சூரா 70 ஸூரத்துல் மஆரிஜ் (உயர்வழிகள்), அயாஹ் 1 – 18

  1. سَأَلَ سَائِلٌ بِعَذَابٍ وَاقِعٍ

    (நிராகரிப்போருக்கு) சம்பவிக்கப் போகும் வேதனை பற்றி கேள்வி கேட்பவன் ஒருவன் (ஏளனமாகக்) கேட்கிறான்.

    70:1
  2. لِلْكَافِرِينَ لَيْسَ لَهُ دَافِعٌ

    காஃபிர்களுக்கு (அது ஏற்படும்போது) அதனைத் தடுப்பவர் எவருமில்லை.

    70:2
  3. مِنَ اللَّهِ ذِي الْمَعَارِجِ

    (அவ்வேதனை) உயர் வழிகளையுடைய அல்லாஹ்வினால் (ஏற்படும்).

    70:3
  4. تَعْرُجُ الْمَلَائِكَةُ وَالرُّوحُ إِلَيْهِ فِي يَوْمٍ كَانَ مِقْدَارُهُ خَمْسِينَ أَلْفَ سَنَةٍ

    ஒரு நாள் மலக்குகளும், (ஜிப்ரீலாகிய) அவ்வான்மாவும், அவனிடம் ஏறிச் செல்வார்கள்; அ(த்தினத்)தின் அளவு ஐம்பதினாயிரம் ஆண்டுகள் (சமமாக) இருக்கும்.

    70:4
  5. فَاصْبِرْ صَبْرًا جَمِيلًا

    எனவே நீர் அழகிய பொறுமையுடன் பொறுப்பீராக.

    70:5
  6. إِنَّهُمْ يَرَوْنَهُ بَعِيدًا

    நிச்சயமாக அவர்கள் அதை வெகு தூரமாகக் காண்கின்றனர்.

    70:6
  7. وَنَرَاهُ قَرِيبًا

    ஆனால், நாமோ அதனை வெகு சமீபமாகக் காண்கிறோம்.

    70:7
  8. يَوْمَ تَكُونُ السَّمَاءُ كَالْمُهْلِ

    வானம் உருக்கப்பட்ட செம்பைப் போல் ஆகிவிடும் நாளில்-

    70:8
  9. وَتَكُونُ الْجِبَالُ كَالْعِهْنِ

    இன்னும், மலைகள் பஞ்சைப் போல் ஆகிவிடும் (நாளில்)-

    70:9
  10. وَلَا يَسْأَلُ حَمِيمٌ حَمِيمًا

    (அனுதாபமுடையவனாக இருந்த) ஒரு நண்பன் மற்றொரு நண்பனை பற்றி (அனுதாபத்துடன்) விசாரிக்கமாட்டான்.

    70:10
  11. يُبَصَّرُونَهُمْ ۚ يَوَدُّ الْمُجْرِمُ لَوْ يَفْتَدِي مِنْ عَذَابِ يَوْمِئِذٍ بِبَنِيهِ

    அவர்கள் நேருக்கு நேர் காண்பார்கள், (ஆனால் விசாரித்துக் கொள்ள மாட்டார்கள்); அந்நாளின் வேதனைக்கு ஈடாகக் குற்றவாளி ஈடுகொடுக்கப் பிரியப்படுவான்; தன் மக்களையும்-

    70:11
  12. وَصَاحِبَتِهِ وَأَخِيهِ

    தன் மனைவியையும், தன் சகோதரனையும்-

    70:12
  13. وَفَصِيلَتِهِ الَّتِي تُؤْوِيهِ

    அவனை அரவணைத்துக் கொண்டிருந்த அவனுடைய சுற்றத்தாரையும்-

    70:13
  14. وَمَنْ فِي الْأَرْضِ جَمِيعًا ثُمَّ يُنْجِيهِ

    இன்னும் பூமியிலுள்ள அனைவரையும் (ஈடுகொடுத்துத்) தன்னைக் காப்பாற்றிக் கொள்ள (பிரியப்படுவான்).

    70:14
  15. كَلَّا ۖ إِنَّهَا لَظَىٰ

    அவ்வாறு (ஆவது) இல்லை; ஏனெனில் நிச்சயமாக அ(ந்நரகமாவ)து கொழுந்துவிட்டு எரியும் நெருப்பாகும்.

    70:15
  16. نَزَّاعَةً لِلشَّوَىٰ

    அது (சிரசுத்) தோல்களை (எரித்து) கழற்றி விடும்.

    70:16
  17. تَدْعُو مَنْ أَدْبَرَ وَتَوَلَّىٰ

    (நேர்வழியைப்) புறக்கணித்துப் புறங்காட்டிச் சென்றோரை அ(ந்நரகத்தீயான)து அழைக்கும்.

    70:17
  18. وَجَمَعَ فَأَوْعَىٰ

    அன்றியும், பொருளைச் சேகரித்து, பிறகு (அதைத் தக்கபடி செலவு செய்யாமல்) காத்துக் கொண்டானே (அவனையும் அது அழைக்கும்)

    70:18

மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்