சூரா 88 ஸூரத்துல் காஷியா (மூடிக் கொள்ளுதல்), அயாஹ் 1 – 16
-
هَلْ أَتَاكَ حَدِيثُ الْغَاشِيَةِ
சூழ்ந்து மூடிக்கொள்வதின் (கியாம நாளின்) செய்தி உமக்கு வந்ததா?
88:1 -
وُجُوهٌ يَوْمَئِذٍ خَاشِعَةٌ
அந்நாளில் சில முகங்கள் இழிவுபட்டிருக்கும்.
88:2 -
عَامِلَةٌ نَاصِبَةٌ
அவை (தவறான காரியங்களை நல்லவை என கருதி) செயல்பட்டவையும் (அதிலேயே) உறுதியாக நின்றவையுமாகும்.
88:3 -
تَصْلَىٰ نَارًا حَامِيَةً
கொழுந்து விட்டெறியும் நெருப்பில் அவை புகும்.
88:4 -
تُسْقَىٰ مِنْ عَيْنٍ آنِيَةٍ
கொதிக்கும் ஊற்றிலிருந்து, (அவர்களுக்கு) நீர் புகட்டப்படும்.
88:5 -
لَيْسَ لَهُمْ طَعَامٌ إِلَّا مِنْ ضَرِيعٍ
அவர்களுக்கு விஷச் செடிகளைத் தவிர, வேறு உணவில்லை.
88:6 -
لَا يُسْمِنُ وَلَا يُغْنِي مِنْ جُوعٍ
அது அவர்களைக் கொழு(த்துச் செழி)க்கவும் வைக்காது; அன்றியும் பசியையும் தணிக்காது.
88:7 -
وُجُوهٌ يَوْمَئِذٍ نَاعِمَةٌ
அந்நாளில் சில முகங்கள் செழுமையாக இருக்கும்.
88:8 -
لِسَعْيِهَا رَاضِيَةٌ
தம் முயற்சி (நற்பயன் அடைந்தது) பற்றி திருப்தியுடன் இருக்கும்.
88:9 -
فِي جَنَّةٍ عَالِيَةٍ
உன்னதமான சுவர்க்கச் சோலையில்-
88:10 -
لَا تَسْمَعُ فِيهَا لَاغِيَةً
அதில் யாதொரு பயனற்ற சொல்லையும் அவை செவியுறுவதில்லை.
88:11 -
فِيهَا عَيْنٌ جَارِيَةٌ
அதில் ஓடிக் கொண்டிருக்கும் நீரூற்று உண்டு.
88:12 -
فِيهَا سُرُرٌ مَرْفُوعَةٌ
அதில் உயர்ந்த ஆசனங்கள் உண்டு.
88:13 -
وَأَكْوَابٌ مَوْضُوعَةٌ
(அருந்தக்) குவளைகளும் வைக்கப் பட்டிருக்கும்.
88:14 -
وَنَمَارِقُ مَصْفُوفَةٌ
மேலும், அணி அணியாக்கப்பட்டுள்ள திண்டுகளும்-
88:15 -
وَزَرَابِيُّ مَبْثُوثَةٌ
விரிக்கப்பட்ட உயர்ந்த கம்பளங்களும் உண்டு.
88:16
மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்