ராயீல்களுக்கு அவர்கள் கருத்து வேறுபாடு கொண்டிருந்ததில் பெரும்பாலானதை விவரித்துக் கூறுகிறது.

    27:76

மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்