சூரா 37 ஸூரத்துஸ் ஸாஃப்ஃபாத் (அணிவகுப்புகள்)

  1. لِمِثْلِ هَٰذَا فَلْيَعْمَلِ الْعَامِلُونَ

    எனவே பாடுபடுபவர்கள் இது போன்றதற்காகவே பாடுபடவேண்டும்.

    37:61
  2. أَذَٰلِكَ خَيْرٌ نُزُلًا أَمْ شَجَرَةُ الزَّقُّومِ

    அது சிறப்பான விருந்தா? அல்லது (நரகத்திலிருக்கும் கள்ளி) “ஜக்கூம்” என்ற மரமா?

    37:62
  3. إِنَّا جَعَلْنَاهَا فِتْنَةً لِلظَّالِمِينَ

    நிச்சயமாக நாம் அதை அநியாயக்காரர்களுக்கு ஒரு சோதனையாகவே செய்திருக்கிறோம்.

    37:63
  4. إِنَّهَا شَجَرَةٌ تَخْرُجُ فِي أَصْلِ الْجَحِيمِ

    மெய்யாகவே அது நரகத்தின் அடித்தளத்திலிருந்து வளரும் மரமாகும்.

    37:64
  5. طَلْعُهَا كَأَنَّهُ رُءُوسُ الشَّيَاطِينِ

    அதன் பாளைகள் ஷைத்தான்களின் தலைகளைப் போலிருக்கும்.

    37:65
  6. فَإِنَّهُمْ لَآكِلُونَ مِنْهَا فَمَالِئُونَ مِنْهَا الْبُطُونَ

    நிச்சயமாக, அவர்கள் அதிலிருந்தே புசிப்பார்கள்; அதைக்கொண்டு தங்களுடைய வயிறுகளை நிரப்பிக் கொள்வார்கள்.

    37:66
  7. ثُمَّ إِنَّ لَهُمْ عَلَيْهَا لَشَوْبًا مِنْ حَمِيمٍ

    பின்னர், நிச்சயமாக அவர்களுக்குக் குடிக்க, கொதிக்கும் நீர் கொடுக்கப்படும்.

    37:67
  8. ثُمَّ إِنَّ مَرْجِعَهُمْ لَإِلَى الْجَحِيمِ

    அதன் பின்னர் அவர்கள் மீளும் தலம் நிச்சயமாக நரகம்தான்.

    37:68
  9. إِنَّهُمْ أَلْفَوْا آبَاءَهُمْ ضَالِّينَ

    நிச்சயமாக அவர்கள் தம் மூதாதையர்களை வழி கேட்டிலேயே கண்டார்கள்.

    37:69
  10. فَهُمْ عَلَىٰ آثَارِهِمْ يُهْرَعُونَ

    ஆகையால், அவர்களுடைய அடிச்சுவடுகள் மீதே இவர்களும் விரைந்தார்கள்.

    37:70
  11. وَلَقَدْ ضَلَّ قَبْلَهُمْ أَكْثَرُ الْأَوَّلِينَ

    இன்னும், இவர்களுக்கு முன்னரும் அப்பண்டைய மக்களில் பெரும்பாலோர் வழி கெட்டிருந்தனர்.

    37:71
  12. وَلَقَدْ أَرْسَلْنَا فِيهِمْ مُنْذِرِينَ

    மேலும், நிச்சயமாக நாம் அவர்களிடையே அச்சமூட்டி எச்சரிப்பவர்களை அனுப்பினோம்.

    37:72
  13. فَانْظُرْ كَيْفَ كَانَ عَاقِبَةُ الْمُنْذَرِينَ

    பிறகு, அவ்வாறு அச்சமூட்டி எச்சரிக்கப்பட்டவர்களின் முடிவு என்னவாயிற்றென்று (நபியே!) நீர் பாரும்.

    37:73
  14. إِلَّا عِبَادَ اللَّهِ الْمُخْلَصِينَ

    அல்லாஹ்வுடைய அந்தரங்க சுத்தியான அடியார்களைத் தவிர.

    37:74
  15. وَلَقَدْ نَادَانَا نُوحٌ فَلَنِعْمَ الْمُجِيبُونَ

    அன்றியும் நூஹ் நம்மைப் பிரார்த்தித்தார்; பிரார்த்தனைக்கு பதிலளிப்பதில் நாமே சிறந்தோர் ஆவோம்.

    37:75
  16. وَنَجَّيْنَاهُ وَأَهْلَهُ مِنَ الْكَرْبِ الْعَظِيمِ

    ஆகவே, நாம் அவரையும் அவருடைய குடும்பத்தாரையும் மிகப்பெருங் கஷ்டத்திலிருந்து பாதுகாத்தோம்.

    37:76
  17. وَجَعَلْنَا ذُرِّيَّتَهُ هُمُ الْبَاقِينَ

    மேலும், அவர்களுடைய சந்ததியரை (பிரளயத்திலிருந்து காப்பாற்றி பிற்காலம்) நிலைத்திருக்கும்படி செய்தோம்.

    37:77
  18. وَتَرَكْنَا عَلَيْهِ فِي الْآخِرِينَ

    மேலும், அவருக்காகப் பிற்காலத்தவர்க்கு (ஒரு ஞாபகார்த்தத்தை) விட்டு வைத்தோம்.

    37:78
  19. سَلَامٌ عَلَىٰ نُوحٍ فِي الْعَالَمِينَ

    “ஸலாமுன் அலாநூஹ்” - அகிலங்கள் எங்கும் நூஹ் மீது ஸலாம் உண்டாவதாக.

    37:79
  20. إِنَّا كَذَٰلِكَ نَجْزِي الْمُحْسِنِينَ

    இவ்வாறே, நன்மை செய்வோருக்கு நிச்சயமாக நாம் கூலி கொடுக்கிறோம்.

    37:80

மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்