சூரா 26 ஸூரத்துஷ்ஷுஃரா (கவிஞர்கள்)

  1. لَا يُؤْمِنُونَ بِهِ حَتَّىٰ يَرَوُا الْعَذَابَ الْأَلِيمَ

    நோவினை செய்யும் வேதனையைக் காணும் வரை, அவர்கள் அதில் நம்பிக்கை கொள்ள மாட்டார்கள்.

    26:201
  2. فَيَأْتِيَهُمْ بَغْتَةً وَهُمْ لَا يَشْعُرُونَ

    எனவே, அவர்கள் அறிந்து கொள்ளாத நிலையில், அ(வ் வேதனையான)து திடீரென அவர்களிடம் வரும்.

    26:202
  3. فَيَقُولُوا هَلْ نَحْنُ مُنْظَرُونَ

    அப்பொழுது அவர்கள்| “எங்களுக்கு(ச் சிறிது) அவகாசம் கொடுக்கப்படுமா?” என்று கேட்பார்கள்.

    26:203
  4. أَفَبِعَذَابِنَا يَسْتَعْجِلُونَ

    நமது வேதனைக்காகவா அவர்கள் அவசரப்படுகிறார்கள்?

    26:204
  5. أَفَرَأَيْتَ إِنْ مَتَّعْنَاهُمْ سِنِينَ

    நீர் பார்த்தீரா? நாம் அவர்களை(ப் பல)ஆண்டுகள் வரை (இவ்வுலகில்) சுகித்துக் கொண்டிருக்கச் செய்தாலும்,

    26:205
  6. ثُمَّ جَاءَهُمْ مَا كَانُوا يُوعَدُونَ

    பின்னர் அவர்களுக்கு வாக்களிக்கப்பட்ட (வேதனையான)து அவர்களுக்கு வந்து விட்டால்-

    26:206
  7. مَا أَغْنَىٰ عَنْهُمْ مَا كَانُوا يُمَتَّعُونَ

    அவர்கள் (இவ்வுலகில்) சுகித்துக் கொண்டிருந்தது அவர்களுக்குப் பயன்தராது.

    26:207
  8. وَمَا أَهْلَكْنَا مِنْ قَرْيَةٍ إِلَّا لَهَا مُنْذِرُونَ

    இன்னும் எந்த ஊரையும் அதனை எச்சரிப்பவர்கள் இல்லாமல் நாம் அழித்ததில்லை.

    26:208
  9. ذِكْرَىٰ وَمَا كُنَّا ظَالِمِينَ

    ஞாபக மூட்டுவதற்காகவே (நபிமார்கள் வந்தார்கள்) - நாம் அநியாயம் செய்பவராக இருக்கவில்லை.

    26:209
  10. وَمَا تَنَزَّلَتْ بِهِ الشَّيَاطِينُ

    இன்னும், ஷைத்தான்கள் இ(வ் வேதத்)தைக் கொண்டு இறங்கவில்லை.

    26:210
  11. وَمَا يَنْبَغِي لَهُمْ وَمَا يَسْتَطِيعُونَ

    மேலும், அது அவர்களுக்கு தகுதியுமல்ல; (அதற்கு) அவர்கள் சக்தி பெறவும் மாட்டார்கள்.

    26:211
  12. إِنَّهُمْ عَنِ السَّمْعِ لَمَعْزُولُونَ

    நிச்சயமாக ஷைத்தான்கள் (இதைக்) கேட்பதிலிருந்தும் ஒதுக்கப்பட்டுள்ளார்கள்.

    26:212
  13. فَلَا تَدْعُ مَعَ اللَّهِ إِلَٰهًا آخَرَ فَتَكُونَ مِنَ الْمُعَذَّبِينَ

    ஆதலின் அல்லாஹ்வுடன் வேறொரு நாயனை அழைக்காதீர்; அவ்வாறு (செய்வீர்) ஆயின், வேதனை செய்யப்படுபவர்களில் ஒருவராக நீர் ஆகிவிடுவீர்.

    26:213
  14. وَأَنْذِرْ عَشِيرَتَكَ الْأَقْرَبِينَ

    இன்னும், உம்முடைய நெருங்கிய உறவினர்களுக்கு அச்சமூட்டி எச்சரிக்கை செய்வீராக!

    26:214
  15. وَاخْفِضْ جَنَاحَكَ لِمَنِ اتَّبَعَكَ مِنَ الْمُؤْمِنِينَ

    மேலும், உம்மைப் பின்பற்றி நடக்கும் முஃமின்களிடத்தில் தோள்தாழ்த்தி(க் கனிவுடன்) நடந்துகொள்வீராக!.

    26:215
  16. فَإِنْ عَصَوْكَ فَقُلْ إِنِّي بَرِيءٌ مِمَّا تَعْمَلُونَ

    ஆனால், அவர்கள் உமக்கு மாறு செய்வார்களாயின்| “நீங்கள் செய்வதை விட்டும் நான் விலகிக் கொண்டேன்” என்று கூறிவிடுவீராக!

    26:216
  17. وَتَوَكَّلْ عَلَى الْعَزِيزِ الرَّحِيمِ

    இன்னும், (யாவரையும்) மிகைத்தவனும், கிருபை மிக்கவனும் ஆகிய (இறை)வனிடமே முழு நம்பிக்கை வைப்பீராக!

    26:217
  18. الَّذِي يَرَاكَ حِينَ تَقُومُ

    அவன், நீர் (தனித்து வணங்குவதற்காக) நிற்கும்போது, உம்மைப் பார்க்கிறான்.

    26:218
  19. وَتَقَلُّبَكَ فِي السَّاجِدِينَ

    இன்னும், ஸஜ்தா செய்வோருடன் நீர் இயங்குவதையும் (அவன் பார்க்கிறான்)

    26:219
  20. إِنَّهُ هُوَ السَّمِيعُ الْعَلِيمُ

    நிச்சயமாக அவன் (யாவற்றையும்) செவியேற்பவன்; மிக அறிபவன்.

    26:220

மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்