சூரா 37 ஸூரத்துஸ் ஸாஃப்ஃபாத் (அணிவகுப்புகள்)
-
أُولَٰئِكَ لَهُمْ رِزْقٌ مَعْلُومٌ
அவர்களுக்கு அறியப்பட்டுள்ள உணவு அவர்களுக்கு இருக்கிறது.
37:41 -
فَوَاكِهُ ۖ وَهُمْ مُكْرَمُونَ
கனி வகைகள் (அளிக்கப்படும்), இன்னும் அவர்கள் கண்ணியப்படுத்தப்படுவார்கள்;
37:42 -
فِي جَنَّاتِ النَّعِيمِ
இன்பம் அளிக்கும் சுவர்க்கங்களில் -
37:43 -
عَلَىٰ سُرُرٍ مُتَقَابِلِينَ
ஒருவரையொருவர் முன்னோக்கியவாறு கட்டில்கள் மீது (அமர்ந்திருப்பார்கள்).
37:44 -
يُطَافُ عَلَيْهِمْ بِكَأْسٍ مِنْ مَعِينٍ
தெளிவான பானம் நிறைந்த குவளைகள் அவர்களைச் சுற்றி கொண்டுவரும்.
37:45 -
بَيْضَاءَ لَذَّةٍ لِلشَّارِبِينَ
(அது) மிக்க வெண்மையானது; அருந்துவோருக்கு மதுரமானது.
37:46 -
لَا فِيهَا غَوْلٌ وَلَا هُمْ عَنْهَا يُنْزَفُونَ
அதில் கெடுதியும் இராது; அதனால் அவர்கள் புத்தி தடுமாறுபவர்களும் அல்லர்.
37:47 -
وَعِنْدَهُمْ قَاصِرَاتُ الطَّرْفِ عِينٌ
இன்னும், அவர்களிடத்தில் அடக்கமான பார்வையும், நெடிய கண்களும் கொண்ட (அமர கன்னியரும்) இருப்பார்கள்.
37:48 -
كَأَنَّهُنَّ بَيْضٌ مَكْنُونٌ
(தூய்மையில் அவர்கள் சிப்பிகளில்) மறைக்கப்பட்ட முத்துக்களைப் போல் இருப்பார்கள்.
37:49 -
فَأَقْبَلَ بَعْضُهُمْ عَلَىٰ بَعْضٍ يَتَسَاءَلُونَ
(அப்பொழுது) அவர்களில் ஒரு சிலர் சிலரை முன்னோக்கியவாறு பேசிக் கொண்டிருப்பார்கள்.
37:50 -
قَالَ قَائِلٌ مِنْهُمْ إِنِّي كَانَ لِي قَرِينٌ
அவர்களில் ஒருவர்; எனக்கு (இம்மையில்) உற்ற நண்பன் ஒருவன் இருந்தான் எனக் கூறுவார்.
37:51 -
يَقُولُ أَإِنَّكَ لَمِنَ الْمُصَدِّقِينَ
(மரணத்திற்குப் பின் உயிர்ப்பிக்கப் படுவோம் என்பதை) உண்மையென ஏற்பவர்களில் நிச்சயமாக நீயும் ஒருவனா எனக் கேட்டான்.
37:52 -
أَإِذَا مِتْنَا وَكُنَّا تُرَابًا وَعِظَامًا أَإِنَّا لَمَدِينُونَ
“நாம் இறந்து மண்ணாகவும், எலும்புகளாகவுமாகி விட்டபின், (மீண்டும் நாம் உயிர்ப்பிக்கப்பட்டு) கூலி வழங்கப்பெறுவோமா?” என்றும் கேட்டான்.)
37:53 -
قَالَ هَلْ أَنْتُمْ مُطَّلِعُونَ
(அவ்வாறு கூறியவனை) “நீங்கள் பார்க்(க விரும்பு)கிறீர்களா?” என்றும் கூறுவார்.
37:54 -
فَاطَّلَعَ فَرَآهُ فِي سَوَاءِ الْجَحِيمِ
அவர் (கீழே) நோக்கினார்; அவனை நரகத்தின் நடுவில் பார்த்தார்.
37:55 -
قَالَ تَاللَّهِ إِنْ كِدْتَ لَتُرْدِينِ
(அவனிடம்) “அல்லாஹ்வின் மீது சத்தியமாக! நீ என்னை அழித்துவிட முற்பட்டாயே!
37:56 -
وَلَوْلَا نِعْمَةُ رَبِّي لَكُنْتُ مِنَ الْمُحْضَرِينَ
“என் இறைவனுடைய அருள் இல்லாதிருந்தால், நானும் (நரகத்திற்குக்) கொண்டு வரப்பட்டவர்களில் ஒருவனாகியிருப்பேன்.
37:57 -
أَفَمَا نَحْنُ بِمَيِّتِينَ
“(மற்றொரு முறையும்) நாம் இறந்து விடுவோமா?
37:58 -
إِلَّا مَوْتَتَنَا الْأُولَىٰ وَمَا نَحْنُ بِمُعَذَّبِينَ
“(இல்லை) நமக்கு முந்திய மரணத்தைத் தவிர வேறில்லை; அன்றியும், நாம் வேதனை செய்யப்படுபவர்களும் அல்லர்” என்று கூறுவார்.
37:59 -
إِنَّ هَٰذَا لَهُوَ الْفَوْزُ الْعَظِيمُ
நிச்சயமாக இதுதான் மகத்தான வெற்றியாகும்.
37:60
மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்