சூரா 1 அல்ஃபாத்திஹா (தோற்றுவாய்), அயாஹ் 1 – 7

  1. بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ

    அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகிறேன்)

    1:1
  2. الْحَمْدُ لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ

    அனைத்து புகழும், அகிலங்கள் எல்லாவற்றையும் படைத்து வளர்த்துப் பரிபக்குவப்படுத்தும் (நாயனான) அல்லாஹ்வுக்கே ஆகும்.

    1:2
  3. الرَّحْمَٰنِ الرَّحِيمِ

    (அவன்) அளவற்ற அருளாளன் நிகரற்ற அன்புடையோன்.

    1:3
  4. مَالِكِ يَوْمِ الدِّينِ

    (அவனே நியாயத்) தீர்ப்பு நாளின் அதிபதி(யும் ஆவான்).

    1:4
  5. إِيَّاكَ نَعْبُدُ وَإِيَّاكَ نَسْتَعِينُ

    (இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.

    1:5
  6. اهْدِنَا الصِّرَاطَ الْمُسْتَقِيمَ

    நீ எங்களை நேர்வழியில் நடத்துவாயாக!

    1:6
  7. صِرَاطَ الَّذِينَ أَنْعَمْتَ عَلَيْهِمْ غَيْرِ الْمَغْضُوبِ عَلَيْهِمْ وَلَا الضَّالِّينَ

    (அது) நீ எவர்களுக்கு அருள் புரிந்தாயோ அவ்வழி. (அது) உன் கோபத்திற்கு ஆளானோர் வழியுமல்ல நெறி தவறியோர் வழியுமல்ல.

    1:7

மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்