சூரா 37 ஸூரத்துஸ் ஸாஃப்ஃபாத் (அணிவகுப்புகள்)

  1. هَٰذَا يَوْمُ الْفَصْلِ الَّذِي كُنْتُمْ بِهِ تُكَذِّبُونَ

    “நீங்கள் பொய்ப்பிக்க முற்பட்டுக் கொண்டிருந்தீர்களே அந்தத் தீர்ப்பு நாள் இதுதான்!” (என்று அவர்களுக்குக் கூறப்படும்.)

    37:21
  2. احْشُرُوا الَّذِينَ ظَلَمُوا وَأَزْوَاجَهُمْ وَمَا كَانُوا يَعْبُدُونَ

    “அநியாயம் செய்தார்களே அவர்களையும் அவர்களுடைய துணைகளையும், அவர்கள் வணங்கிக் கொண்டிருந்தவற்றையும் ஒன்று சேருங்கள்.

    37:22
  3. مِنْ دُونِ اللَّهِ فَاهْدُوهُمْ إِلَىٰ صِرَاطِ الْجَحِيمِ

    “அல்லாஹ்வையன்றி (அவர்கள் வழிபட்டவை அவை); பின்னர் அவர்களை, நரகத்தின் பாதைக்கு கொண்டு செல்லுங்கள்.

    37:23
  4. وَقِفُوهُمْ ۖ إِنَّهُمْ مَسْئُولُونَ

    “இன்னும், அவர்களை (அங்கே) நிறுத்தி வையுங்கள்; அவர்கள் நிச்சயமாகக் (கேள்வி கணக்குக்) கேட்கப்பட வேண்டியவர்கள்” (என்று மலக்குகளுக்குக் கூறப்படும்)

    37:24
  5. مَا لَكُمْ لَا تَنَاصَرُونَ

    “உங்களுக்கு என்ன நேர்ந்தது? நீங்கள் ஏன் ஒருவருக்கொருவர் (உலகில் செய்தது போன்று) உதவி செய்து கொள்ளவில்லை?” (என்று கேட்கப்படும்).

    37:25
  6. بَلْ هُمُ الْيَوْمَ مُسْتَسْلِمُونَ

    ஆனால் அவர்கள் அந்நாளில் (எதுவும் செய்ய இயலாது தலை குனிந்து) கீழ்படிந்தவர்களாக இருப்பார்கள்.

    37:26
  7. وَأَقْبَلَ بَعْضُهُمْ عَلَىٰ بَعْضٍ يَتَسَاءَلُونَ

    அவர்களில் சிலர் சிலரை முன்னோக்கி, ஒருவரை ஒருவர் கேள்வி கேட்டு(த் தர்க்கித்துக்) கொண்டும் இருப்பார்கள்.

    37:27
  8. قَالُوا إِنَّكُمْ كُنْتُمْ تَأْتُونَنَا عَنِ الْيَمِينِ

    (தம் தலைவர்களை நோக்கி|) “நிச்சயமாக நீங்கள் வலப்புறத்திலிருந்து (சக்தியுடன்) எங்களிடம் வருகிறவர்களாக இருந்தீர்கள்” என்று கூறுவார்கள்.

    37:28
  9. قَالُوا بَلْ لَمْ تَكُونُوا مُؤْمِنِينَ

    (“அப்படியல்ல!) நீங்கள் தாம் முஃமின்களாக - நம்பிக்கை கொண்டோராய் - இருக்கவில்லை!” என்று அ(த்தலை)வர்கள் கூறுவர்.

    37:29
  10. وَمَا كَانَ لَنَا عَلَيْكُمْ مِنْ سُلْطَانٍ ۖ بَلْ كُنْتُمْ قَوْمًا طَاغِينَ

    “அன்றியும் உங்கள் மீது எங்களுக்கு எவ்வித அதிகாரமும் இருக்கவில்லை; எனினும் நீங்கள் தாம் வரம்பு கடந்து பாவம் செய்யும் கூட்டத்தாராக இருந்தீர்கள்.”

    37:30
  11. فَحَقَّ عَلَيْنَا قَوْلُ رَبِّنَا ۖ إِنَّا لَذَائِقُونَ

    ஆகையால், எங்கள் இறைவனுடைய வாக்கு எங்கள் மீது உண்மையாகி விட்டது; நிச்சயமாக நாம் (யாவரும் வேதனையைச்) சுவைப்பவர்கள் தாம்!

    37:31
  12. فَأَغْوَيْنَاكُمْ إِنَّا كُنَّا غَاوِينَ

    “(ஆம்) நாங்கள் உங்களை வழிகெடுத்தோம்; நிச்சயமாக நாங்களே வழிகெட்டுத்தான் இருந்தோம்.”

    37:32
  13. فَإِنَّهُمْ يَوْمَئِذٍ فِي الْعَذَابِ مُشْتَرِكُونَ

    ஆகவே, அந்நாளில் நிச்சயமாக அவர்கள் வேதனையில் கூட்டானவர்களாகவே இருப்பார்கள்.

    37:33
  14. إِنَّا كَذَٰلِكَ نَفْعَلُ بِالْمُجْرِمِينَ

    குற்றவாளிகளை இவ்வாறு தான் நாம் நிச்சயமாக நடத்துவோம்.

    37:34
  15. إِنَّهُمْ كَانُوا إِذَا قِيلَ لَهُمْ لَا إِلَٰهَ إِلَّا اللَّهُ يَسْتَكْبِرُونَ

    “அல்லாஹ்வைத் தவிர நாயன் இல்லை” என்று அவர்களுக்குக் கூறப்பட்டால், மெய்யாகவே அவர்கள் பெருமையடித்தவர்களாக இருந்தனர்.

    37:35
  16. وَيَقُولُونَ أَئِنَّا لَتَارِكُو آلِهَتِنَا لِشَاعِرٍ مَجْنُونٍ

    “ஒரு பைத்தியக்காரப் புலவருக்காக நாங்கள் மெய்யாக எங்கள் தெய்வங்களைக் கைவிட்டு விடுகிறவர்களா?” என்றும் அவர்கள் கூறுகிறார்கள்.

    37:36
  17. بَلْ جَاءَ بِالْحَقِّ وَصَدَّقَ الْمُرْسَلِينَ

    அப்படியல்ல! அவர் சத்தியத்தையே கொண்டு வந்திருக்கிறார்; அன்றியும் (தமக்கு முன்னர் வந்த) தூதர்களையும் உண்மைப்படுத்துகிறார்.

    37:37
  18. إِنَّكُمْ لَذَائِقُو الْعَذَابِ الْأَلِيمِ

    (இதை நிராகரிப்போராயின்) நிச்சயமாக நீங்கள் நோவினை தரும் வேதனையை அனுபவிப்பவர்கள் தாம்.

    37:38
  19. وَمَا تُجْزَوْنَ إِلَّا مَا كُنْتُمْ تَعْمَلُونَ

    ஆனால், நீங்கள் செய்து கொண்டிருந்தவற்றுக்கன்றி (வேறு) எதற்கும் நீங்கள் கூலி கொடுக்கப்படமாட்டீர்கள்.

    37:39
  20. إِلَّا عِبَادَ اللَّهِ الْمُخْلَصِينَ

    அல்லாஹ்வுடைய அந்தரங்க சுத்தியான அடியார்களோ (எனின்)-

    37:40

மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்