சூரா 74 ஸூரத்துல் முத்தஸ்ஸிர் (போர்த்திக்கொண்டிருப்பவர்)

  1. عَنِ الْمُجْرِمِينَ

    குற்றவாளிகளைக் குறித்து-

    74:41
  2. مَا سَلَكَكُمْ فِي سَقَرَ

    “உங்களை ஸகர் (நரகத்தில்) நுழைய வைத்தது எது?” (என்று கேட்பார்கள்.)

    74:42
  3. قَالُوا لَمْ نَكُ مِنَ الْمُصَلِّينَ

    அவர்கள் (பதில்) கூறுவார்கள்| “தொழுபவர்களில் நின்றும் நாங்கள் இருக்கவில்லை.

    74:43
  4. وَلَمْ نَكُ نُطْعِمُ الْمِسْكِينَ

    “அன்றியும், ஏழைகளுக்கு நாங்கள் உணவும் அளிக்கவில்லை.

    74:44
  5. وَكُنَّا نَخُوضُ مَعَ الْخَائِضِينَ

    “(வீணானவற்றில்) மூழ்கிக்கிடந்தோருடன், நாங்களும் மூழ்கிக்கிடந்தோம்.

    74:45
  6. وَكُنَّا نُكَذِّبُ بِيَوْمِ الدِّينِ

    “இந்த நியாயத் தீர்ப்பு நாளை நாங்கள் பொய்யாக்கிக் கொண்டும் இருந்தோம்.

    74:46
  7. حَتَّىٰ أَتَانَا الْيَقِينُ

    “உறுதியான (மரணம்) எங்களிடம் வரும்வரையில் (இவ்வாறாக இருந்தோம்” எனக் கூறுவர்).

    74:47
  8. فَمَا تَنْفَعُهُمْ شَفَاعَةُ الشَّافِعِينَ

    ஆகவே, சிபாரிசு செய்வோரின் எந்த சிபாரிசும் அவர்களுக்குப் பயனளிக்காது.

    74:48
  9. فَمَا لَهُمْ عَنِ التَّذْكِرَةِ مُعْرِضِينَ

    நல்லுபதேசத்தை விட்டும் முகம் திருப்புகிறார்களே - இவர்களுக்கு என்ன நேர்ந்தது?

    74:49
  10. كَأَنَّهُمْ حُمُرٌ مُسْتَنْفِرَةٌ

    அவர்கள் வெருண்டு ஓடும் காட்டுக்கழுதைகளைப் போல்-

    74:50
  11. فَرَّتْ مِنْ قَسْوَرَةٍ

    (அதுவும்) சிங்கத்தைக் கண்டு வெருண்டு ஓடும் (காட்டுக் கழுதை போல் இருக்கின்றனர்).

    74:51
  12. بَلْ يُرِيدُ كُلُّ امْرِئٍ مِنْهُمْ أَنْ يُؤْتَىٰ صُحُفًا مُنَشَّرَةً

    ஆனால், அவர்களில் ஒவ்வொரு மனிதனும் விரிக்கப்பட்ட வேதங்கள் தனக்கும் கொடுக்கப்பட வேண்டும் என்று நாடுகிறான்.

    74:52
  13. كَلَّا ۖ بَلْ لَا يَخَافُونَ الْآخِرَةَ

    அவ்வாறில்லை| மறுமையைப் பற்றி அவர்கள் பயப்படவில்லை.

    74:53
  14. كَلَّا إِنَّهُ تَذْكِرَةٌ

    அப்படியல்ல| நிச்சயமாக இது நல்லுபதேசமாகும்.

    74:54
  15. فَمَنْ شَاءَ ذَكَرَهُ

    (எனவே நல்லுபதேசம் பெற) எவர் விரும்புகிறாரோ அவர் இதை நினைவில் வைத்துக் கொள்ளட்டும்,

    74:55
  16. وَمَا يَذْكُرُونَ إِلَّا أَنْ يَشَاءَ اللَّهُ ۚ هُوَ أَهْلُ التَّقْوَىٰ وَأَهْلُ الْمَغْفِرَةِ

    இன்னும், அல்லாஹ் நாடினாலன்றி அவர்கள் நல்லுபதேசம் பெற முடியாது. அவனே (நம்) பயபக்திக்குரியவன்; அவனே (நம்மை) மன்னிப்பதற்கும் உரிமையுடையவன்.

    74:56

மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்