சூரா 53 ஸூரத்துந்நஜ்ம் (நட்சத்திரம்), அயாஹ் 1 – 11

  1. وَالنَّجْمِ إِذَا هَوَىٰ

    விழுகின்ற நட்சத்திரத்தின் மீது சத்தியமாக!

    53:1
  2. مَا ضَلَّ صَاحِبُكُمْ وَمَا غَوَىٰ

    உங்கள் தோழர் வழி கெட்டுவிடவுமில்லை; அவர் தவறான வழியில் செல்லவுமில்லை.

    53:2
  3. وَمَا يَنْطِقُ عَنِ الْهَوَىٰ

    அவர் தம் இச்சைப்படி (எதையும்) பேசுவதில்லை.

    53:3
  4. إِنْ هُوَ إِلَّا وَحْيٌ يُوحَىٰ

    அது அவருக்கு வஹீ மூலம் அறிவிக்கப்பட்டதேயன்றி வேறில்லை.

    53:4
  5. عَلَّمَهُ شَدِيدُ الْقُوَىٰ

    மிக்க வல்லமையுடைவர் (ஜிப்ரீல்) அவருக்குக் கற்றுக் கொடுத்தார்.

    53:5
  6. ذُو مِرَّةٍ فَاسْتَوَىٰ

    (அவர்) மிக்க உறுதியானவர்; பின்னர் அவர் (தம் இயற்கை உருவில்) நம் தூதர் முன் தோன்றினார்.

    53:6
  7. وَهُوَ بِالْأُفُقِ الْأَعْلَىٰ

    அவர் உன்னதமான அடி வானத்தில் இருக்கும் நிலையில்-

    53:7
  8. ثُمَّ دَنَا فَتَدَلَّىٰ

    பின்னர், அவர் நெருங்கி, இன்னும், அருகே வந்தார்.

    53:8
  9. فَكَانَ قَابَ قَوْسَيْنِ أَوْ أَدْنَىٰ

    (வளைந்த) வில்லின் இரு முனைகளைப் போல், அல்லது அதினும் நெருக்கமாக வந்தார்.

    53:9
  10. فَأَوْحَىٰ إِلَىٰ عَبْدِهِ مَا أَوْحَىٰ

    அப்பால், (அல்லாஹ்) அவருக்கு (வஹீ) அறிவித்ததையெல்லாம் அவர், அவனுடைய அடியாருக்கு (வஹீ) அறிவித்தார்.

    53:10
  11. مَا كَذَبَ الْفُؤَادُ مَا رَأَىٰ

    (நபியுடைய) இதயம் அவர் கண்டதைப் பற்றி, பொய்யுரைக்க வில்லை.

    53:11

மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்