சூரா 26 ஸூரத்துஷ்ஷுஃரா (கவிஞர்கள்)
-
فَفَرَرْتُ مِنْكُمْ لَمَّا خِفْتُكُمْ فَوَهَبَ لِي رَبِّي حُكْمًا وَجَعَلَنِي مِنَ الْمُرْسَلِينَ
“ஆகவே, நான் அப்போது உங்களைப் பற்றி பயந்தபோது, உங்களை விட்டு(த் தப்பி) ஓடினேன்; பிறகு என் இறைவன் எனக்கு ஞானத்தை அளித்து, (அவனுடைய) தூதர்களில் என்னை (ஒருவனாக) ஆக்கியிருக்கிறான்.
26:21 -
وَتِلْكَ نِعْمَةٌ تَمُنُّهَا عَلَيَّ أَنْ عَبَّدْتَ بَنِي إِسْرَائِيلَ
“பனூ இஸ்ராயீல்களை அடிமையாக வைத்துக் கொண்டிருக்கும் நிலையில் இது நீ எனக்குச் சொல்லிக் காண்பிக்கக் கூடிய பாக்கியமாகுமா?”
26:22 -
قَالَ فِرْعَوْنُ وَمَا رَبُّ الْعَالَمِينَ
அதற்கு ஃபிர்அவ்ன்| “அகிலத்தாருக்கு இறைவன் யார்?” என்று கேட்டான்.
26:23 -
قَالَ رَبُّ السَّمَاوَاتِ وَالْأَرْضِ وَمَا بَيْنَهُمَا ۖ إِنْ كُنْتُمْ مُوقِنِينَ
அதற்கு (மூஸா) “நீங்கள் உறுதி கொண்டவர்களாக இருப்பின், வானங்களுக்கும், பூமிக்கும் இவ்விரண்டுக்குமிடையே உள்ளவற்றுக்கும் இறைவனே (அகிலத்தாரின் இறைவன் ஆவான்)” என்று கூறினார்.
26:24 -
قَالَ لِمَنْ حَوْلَهُ أَلَا تَسْتَمِعُونَ
தன்னை சுற்றியிருந்தவர்களை நோக்கி| “நீங்கள் (இவர் சொல்வதைச்) செவிமடுக்கிறீர்கள் அல்லவா?” என்று (ஃபிர்அவ்ன்) கேட்டான்.
26:25 -
قَالَ رَبُّكُمْ وَرَبُّ آبَائِكُمُ الْأَوَّلِينَ
(அப்பொழுது மூஸா) “உங்களுக்கும் இறைவன்; உங்கள் முன்னவர்களான மூதாதையருக்கும் (அவனே) இறைவன் ஆவான்” எனக் கூறினார்.
26:26 -
قَالَ إِنَّ رَسُولَكُمُ الَّذِي أُرْسِلَ إِلَيْكُمْ لَمَجْنُونٌ
(அதற்கு ஃபிர்அவ்ன்|) “நிச்சயமாக உங்களிடம் அனுப்பப்பட்டிருக்கிறாரே உங்களுடைய தூதர் (அவர்) ஒரு பைத்தியக் காரரே ஆவார்” எனக் கூறினான்.
26:27 -
قَالَ رَبُّ الْمَشْرِقِ وَالْمَغْرِبِ وَمَا بَيْنَهُمَا ۖ إِنْ كُنْتُمْ تَعْقِلُونَ
(அதற்கு மூஸா) “நீங்கள் உணர்ந்து கொள்பவர்களாக இருப்பீர்களாயின், அவனே கிழக்கிற்கும், மேற்கிற்கும், இன்னும் இவ்விரண்டிற்குமிடையே இருப்பவற்றிற்கும் இறைவன் ஆவான்” எனக் கூறினார்.
26:28 -
قَالَ لَئِنِ اتَّخَذْتَ إِلَٰهًا غَيْرِي لَأَجْعَلَنَّكَ مِنَ الْمَسْجُونِينَ
(அதற்கு ஃபிர்அவ்ன்|) “நீர் என்னை அன்றி வேறு நாயனை ஏற்படுத்திக் கொள்வீராயின் நிச்சயமாக உம்மைச் சிறைப்பட்டோரில் ஒருவராக நான் ஆக்கிவிடுவேன்” எனக் கூறினான்.
