சூரா 37 ஸூரத்துஸ் ஸாஃப்ஃபாத் (அணிவகுப்புகள்)

  1. إِنَّهُ مِنْ عِبَادِنَا الْمُؤْمِنِينَ

    நிச்சயமாக அவர் (நூஹ்) முஃமின்களான நம் நல்லடியார்களில் நின்றுமுள்ளவர்.

    37:81
  2. ثُمَّ أَغْرَقْنَا الْآخَرِينَ

    பிறகு நாம் மற்றவர்களை (வெள்ளத்தில்) மூழ்கடித்தோம்.

    37:82
  3. وَإِنَّ مِنْ شِيعَتِهِ لَإِبْرَاهِيمَ

    நிச்சயமாக, இப்ராஹீமும் அவருடைய வழியைப் பின்பற்றியவர்களில் ஒருவர் தாம்.

    37:83
  4. إِذْ جَاءَ رَبَّهُ بِقَلْبٍ سَلِيمٍ

    அவர் தூய நெஞ்சத்துடன் தம்முடைய இறைவனிடம் வந்தபோது (நபியே! நீர் நினைவு கூர்வீராக).

    37:84
  5. إِذْ قَالَ لِأَبِيهِ وَقَوْمِهِ مَاذَا تَعْبُدُونَ

    அவர் தம் தந்தையையும், தம் சமூகத்தாரையும் நோக்கி “நீங்கள் எதனை வணங்குகிறீர்கள்? எனக் கேட்ட போது,

    37:85
  6. أَئِفْكًا آلِهَةً دُونَ اللَّهِ تُرِيدُونَ

    “அல்லாஹ்வையன்றி பொய்யான தெய்வங்களையா நீங்கள் விரும்புகிறீர்கள்?”

    37:86
  7. فَمَا ظَنُّكُمْ بِرَبِّ الْعَالَمِينَ

    “அவ்வாறாயின் அகிலங்களுக்கெல்லாம் இறைவன் பற்றி உங்கள் எண்ணம் தான் என்ன?” (என்று கேட்டார்.)

    37:87
  8. فَنَظَرَ نَظْرَةً فِي النُّجُومِ

    பின்னர் அவர் நட்சத்திரங்களை ஒரு பார்வை பார்த்தார்.

    37:88
  9. فَقَالَ إِنِّي سَقِيمٌ

    “நிச்சயமாக நாம் நோயாளியாக இருக்கிறேன்” என்றும் கூறினார்.

    37:89
  10. فَتَوَلَّوْا عَنْهُ مُدْبِرِينَ

    எனவே அவரை விட்டும் அ(வருடைய சமூகத்த)வர்கள் திரும்பிச் சென்றனர்.

    37:90
  11. فَرَاغَ إِلَىٰ آلِهَتِهِمْ فَقَالَ أَلَا تَأْكُلُونَ

    அப்பால் அவர்களுடைய தெய்வங்களின் பால் அவர் சென்று; “(உங்களுக்கு முன் படைக்கப்பட்டுள்ள உணவுகளை) நீங்கள் உண்ணமாட்டீர்களா?” என்று கூறினார்.

    37:91
  12. مَا لَكُمْ لَا تَنْطِقُونَ

    “உங்களுக்கு என்ன (நேர்ந்தது)? நீங்கள் ஏன் பேசுகிறீர்களில்லை?” (என்றும் கேட்டார்.)

    37:92
  13. فَرَاغَ عَلَيْهِمْ ضَرْبًا بِالْيَمِينِ

    பின் அவர் அவற்றின் பக்கம் திரும்பி வலக்கையால் அவற்றை அடித்து (உடைத்து) விட்டார்.

    37:93
  14. فَأَقْبَلُوا إِلَيْهِ يَزِفُّونَ

    (அவற்றை வணங்குபவர்கள்) அவர்பால் விரைந்து வந்தார்கள்.

    37:94
  15. قَالَ أَتَعْبُدُونَ مَا تَنْحِتُونَ

    அவர் கூறினார்! “நீங்கள் செதுக்கிய இவற்றையா வணங்குகிறீர்கள்?”

    37:95
  16. وَاللَّهُ خَلَقَكُمْ وَمَا تَعْمَلُونَ

    “உங்களையும், நீங்கள் செய்த(இ)வற்றையும், அல்லாஹ்வே படைத்திருக்கின்றான்.”

    37:96
  17. قَالُوا ابْنُوا لَهُ بُنْيَانًا فَأَلْقُوهُ فِي الْجَحِيمِ

    அவர்கள் கூறினார்கள்| “இவருக்காக(ப் பெரியதொரு நெருப்புக்) கிடங்கை அமைத்து எரிநெருப்பில் அவரை எறிந்து விடுங்கள்.”

    37:97
  18. فَأَرَادُوا بِهِ كَيْدًا فَجَعَلْنَاهُمُ الْأَسْفَلِينَ

    (இவ்வாறாக) அவர்கள் அவருக்குச் சதி செய்ய நாடினார்கள்; ஆனால், நாம் அவர்களையே இழிவுபடுத்தி விட்டோம்.

    37:98
  19. وَقَالَ إِنِّي ذَاهِبٌ إِلَىٰ رَبِّي سَيَهْدِينِ

    மேலும், அவர் கூறினார்| “நிச்சயமாக நாம் என்னுடைய இறைவனிடம் செல்பவன்; திட்டமாக அவன் எனக்கு நேர் வழியைக் காண்பிப்பான்.”

    37:99
  20. رَبِّ هَبْ لِي مِنَ الصَّالِحِينَ

    “என்னுடைய இறைவா! நீ எனக்கு ஸாலிஹான ஒரு நன்மகனைத் தந்தருள்வாயாக” (என்று பிரார்த்தித்தார்).

    37:100

மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்