முஸ்ஹப், பக்கம் 581

  1. أَلَمْ نَخْلُقْكُمْ مِنْ مَاءٍ مَهِينٍ

    அற்ப நீர்த்துளியிலிருந்து உங்களை நாம் படைக்கவில்லையா?

    77:20
  2. فَجَعَلْنَاهُ فِي قَرَارٍ مَكِينٍ

    பின்னர் அதனைப் பத்திரமான இடத்தில் (கர்ப்பத்தில்) உறுதியாக ஆக்கிவைத்தோம்.

    77:21
  3. إِلَىٰ قَدَرٍ مَعْلُومٍ

    ஒரு குறிப்பிட்ட (கால) அளவு வரை.

    77:22
  4. فَقَدَرْنَا فَنِعْمَ الْقَادِرُونَ

    இவ்வாறு நாமே அதை அமைத்திருக்கின்றோம். அமைப்போரில் நாமே மேலானோர்.

    77:23
  5. وَيْلٌ يَوْمَئِذٍ لِلْمُكَذِّبِينَ

    பொய்பிப்பவர்களுக்கு அந்நாளில் கேடுதான்.

    77:24
  6. أَلَمْ نَجْعَلِ الْأَرْضَ كِفَاتًا

    பூமியை உங்களை அணைத்து (இடம் தந்து)க் கொண்டிருப்பதாக நாம் ஆக்கவில்லையா?

    77:25
  7. أَحْيَاءً وَأَمْوَاتًا

    உயிருள்ளோருக்கும், மரித்தோருக்கும் (அது இடம் அளிக்கிறது).

    77:26
  8. وَجَعَلْنَا فِيهَا رَوَاسِيَ شَامِخَاتٍ وَأَسْقَيْنَاكُمْ مَاءً فُرَاتًا

    அன்றியும், அதில் உயர்ந்த மலைகளையும் நாம் ஆக்கினோம்; இனிமையான தண்ணீரையும் நாம் உங்களுக்குப் புகட்டினோம்.

    77:27
  9. وَيْلٌ يَوْمَئِذٍ لِلْمُكَذِّبِينَ

    பொய்ப்பிப்பவர்களுக்கு அந்நாளில் கேடுதான்.

    77:28
  10. انْطَلِقُوا إِلَىٰ مَا كُنْتُمْ بِهِ تُكَذِّبُونَ

    “நீங்கள் எதைப் பொய்ப்படுத்திக் கொண்டிருந்தீர்களோ, அதன் பால் நடப்பீர்களாக” (என்று அவர்களுக்குக் கூறப்படும்).

    77:29
  11. انْطَلِقُوا إِلَىٰ ظِلٍّ ذِي ثَلَاثِ شُعَبٍ

    மூன்று கிளைகளுடைய (நரகப் புகை) நிழலின் பால் நடப்பீர்களாக.

    77:30
  12. لَا ظَلِيلٍ وَلَا يُغْنِي مِنَ اللَّهَبِ

    (அது) நிழலளிப்பதுமல்ல; (நரகின்) கடுந்தழலை விட்டுக் காப்பாற்றுவதுமல்ல.

    77:31
  13. إِنَّهَا تَرْمِي بِشَرَرٍ كَالْقَصْرِ

    நிச்சயமாக அது பெரிய மாளிகைகளைப் போன்ற நெருப்புப் பொறிகளைக் கொண்டு வீசி எறிந்து கொண்டு இருக்கும்.

    77:32
  14. كَأَنَّهُ جِمَالَتٌ صُفْرٌ

    நிச்சயமாக அது மஞ்சள் நிறமுள்ள ஒட்டகைகள் போல் இருக்கும்.

    77:33
  15. وَيْلٌ يَوْمَئِذٍ لِلْمُكَذِّبِينَ

    பொய்ப்பிப்பவர்களுக்கு அந்நாளில் கேடுதான்.

    77:34
  16. هَٰذَا يَوْمُ لَا يَنْطِقُونَ

    இது, அவர்கள் (எதுவும்) பேச முடியாத நாள்.

