சூரா 37 ஸூரத்துஸ் ஸாஃப்ஃபாத் (அணிவகுப்புகள்)
-
فَسَاهَمَ فَكَانَ مِنَ الْمُدْحَضِينَ
அ(க்கப்பலிலுள்ள)வர்கள் சீட்டுக்குலுக்கிப் போட்டுப் பார்த்தனர் - இவர் தாம் குற்றமுள்ளவர் (என்று தீர்மானித்தனர்).
37:141 -
فَالْتَقَمَهُ الْحُوتُ وَهُوَ مُلِيمٌ
ஆகவே, (அவர்களுடைய) பழிப்புக்கிடமான நிலையில் (கடலில்) எறியப்பட வேண்டியவரானார்; ஒரு மீன் விழுங்கிற்று.
37:142 -
فَلَوْلَا أَنَّهُ كَانَ مِنَ الْمُسَبِّحِينَ
ஆனால் அவர் (மீன் வயிற்றினுள்) இறைவனைத் துதிசெய்து - தஸ்பீஹு செய்து - கொண்டிராவிட்டால் -
37:143 -
لَلَبِثَ فِي بَطْنِهِ إِلَىٰ يَوْمِ يُبْعَثُونَ
(மறுமையில் அவர்) எழுப்பப்படும் நாள்வரை, அதன் வயிற்றிலேயே தங்கியிருந்திருப்பார்.
37:144 -
فَنَبَذْنَاهُ بِالْعَرَاءِ وَهُوَ سَقِيمٌ
ஆனால், அவர் நோயுற்றிருந்த நிலையில், நாம் அவரை (மீன் வயிற்றிலிருந்து வெளியேற்றி) வெட்ட வெளியில் போட்டோம்.
37:145 -
وَأَنْبَتْنَا عَلَيْهِ شَجَرَةً مِنْ يَقْطِينٍ
அன்றியும் நாம் அவருக்கு மேல் ஒரு சுரைக்கொடியை முளைப்பித்(து நிழலிடுமாறு செய்)தோம்.
37:146 -
وَأَرْسَلْنَاهُ إِلَىٰ مِائَةِ أَلْفٍ أَوْ يَزِيدُونَ
மேலும், நாம் அவரை ஒரு நூறாயிரம் அல்லது அதற்கதிகமானவர்களிடம் அனுப்பி வைத்தோம்.
37:147 -
فَآمَنُوا فَمَتَّعْنَاهُمْ إِلَىٰ حِينٍ
ஆகவே அவர்கள் ஈமான் கொண்டார்கள்;ஆகையால் நாம் அவர்களை ஒரு காலம் வரை சுகிக்கச் செய்தோம்.
37:148 -
فَاسْتَفْتِهِمْ أَلِرَبِّكَ الْبَنَاتُ وَلَهُمُ الْبَنُونَ
(நபியே!) அவர்களிடம் கேளும்| உம் இறைவனுக்குப் பெண் மக்களையும் அவர்களுக்கு ஆண்மக்களையுமா (கற்பனை செய்கிறார்கள்) என்று.
37:149 -
أَمْ خَلَقْنَا الْمَلَائِكَةَ إِنَاثًا وَهُمْ شَاهِدُونَ
அல்லது நாம் மலக்குகளைப் பெண்களாகவா படைத்தோம்? (அதற்கு) அவர்கள் சாட்சிகளா?
37:150 -
أَلَا إِنَّهُمْ مِنْ إِفْكِهِمْ لَيَقُولُونَ
“அறிந்து கொள்க! நிச்சயமாக இவர்கள் தங்கள் கற்பனையில் தான் கூறுகின்றனர்.”
37:151 -
وَلَدَ اللَّهُ وَإِنَّهُمْ لَكَاذِبُونَ
“அல்லாஹ் பிள்ளைகளைப் பெற்றான்” (என்று கூறுபவர்கள்) நிச்சயமாகப் பொய்யர்களே!
37:152 -
أَصْطَفَى الْبَنَاتِ عَلَى الْبَنِينَ
(அன்றியும், அல்லாஹ்) அவன் ஆண்மக்களை விட்டுப் பெண்மக்களைத் தேர்ந்தெடுத்துக் கொண்டானா?
37:153 -
مَا لَكُمْ كَيْفَ تَحْكُمُونَ
உங்களுக்கு என்ன (நேர்ந்து விட்டது)? எவ்வாறு நீங்கள் தீர்மானிக்கிறீர்கள்?
37:154 -
أَفَلَا تَذَكَّرُونَ
நீங்கள் சிந்தித்துணர மாட்டீர்களா?
37:155 -
أَمْ لَكُمْ سُلْطَانٌ مُبِينٌ
அல்லது உங்களிடம் தெளிவான ஆதாரம் எதுவும் இருக்கிறதா?
37:156 -
فَأْتُوا بِكِتَابِكُمْ إِنْ كُنْتُمْ صَادِقِينَ
நீங்கள் உண்மையாளர்களாயிருப்பின், உங்கள் வேத (ஆதார)த்தைக் கொண்டு வாருங்கள்.
37:157 -
وَجَعَلُوا بَيْنَهُ وَبَيْنَ الْجِنَّةِ نَسَبًا ۚ وَلَقَدْ عَلِمَتِ الْجِنَّةُ إِنَّهُمْ لَمُحْضَرُونَ
அன்றியும் இவர்கள் அல்லாஹ்வுக்கும் ஜின்களுக்குமிடையில் (வம்சாவளி) உறவை (கற்பனையாக) ஏற்படுத்துகின்றனர்; ஆனால் ஜின்களும் (மறுமையில் இறைவன் முன்) நிச்சயமாகக் கொண்டுவரப்படுவார்கள் என்பதை அறிந்தேயிருக்கிறார்கள்.
37:158 -
سُبْحَانَ اللَّهِ عَمَّا يَصِفُونَ
எனவே, அவர்கள் இவ்வாறு வர்ணிப்பதை விட்டும் அல்லாஹ் மிகவும் பரிசுத்தமானவன்.
37:159 -
إِلَّا عِبَادَ اللَّهِ الْمُخْلَصِينَ
அந்தரங்க சுத்தியான அல்லாஹ்வின் அடியார்களைத் தவிர்த்து.
37:160
மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்