முஸ்ஹப், பக்கம் 528

  1. وَأَنَّهُ خَلَقَ الزَّوْجَيْنِ الذَّكَرَ وَالْأُنْثَىٰ

    இன்னும், நிச்சயமாக அவனே ஆண், பெண் என்று ஜோடியாகப் படைத்தான் -

    53:45
  2. مِنْ نُطْفَةٍ إِذَا تُمْنَىٰ

    (கர்ப்பக் கோளறையில்) செலுத்தப் படும் போதுள்ள இந்திரியத் துளியைக் கொண்டு.

    53:46
  3. وَأَنَّ عَلَيْهِ النَّشْأَةَ الْأُخْرَىٰ

    நிச்சயமாக, மறுமுறை உயிர் கொடுத்து எழுப்புவதும், அவன் மீதே இருக்கிறது.

    53:47
  4. وَأَنَّهُ هُوَ أَغْنَىٰ وَأَقْنَىٰ

    நிச்சயமாக அவனே தேவையறச் செய்து சீமானாக்குகிறான்.

    53:48
  5. وَأَنَّهُ هُوَ رَبُّ الشِّعْرَىٰ

    நிச்சயமாக அவன் தான் (இவர்கள் வணங்கும்) ஷிஃரா (எனும் கோளத்திற்கும்) இறைவன்.

    53:49
  6. وَأَنَّهُ أَهْلَكَ عَادًا الْأُولَىٰ

    நிச்சயமாக முந்திய ஆ(து கூட்டத்)தை அழித்தவனும் அவன்தான்.

    53:50
  7. وَثَمُودَ فَمَا أَبْقَىٰ

    “ஸமூது” (சமூகத்தாரையும் அழித்தவன் அவனே); எனவே, (அவர்களில் எவரையும் மிஞ்சுமாறு) விடவில்லை.

    53:51
  8. وَقَوْمَ نُوحٍ مِنْ قَبْلُ ۖ إِنَّهُمْ كَانُوا هُمْ أَظْلَمَ وَأَطْغَىٰ

    இவர்களுக்கு முன்னர் இருந்த நூஹுவுடைய சமூகத்தாரையும் (அவன் தான் அழித்தான்,) நிச்சயமாக அவர்கள் பெரும் அநியாயக் காரர்களாகவும், அட்டூழியம் செய்தவர்களாகவும் இருந்தனர்.

    53:52
  9. وَالْمُؤْتَفِكَةَ أَهْوَىٰ

    அன்றியும், அவனே (லூத் சமூகத்தார் வாழ்ந்திருந்த) ஊர்களான முஃதஃபிகாவையும் அழித்தான்.

    53:53
  10. فَغَشَّاهَا مَا غَشَّىٰ

    அவ்வூர்களைச் சூழ வேண்டிய (தண்டனை) சூழ்ந்து கொண்டது.

    53:54
  11. فَبِأَيِّ آلَاءِ رَبِّكَ تَتَمَارَىٰ

    எனவே, (மனிதனே!) உன்னுடைய இறைவனின் அருட் கொடைகளில் எதை நீ சந்தேகிக்கிறாய்?

    53:55
  12. هَٰذَا نَذِيرٌ مِنَ النُّذُرِ الْأُولَىٰ

    இவர் முந்திய எச்சரிக்கையாளர்களி(ன் வரிசையி)லுள்ள எச்சரிக்கையாளர் தாம்.

    53:56
  13. أَزِفَتِ الْآزِفَةُ

    நெருங்கி வர வேண்டியது (அடுத்து) நெருங்கி விட்டது.

    53:57
  14. لَيْسَ لَهَا مِنْ دُونِ اللَّهِ كَاشِفَةٌ

    (அதற்குரிய நேரத்தில்) அல்லாஹ்வைத் தவிர அதை வெளியாக்குபவர் எவரும் இல்லை.

    53:58
  15. أَفَمِنْ هَٰذَا الْحَدِيثِ تَعْجَبُونَ

    இச் செய்தியிலிருந்து நீங்கள் ஆச்சரியப்படுகிறீர்களா?

    53:59
  16. وَتَضْحَكُونَ وَلَا تَبْكُونَ

    (இதனைப் பற்றி) நீங்கள் சிரிக்கின்றீர்களா? நீங்கள் அழாமலும் இருக்கின்றீர்களா?

    53:60
  17. وَأَنْتُمْ سَامِدُونَ

    அலட்சியமாகவும் நீங்கள் இருக்கின்றீர்கள்.

    53:61
  18. فَاسْجُدُوا لِلَّهِ وَاعْبُدُوا ۩

    ஆகவே நீங்கள் அல்லாஹ்வுக்கு ஸுஜூது செய்யுங்கள், அவனையே வணங்குங்கள்.

    53:62
  19. اقْتَرَبَتِ السَّاعَةُ وَانْشَقَّ الْقَمَرُ

    (இறுதி) நேரம் நெருங்கி விட்டது; சந்திரனும் பிளந்து விட்டது.

    54:1
  20. وَإِنْ يَرَوْا آيَةً يُعْرِضُوا وَيَقُولُوا سِحْرٌ مُسْتَمِرٌّ

    எனினும், அவர்கள் ஓர் அத்தாட்சியைப் பார்த்தால், (அதைப்) புறக்கணித்து விடுகிறார்கள்; “இது வழமையாக நடைபெறும் சூனியம் தான்” என்றும் கூறுகிறார்கள்.

    54:2
  21. وَكَذَّبُوا وَاتَّبَعُوا أَهْوَاءَهُمْ ۚ وَكُلُّ أَمْرٍ مُسْتَقِرٌّ

    அன்றியும், அவர்கள் (காண்பிக்கப் பெறும் அத்தாட்சிகளைப்) பொய்ப்பிக்க முற்படுகின்றனர்; மேலும் தங்கள் இச்சைகளையே பின்பற்றுகின்றனர், ஆயினும் ஒவ்வொரு காரியமும் (அதற்கான நிலையில்) உறுதிப்பட்டே விடும்.

    54:3
  22. وَلَقَدْ جَاءَهُمْ مِنَ الْأَنْبَاءِ مَا فِيهِ مُزْدَجَرٌ

    அச்சுறுத்தலுள்ள பல செய்திகள் திடமாக (முன்னரே) அவர்களிடம் வந்திருக்கின்றன.

    54:4
  23. حِكْمَةٌ بَالِغَةٌ ۖ فَمَا تُغْنِ النُّذُرُ

    நிறைவான ஞானம் உடையவை - ஆனால் (அவர்களுக்கு அவற்றின்) எச்சரிக்கைகள் பயனளிக்கவில்லை.

    54:5
  24. فَتَوَلَّ عَنْهُمْ ۘ يَوْمَ يَدْعُ الدَّاعِ إِلَىٰ شَيْءٍ نُكُرٍ

    ஆகையால் (நபியே!) அவர்களை விட்டும் நீர் திரும்பி விடும்; (அவர்களுக்கு) வெறுப்பான (கேள்வி கணக்கு) விஷயத்திற்காக அழைப்பவர் (அவர்களை) அழைக்கும் நாளில்|

    54:6

மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்