முஸ்ஹப், பக்கம் 450
-
فَلَمَّا أَسْلَمَا وَتَلَّهُ لِلْجَبِينِ
ஆகவே, அவ்விருவரும் (இறைவன் கட்டளைக்கு) முற்றிலும் வழிப்பட்டு, (இப்ராஹீம்) மகனைப் பலியிட முகம் குப்புறக்கிடத்திய போது;
37:103 -
وَنَادَيْنَاهُ أَنْ يَا إِبْرَاهِيمُ
நாம் அவரை “யா இப்ராஹீம்!” என்றழைத்தோம்.
37:104 -
قَدْ صَدَّقْتَ الرُّؤْيَا ۚ إِنَّا كَذَٰلِكَ نَجْزِي الْمُحْسِنِينَ
“திடமாக நீர் (கண்ட) கனவை மெய்ப்படுத்தினீர். நிச்சயமாக நன்மை செய்வோருக்கு நாம் இவ்வாறே கூலி கொடுத்திருக்கிறோம்.
37:105 -
إِنَّ هَٰذَا لَهُوَ الْبَلَاءُ الْمُبِينُ
“நிச்சயமாக இது தெளிவான ஒரு பெருஞ் சோதனையாகும்.”
37:106 -
وَفَدَيْنَاهُ بِذِبْحٍ عَظِيمٍ
ஆயினும், நாம் ஒரு மகத்தான பலியைக் கொண்டு அவருக்குப் பகரமாக்கினோம்.
37:107 -
وَتَرَكْنَا عَلَيْهِ فِي الْآخِرِينَ
இன்னும் அவருக்காகப் பிற்காலத்தவருக்கு (ஒரு ஞாபகார்த்தத்தை) விட்டு வைத்தோம்|
37:108 -
سَلَامٌ عَلَىٰ إِبْرَاهِيمَ
“ஸலாமுன் அலா இப்ராஹீம்” (இப்ராஹீம் மீது ஸலாம் உண்டாவதாக)!
37:109 -
كَذَٰلِكَ نَجْزِي الْمُحْسِنِينَ
இவ்வாறே, நன்மை செய்வோருக்கு, நாம் கூலி கொடுக்கிறோம்.
37:110 -
إِنَّهُ مِنْ عِبَادِنَا الْمُؤْمِنِينَ
நிச்சயமாக அவர் முஃமின்களான நம் (நல்)லடியார்களில் நின்றுமுள்ளவர்.
37:111 -
وَبَشَّرْنَاهُ بِإِسْحَاقَ نَبِيًّا مِنَ الصَّالِحِينَ
ஸாலிஹானவர்களிலுள்ளவரான நபி இஸ்ஹாக்கை அவருக்கு இன்னும் (மகனாகத் தருவதாக) நாம் நன்மாராயம் கூறினோம்.
37:112 -
وَبَارَكْنَا عَلَيْهِ وَعَلَىٰ إِسْحَاقَ ۚ وَمِنْ ذُرِّيَّتِهِمَا مُحْسِنٌ وَظَالِمٌ لِنَفْسِهِ مُبِينٌ
இன்னும் நாம் அவர் மீதும் இஸ்ஹாக் மீதும் பாக்கியங்கள் பொழிந்தோம்; மேலும் அவ்விருவருடைய சந்ததியரில் நன்மை செய்பவர்களும் இருக்கின்றார்கள்; அன்றியும் தமக்குத் தாமே பகிரங்கமாக அநியாயம் செய்து கொள்வோரும் இருக்கின்றனர்.
37:113 -
وَلَقَدْ مَنَنَّا عَلَىٰ مُوسَىٰ وَهَارُونَ
மேலும், மூஸா, ஹாரூன் ஆகியவர்கள் மீதும் நாம் நிச்சயமாக அருள் புரிந்தோம்.
37:114 -
وَنَجَّيْنَاهُمَا وَقَوْمَهُمَا مِنَ الْكَرْبِ الْعَظِيمِ
அவ்விருவரையும், அவ்விருவருடைய சமூகத்தாரையும் மிகப்பெரும் துன்பத்திலிருந்து இரட்சித்தோம்.
37:115 -
وَنَصَرْنَاهُمْ فَكَانُوا هُمُ الْغَالِبِينَ
மேலும், நாம் அவர்களுக்கு உதவி செய்தோம்; எனவே அவர்கள் தாம் வெற்றி பெற்றோரானார்கள்.
37:116 -
وَآتَيْنَاهُمَا الْكِتَابَ الْمُسْتَبِينَ
அவ்விருவருக்கும் நாம் துலக்கமான வேதத்தைக் கொடுத்தோம்.
37:117 -
وَهَدَيْنَاهُمَا الصِّرَاطَ الْمُسْتَقِيمَ
இன்னும், நாம் அவ்விருவருக்கும் நேர்வழியைக் காண்பித்தோம்.
37:118 -
وَتَرَكْنَا عَلَيْهِمَا فِي الْآخِرِينَ
இன்னும் அவ்விருவருக்குமாகப் பிற்காலத்தவருக்கு (ஒரு ஞாபகார்த்தத்தை) விட்டு வைத்தோம்;
37:119 -
سَلَامٌ عَلَىٰ مُوسَىٰ وَهَارُونَ
“ஸலாமுன் அலா மூஸா வஹாரூன்” மூஸாவுக்கும், ஹாரூனுக்கும் ஸலாம் உண்டாவதாக.
37:120 -
إِنَّا كَذَٰلِكَ نَجْزِي الْمُحْسِنِينَ
இவ்வாறே நன்மை செய்வோருக்கு நாம் கூலி கொடுக்கிறோம்.
37:121 -
إِنَّهُمَا مِنْ عِبَادِنَا الْمُؤْمِنِينَ
நிச்சயமாக அவ்விருவரும் முஃமின்களான நம் (நல்)லடியார்களில் நின்றுமுள்ளவர்கள்.
37:122 -
وَإِنَّ إِلْيَاسَ لَمِنَ الْمُرْسَلِينَ
மேலும், நிச்சயமாக இல்யாஸும் முர்ஸல்(களில் - தூதராக அனுப்பப்பட்டவர்)களில் ஒருவர் தாம்.
37:123 -
إِذْ قَالَ لِقَوْمِهِ أَلَا تَتَّقُونَ
அவர் தம் சமூகத்தவரிடம்| “நீங்கள் (இறைவனை) அஞ்ச மாட்டீர்களா?” என்று (போதித்துச்) சொல்லியதை (நினைவு கூர்வீராக).
37:124 -
أَتَدْعُونَ بَعْلًا وَتَذَرُونَ أَحْسَنَ الْخَالِقِينَ
“நீங்கள் படைப்பவர்களில் மிகச் சிறப்பானவனை விட்டு விட்டு “பஃலு” (எனும் சிலையை) வணங்குகிறீர்களா?
37:125 -
اللَّهَ رَبَّكُمْ وَرَبَّ آبَائِكُمُ الْأَوَّلِينَ
“அல்லாஹ்தான் - உங்களுடைய இறைவனும், உங்களுடைய முன் சென்ற மூதாதையர்களின் இறைவனும் ஆவான்.”
37:126
மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்