சூரா 74 ஸூரத்துல் முத்தஸ்ஸிர் (போர்த்திக்கொண்டிருப்பவர்), அயாஹ் 1 – 25
-
يَا أَيُّهَا الْمُدَّثِّرُ
(போர்வை) போர்த்திக் கொண்டு இருப்பவரே!
74:1 -
قُمْ فَأَنْذِرْ
நீர் எழுந்து (மக்களுக்கு அச்சமூட்டி) எச்சரிக்கை செய்வீராக.
74:2 -
وَرَبَّكَ فَكَبِّرْ
மேலும், உம் இறைவனைப் பெருமைப் படுத்துவீராக.
74:3 -
وَثِيَابَكَ فَطَهِّرْ
உம் ஆடைகளைத் தூய்மையாக ஆக்கி வைத்துக் கொள்வீராக.
74:4 -
وَالرُّجْزَ فَاهْجُرْ
அன்றியும் அசுத்தத்தை வெறுத்து (ஒதுக்கி) விடுவீராக.
74:5 -
وَلَا تَمْنُنْ تَسْتَكْثِرُ
(பிறருக்குக் கொடுப்பதையும் விட அவர்களிடமிருந்து) அதிகமாகப் பெறும் (நோக்கோடு) உபகாரம் செய்யாதீர்.
74:6 -
وَلِرَبِّكَ فَاصْبِرْ
இன்னும், உம் இறைவனுக்காகப் பொறுமையுடன் இருப்பீராக.
74:7 -
فَإِذَا نُقِرَ فِي النَّاقُورِ
மேலும், எக்காளத்தில் ஊதப்படும்போது-
74:8 -
فَذَٰلِكَ يَوْمَئِذٍ يَوْمٌ عَسِيرٌ
அந்நாள் மிகக் கடினமான நாள் ஆகும்.
74:9 -
عَلَى الْكَافِرِينَ غَيْرُ يَسِيرٍ
காஃபிர்களுக்கு (அந்நாள்) இலேசானதல்ல.
74:10 -
ذَرْنِي وَمَنْ خَلَقْتُ وَحِيدًا
என்னையும், நான் தனித்தே படைத்தவனையும் விட்டுவிடும்.
74:11 -
وَجَعَلْتُ لَهُ مَالًا مَمْدُودًا
இன்னும் அவனுக்கு விசாலமாகப் பொருளையும் கொடுத்தேன்.
74:12 -
وَبَنِينَ شُهُودًا
அவனிடம் இருக்கிறவர்களாகவுள்ள புதல்வர்களையும் (கொடுத்தேன்).
74:13 -
وَمَهَّدْتُ لَهُ تَمْهِيدًا
இன்னும் அவனுக்கு (வசதியான) தயாரிப்புகளை அவனுக்காகத் தயார் செய்தளித்தேன்.
74:14 -
ثُمَّ يَطْمَعُ أَنْ أَزِيدَ
பின்னரும், அவனுக்கு(ச் செல்வங்களை) நான் அதிகமாக்க வேண்டுமென்று அவன் ஆசைப்படுகிறான்.
74:15 -
كَلَّا ۖ إِنَّهُ كَانَ لِآيَاتِنَا عَنِيدًا
அவ்வாறில்லை! நிச்சயமாக அவன் நம் வசனங்களுக்கு முரண்பட்டவனாகவே இருக்கின்றான்.
74:16 -
سَأُرْهِقُهُ صَعُودًا
விரைவிலேயே, அவனைக் கடினமான ஒரு சிகரத்தின் மேல் ஏற்றுவேன்.
74:17 -
إِنَّهُ فَكَّرَ وَقَدَّرَ
நிச்சயமாக அவன் (குர்ஆனுக்கு எதிராகச்) சிந்தித்து (ஒரு திட்டத்தை) ஏற்படுத்திக் கொண்டான்.
74:18 -
فَقُتِلَ كَيْفَ قَدَّرَ
அவன் அழிவானாக! எப்படி அவன் ஏற்படுத்திக் கொண்டான்?
74:19 -
ثُمَّ قُتِلَ كَيْفَ قَدَّرَ
பின்னரும், அவன் அழிவானாக! எப்படி அவன் ஏற்படுத்திக் கொண்டான்?
74:20 -
ثُمَّ نَظَرَ
பிறகும் (குர்ஆனின் வசனங்களை) அவன் நோட்டமிட்டான்.
74:21 -
ثُمَّ عَبَسَ وَبَسَرَ
பின்னர், (அதுபற்றிக் குறை கூற இயலாதவனாக) கடுகடுத்தான்; இன்னும் (முகஞ்) சுளித்தான்.
74:22 -
ثُمَّ أَدْبَرَ وَاسْتَكْبَرَ
அதன் பின்னர் (சத்தியத்தை ஏற்காமல்) புறமுதுகு காட்டினான்; இன்னும் பெருமை கொண்டான்.
74:23 -
فَقَالَ إِنْ هَٰذَا إِلَّا سِحْرٌ يُؤْثَرُ
அப்பால் அவன் கூறினான்| “இது (பிறரிடமிருந்து கற்றுப்) பேசப்படும் சூனியமே அன்றி வேறில்லை.
74:24 -
إِنْ هَٰذَا إِلَّا قَوْلُ الْبَشَرِ
“இது மனிதனின் சொல்லல்லாமலும் வேறில்லை” (என்றும் கூறினான்.)
74:25
மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்