சூரா 84 ஸூரத்துல் இன்ஷிகாக் (பிளந்து போதல்), அயாஹ் 1 – 25

  1. إِذَا السَّمَاءُ انْشَقَّتْ

    வானம் பிளந்துவிடும் போது-

    84:1
  2. وَأَذِنَتْ لِرَبِّهَا وَحُقَّتْ

    தனது (இறைவனின் ஆணைக்கு கட்டுப்படுவது) கடமையாக்கப்பட்டுள்ள நிலையில் தன் இறைவனின் கட்டளைக்கு (அந்த வானம்) அடிபணியும் போது-

    84:2
  3. وَإِذَا الْأَرْضُ مُدَّتْ

    இன்னும், பூமி விரிக்கப்பட்டு,

    84:3
  4. وَأَلْقَتْ مَا فِيهَا وَتَخَلَّتْ

    அது, தன்னிலுள்ளவற்றை வெளியாக்கி, அது காலியாகி விடும் போது-

    84:4
  5. وَأَذِنَتْ لِرَبِّهَا وَحُقَّتْ

    தனது (இறைவனின் ஆணைக்கு கட்டுப்படுவது) கடமையாக்கப்பட்டுள்ள நிலையில் தன் இறைவனின் கட்டளைக்கு (அந்த பூமி) அடிபணியும்போது.

    84:5
  6. يَا أَيُّهَا الْإِنْسَانُ إِنَّكَ كَادِحٌ إِلَىٰ رَبِّكَ كَدْحًا فَمُلَاقِيهِ

    மனிதனே! நிச்சயமாக நீ உன் இறைவனிடம் சேரும் வரை முனைந்து உழைப்பவனாக உழைக்கின்றாய் - பின்னர் அவனைச் சந்திப்பவனாக இருக்கின்றாய்.

    84:6
  7. فَأَمَّا مَنْ أُوتِيَ كِتَابَهُ بِيَمِينِهِ

    ஆகவே எவனுடைய பட்டோலை அவனுடைய வலக்கையில் கொடுக்கப்படுகின்றதோ,

    84:7
  8. فَسَوْفَ يُحَاسَبُ حِسَابًا يَسِيرًا

    அவன் சுலபமான விசாரணையாக விசாரிக்கப்படுவான்.

    84:8
  9. وَيَنْقَلِبُ إِلَىٰ أَهْلِهِ مَسْرُورًا

    இன்னும், தன்னைச் சார்ந்தோரிடமும் மகிழ்வுடன் திரும்புவான்.

    84:9
  10. وَأَمَّا مَنْ أُوتِيَ كِتَابَهُ وَرَاءَ ظَهْرِهِ

    ஆனால், எவனுடைய பட்டோலை அவனுடைய முதுகுக்குப் பின்னால் கொடுக்கப்படுகின்றதோ-

    84:10
  11. فَسَوْفَ يَدْعُو ثُبُورًا

    அவன் (தனக்குக்) “கேடு” தான் எனக் கூவியவனாக-

    84:11
  12. وَيَصْلَىٰ سَعِيرًا

    அவன் நரகத்தில் புகுவான்.

    84:12
  13. إِنَّهُ كَانَ فِي أَهْلِهِ مَسْرُورًا

    நிச்சயமாக அவன் (இம்மையில்) தன்னைச் சார்ந்தோருடன் மகிழ்வோடு இருந்தான்.

    84:13
  14. إِنَّهُ ظَنَّ أَنْ لَنْ يَحُورَ

    நிச்சயமாக, தான் (இறைவன் பால்) “மீளவே மாட்டேன்” என்று எண்ணியிருந்தான்.

    84:14
  15. بَلَىٰ إِنَّ رَبَّهُ كَانَ بِهِ بَصِيرًا

    அப்படியல்ல; நிச்சயமாக அவனுடைய இறைவன் அவனைக் கவனித்து நோக்குகிறவனாகவே இருந்தான்.

    84:15
  16. فَلَا أُقْسِمُ بِالشَّفَقِ

    இன்னும், அந்திச் செவ்வானத்தின் மீது நான் சத்தியம் செய்கின்றேன்.

    84:16
  17. وَاللَّيْلِ وَمَا وَسَقَ

    மேலும், இரவின் மீதும், அது ஒன்று சேர்ப்பவற்றின் மீதும்,

    84:17
  18. وَالْقَمَرِ إِذَا اتَّسَقَ

    பூரண சந்திரன் மீதும் (சத்தியம் செய்கின்றேன்).

    84:18
  19. لَتَرْكَبُنَّ طَبَقًا عَنْ طَبَقٍ

    நீங்கள் ஒரு நிலையிலிருந்து மற்றொரு நிலைக்கு நிச்சயமாக ஏறிப்போவீர்கள்.

    84:19
  20. فَمَا لَهُمْ لَا يُؤْمِنُونَ

    எனவே, அவர்களுக்கு என்ன (நேர்ந்தது?) அவர்கள் ஈமான் கொள்ளவதில்லை.

    84:20
  21. وَإِذَا قُرِئَ عَلَيْهِمُ الْقُرْآنُ لَا يَسْجُدُونَ ۩

    மேலும், அவர்களிடத்தில் குர்ஆன் ஓதிக் காண்பிக்கப்பட்டால், அவர்கள் ஸுஜூது செய்வதில்லை.

    84:21
  22. بَلِ الَّذِينَ كَفَرُوا يُكَذِّبُونَ

    அன்றியும் நிராகரிப்பவர்கள் அதைப் பொய்ப்பிக்கின்றனர்.

    84:22
  23. وَاللَّهُ أَعْلَمُ بِمَا يُوعُونَ

    ஆனால் அல்லாஹ், அவர்கள் (தங்களுக்குள்ளே சேகரித்து) மறைத்து வைத்திருப்பவற்றை நன்கு அறிந்திருக்கின்றான்.

    84:23
  24. فَبَشِّرْهُمْ بِعَذَابٍ أَلِيمٍ

    (நபியே!) அவர்களுக்கு நோவினை செய்யும் வேதனையைக் கொண்டு நன்மாராயங் கூறுவீராக.

    84:24
  25. إِلَّا الَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ لَهُمْ أَجْرٌ غَيْرُ مَمْنُونٍ

    எவர்கள் ஈமான்கொண்டு, ஸாலிஹான (நல்ல) அமல்கள் செய்கிறார்களோ அவர்களைத் தவிர - அவர்களுக்கு முடிவேயில்லாத நற்கூலி உண்டு.

    84:25

மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்