26:29 -
قَالَ أَوَلَوْ جِئْتُكَ بِشَيْءٍ مُبِينٍ
(அதற்கு அவர்) “நான் உனக்குத் தெளிவான (அத்தாட்சிப்) பொருளை கொண்டு வந்தாலுமா?” எனக் கேட்டார்.
26:30 -
قَالَ فَأْتِ بِهِ إِنْ كُنْتَ مِنَ الصَّادِقِينَ
“நீர் உண்மையாளராக இருப்பின் அதை நீர் கொண்டு வாரும்” என (ஃபிர்அவ்ன்) பதில் கூறினான்.
26:31 -
فَأَلْقَىٰ عَصَاهُ فَإِذَا هِيَ ثُعْبَانٌ مُبِينٌ
ஆகவே அவர் தம் தடியைக் கீழே எறிந்தார்; அது தெளிவானதொரு மலைப்பாம்பாகி விட்டது.
26:32 -
وَنَزَعَ يَدَهُ فَإِذَا هِيَ بَيْضَاءُ لِلنَّاظِرِينَ
இன்னும் அவர் தம் கையை வெளியில் எடுத்தார்; உடனே அது பார்ப்பவர்களுக்கு பளிச்சிடும் வெண்மையானதாக இருந்தது.
26:33 -
قَالَ لِلْمَلَإِ حَوْلَهُ إِنَّ هَٰذَا لَسَاحِرٌ عَلِيمٌ
(ஃபிர்அவ்ன்) தன்னைச் சூழ்ந்து நின்ற தலைவர்களை நோக்கி “இவர் நிச்சயமாக திறமை மிக்க சூனியக்காரரே!” என்று கூறினான்.
26:34 -
يُرِيدُ أَنْ يُخْرِجَكُمْ مِنْ أَرْضِكُمْ بِسِحْرِهِ فَمَاذَا تَأْمُرُونَ
“இவர் தம் சூனியத்தைக் கொண்டு உங்களை உங்கள் நாட்டை விட்டும் வெளியேற்ற நாடுகிறார்; எனவே இதைப் பற்றி நீங்கள் கூறும் யோசனை என்ன?” (என்று கேட்டான்.)
26:35 -
قَالُوا أَرْجِهْ وَأَخَاهُ وَابْعَثْ فِي الْمَدَائِنِ حَاشِرِينَ
அதற்கவர்கள் “அவருக்கும், அவருடைய சகோதரருக்கும் சிறிது தவணை கொடுத்து விட்டு பல பட்டிணங்களுக்கு(ச் சூனியக்காரர்களைத்)திரட்டிக் கொண்டு வருவோரை அனுப்பி வைப்பீராக-
26:36 -
يَأْتُوكَ بِكُلِّ سَحَّارٍ عَلِيمٍ
(அவர்கள் சென்று) சூனியத்தில் மகா வல்லவர்களையெல்லாம் உம்மிடம் கொண்டு வருவார்கள்” என்று கூறினார்கள்.
26:37 -
فَجُمِعَ السَّحَرَةُ لِمِيقَاتِ يَوْمٍ مَعْلُومٍ
சூனியக்காரர்கள் குறிப்பிட்ட நாளில் குறிப்பிட்ட வேளையில் ஒன்று திரட்டப்பட்டார்கள்.
26:38 -
وَقِيلَ لِلنَّاسِ هَلْ أَنْتُمْ مُجْتَمِعُونَ
இன்னும் மக்களிடம் “(குறித்த நேரத்தில்) நீங்கள் எல்லோரும் வந்து கூடுபவர்களா?” என்று கேட்கப்பட்டது.
26:39 -
لَعَلَّنَا نَتَّبِعُ السَّحَرَةَ إِنْ كَانُوا هُمُ الْغَالِبِينَ
ஏனென்றால், சூனியக்காரர்கள் வெற்றி அடைந்தால், நாம் அவர்களைப் பின் பற்றக் கூடும் (என்றுங் கூறப்பட்டது).
26:40
மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்