    77:35
  17. وَلَا يُؤْذَنُ لَهُمْ فَيَعْتَذِرُونَ

    அன்றியும் (தப்புவிப்பதற்காகப்) புகல் கூறவும் அவர்கள் அனுமதிக்கப்படமாட்டார்கள்.

    77:36
  18. وَيْلٌ يَوْمَئِذٍ لِلْمُكَذِّبِينَ

    பொய்ப்பிப்பவர்களுக்கு அந்நாளில் கேடுதான்.

    77:37
  19. هَٰذَا يَوْمُ الْفَصْلِ ۖ جَمَعْنَاكُمْ وَالْأَوَّلِينَ

    இது தீர்ப்புக்குரிய நாளாகும். உங்களையும், (உங்களுக்கு) முன் இருந்தோரையும் நாம் ஒன்று சேர்க்கும் (நாள்).

    77:38
  20. فَإِنْ كَانَ لَكُمْ كَيْدٌ فَكِيدُونِ

    எனவே, (தண்டனையிலிருந்து தப்பித்துக் கொள்ள) உங்களிடம் சூழ்ச்சியிருக்குமானால், சூழ்ச்சி செய்து பாருங்கள்.

    77:39
  21. وَيْلٌ يَوْمَئِذٍ لِلْمُكَذِّبِينَ

    பொய்ப்பிப்பவர்களுக்கு அந்நாளில் கேடுதான்.

    77:40
  22. إِنَّ الْمُتَّقِينَ فِي ظِلَالٍ وَعُيُونٍ

    நிச்சயமாக, பயபக்தியுடையவர்கள் (குளிர்) நிழல்களிலும், நீர்ச் சுனைகளிலும் இருப்பார்கள்.

    77:41
  23. وَفَوَاكِهَ مِمَّا يَشْتَهُونَ

    இன்னும், அவர்கள் விரும்பும் கனிவகைகளும் உண்டு.

    77:42
  24. كُلُوا وَاشْرَبُوا هَنِيئًا بِمَا كُنْتُمْ تَعْمَلُونَ

    “நீங்கள் செய்து கொண்டிருந்த (நற்) செயல்களின் காரணமாக, சிரமமின்றி, தாராளமாக புசியுங்கள்; இன்னும் பருகுங்கள்” (என்று கூறப்படும்).

    77:43
  25. إِنَّا كَذَٰلِكَ نَجْزِي الْمُحْسِنِينَ

    நிச்சயமாக, இவ்வாறே நன்மை செய்வோருக்கு நாம் கூலி கொடுப்போம்.

    77:44
  26. وَيْلٌ يَوْمَئِذٍ لِلْمُكَذِّبِينَ

    பொய்ப்பிப்பவர்களுக்கு அந்நாளில் கேடுதான்.

    77:45
  27. كُلُوا وَتَمَتَّعُوا قَلِيلًا إِنَّكُمْ مُجْرِمُونَ

    (பொய்யாக்குவோரே உலகில்) இன்னும் கொஞ்ச (கால)ம் நீங்கள் புசித்துக் கொண்டும், சுகித்துக்கொண்டும் இருங்கள் - நிச்சயமாக நீங்கள் குற்றவாளிகளே.

    77:46
  28. وَيْلٌ يَوْمَئِذٍ لِلْمُكَذِّبِينَ

    பொய்ப்பிப்பவர்களுக்கு அந்நாளில் கேடுதான்.

    77:47
  29. وَإِذَا قِيلَ لَهُمُ ارْكَعُوا لَا يَرْكَعُونَ

    “நீங்கள் குனிந்து வணங்குங்கள்” என்று அவர்களிடம் கூறப்பட்டால், அவர்கள் குனிந்து வணங்கமாட்டார்கள்.

    77:48
  30. وَيْلٌ يَوْمَئِذٍ لِلْمُكَذِّبِينَ

    பொய்ப்பிப்பவர்களுக்கு அந்நாளில் கேடுதான்.

    77:49
  31. فَبِأَيِّ حَدِيثٍ بَعْدَهُ يُؤْمِنُونَ

    எனவே, இதன் பின்னர் எந்த விஷயத்தின் மீதுதான் அவர்கள் ஈமான் கொள்வார்கள்?

    77:50

மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்