சூரா 69 ஸூரத்துல் ஹாஃக்ஃகா (நிச்சயமானது)
-
وَمَا هُوَ بِقَوْلِ شَاعِرٍ ۚ قَلِيلًا مَا تُؤْمِنُونَ
இது ஒரு கவிஞனின் சொல்லன்று; (எனினும்) நீங்கள் மிகவும் சொற்பமாகவே நம்புகிறீர்கள்.
69:41 -
وَلَا بِقَوْلِ كَاهِنٍ ۚ قَلِيلًا مَا تَذَكَّرُونَ
(இது) ஒரு குறிகாரனின் சொல்லுமன்று; (எனினும்) நீங்கள் சொற்பமாகவே (இதை நினைத்து) நல்லறிவு பெறுகிறீர்கள்.
69:42 -
تَنْزِيلٌ مِنْ رَبِّ الْعَالَمِينَ
அகிலத்தாருக்கெல்லாம் இறைவனிடமிருந்து (இது) இறக்கியருளப்பட்டதாகும்.
69:43 -
وَلَوْ تَقَوَّلَ عَلَيْنَا بَعْضَ الْأَقَاوِيلِ
அன்றியும், நம்மீது சொற்களில் சிலவற்றை இட்டுக் கட்டிக் கூறியிருப்பாரானால் -
69:44 -
لَأَخَذْنَا مِنْهُ بِالْيَمِينِ
அவருடைய வலக்கையை நாம் பற்றிப் பிடித்துக் கொண்டு-
69:45 -
ثُمَّ لَقَطَعْنَا مِنْهُ الْوَتِينَ
பின்னர், அவருடைய நாடி நரம்பை நாம் தரித்திருப்போம்.
69:46 -
فَمَا مِنْكُمْ مِنْ أَحَدٍ عَنْهُ حَاجِزِينَ
அன்றியும், உங்களில் எவரும் (நாம்) அ(வ்வாறு செய்வ)தைத் தடுப்பவர்களில்லை.
69:47 -
وَإِنَّهُ لَتَذْكِرَةٌ لِلْمُتَّقِينَ
ஆகவே, நிச்சயமாக அது (குர்ஆன்) பயபக்தியுடையவர்களுக்கு நல்லுபதேசமாகும்.
69:48 -
وَإِنَّا لَنَعْلَمُ أَنَّ مِنْكُمْ مُكَذِّبِينَ
ஆயினும், (அதைப்) பொய்ப்பிப்பவர்களும் உங்களில் இருக்கின்றார்கள் என்பதை நிச்சயமாக நாம் அறிவோம்.
69:49 -
وَإِنَّهُ لَحَسْرَةٌ عَلَى الْكَافِرِينَ
அன்றியும், நிச்சயமாக அது காஃபிர்களுக்கு கைசேதமாக இருக்கிறது.
69:50 -
وَإِنَّهُ لَحَقُّ الْيَقِينِ
மேலும், அது நிச்சயமாக உறுதியான உண்மையாகும்.
69:51 -
فَسَبِّحْ بِاسْمِ رَبِّكَ الْعَظِيمِ
ஆகவே, மகத்தான உம்முடைய இறைவனின் திருப்பெயரைக் கொண்டு (துதி செய்து) தஸ்பீஹு செய்வீராக.
69:52
மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்