முஸ்ஹப், பக்கம் 604

  1. قُلْ هُوَ اللَّهُ أَحَدٌ

    (நபியே?!) நீர் கூறுவீராக| அல்லாஹ் அவன் ஒருவனே.

    112:1
  2. اللَّهُ الصَّمَدُ

    அல்லாஹ் (எவரிடத்தும்) தேவையற்றவன்.

    112:2
  3. لَمْ يَلِدْ وَلَمْ يُولَدْ

    அவன் (எவரையும்) பெறவுமில்லை; (எவராலும்) பெறப்படவுமில்லை.

    112:3
  4. وَلَمْ يَكُنْ لَهُ كُفُوًا أَحَدٌ

    அன்றியும், அவனுக்கு நிகராக எவரும் இல்லை.

    112:4
  5. قُلْ أَعُوذُ بِرَبِّ الْفَلَقِ

    (நபியே!) நீர் சொல்வீராக| அதிகாலையின் இறைவனிடத்தில் நான் காவல் தேடுகிறேன்.

    113:1
  6. مِنْ شَرِّ مَا خَلَقَ

    அவன் படைத்தவற்றின் தீங்கை விட்டும்-

    113:2
  7. وَمِنْ شَرِّ غَاسِقٍ إِذَا وَقَبَ

    இருள் பரவும் போது ஏற்படும் இரவின் தீங்கை விட்டும்-

    113:3
  8. وَمِنْ شَرِّ النَّفَّاثَاتِ فِي الْعُقَدِ

    இன்னும், முடிச்சுகளில் (மந்திரித்து) ஊதும் பெண்களின் தீங்கை விட்டும்,

    113:4
  9. وَمِنْ شَرِّ حَاسِدٍ إِذَا حَسَدَ

    பொறாமைக்காரன் பொறாமை கொள்ளும் போதுண்டாகும் தீங்கை விட்டும் (காவல் தேடுகிறேன்).

    113:5
  10. قُلْ أَعُوذُ بِرَبِّ النَّاسِ

    (நபியே!) நீர் கூறுவீராக| மனிதர்களின் இறைவனிடத்தில் நான் காவல் தேடுகிறேன்.

    114:1
  11. مَلِكِ النَّاسِ

    (அவனே) மனிதர்களின் அரசன்;

    114:2
  12. إِلَٰهِ النَّاسِ

    (அவனே) மனிதர்களின் நாயன்.

    114:3
  13. مِنْ شَرِّ الْوَسْوَاسِ الْخَنَّاسِ

    பதுங்கியிருந்து வீண் சந்தேகங்களை உண்டாக்குபவனின் தீங்கை விட்டும் (இறைவனிடத்தில் நான் காவல் தேடுகிறேன்).

    114:4
  14. الَّذِي يُوَسْوِسُ فِي صُدُورِ النَّاسِ

    அவன் மனிதர்களின் இதயங்களில் வீண் சந்தேகங்களை உண்டாக்குகிறான்.

    114:5
  15. مِنَ الْجِنَّةِ وَالنَّاسِ

    (இத்தகையோர்) ஜின்களிலும், மனிதர்களிலும் இருக்கின்றனர்.

    114:6

மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்