சூரா 26 ஸூரத்துஷ்ஷுஃரா (கவிஞர்கள்)

  1. فَلَمَّا تَرَاءَى الْجَمْعَانِ قَالَ أَصْحَابُ مُوسَىٰ إِنَّا لَمُدْرَكُونَ

    இவ்விரு கூட்டத்தினரும் ஒருவரையொருவர் கண்டபோது| “நிச்சயமாக நாம் பிடிபட்டோம்” என்று மூஸாவின் தோழர்கள் கூறினர்.

    26:61
  2. قَالَ كَلَّا ۖ إِنَّ مَعِيَ رَبِّي سَيَهْدِينِ

    அதற்கு (மூஸா), “ஒருக்காலும் இல்லை! நிச்சயமாக என் இறைவன் என்னுடன் இருக்கிறான். எனக்கு சீக்கிரமே அவன் வழி காட்டுவான்” என்று கூறினார்;.

    26:62
  3. فَأَوْحَيْنَا إِلَىٰ مُوسَىٰ أَنِ اضْرِبْ بِعَصَاكَ الْبَحْرَ ۖ فَانْفَلَقَ فَكَانَ كُلُّ فِرْقٍ كَالطَّوْدِ الْعَظِيمِ

    உம் கைத்தடியினால் இந்தக் கடலை நீர் அடியும்” என்று மூஸாவுக்கு வஹீ அறிவித்தோம். (அவ்வாறு அடித்ததும் கடல்) பிளந்தது; (பிளவுண்ட) ஒவ்வொரு பகுதியும் பெரும் மலை போன்று ஆகிவிட்டது.

    26:63
  4. وَأَزْلَفْنَا ثَمَّ الْآخَرِينَ

    (பின் தொடர்ந்து வந்த) மற்றவர்களையும் நாம் நெருங்கச் செய்தோம்.

    26:64
  5. وَأَنْجَيْنَا مُوسَىٰ وَمَنْ مَعَهُ أَجْمَعِينَ

    மேலும், நாம் மூஸாவையும், அவருடன் இருந்த அனைவரையும் காப்பற்றினோம்.

    26:65
  6. ثُمَّ أَغْرَقْنَا الْآخَرِينَ

    பிறகு, மற்றவர்களை (ஃபிர்அவ்னின் கூட்டத்தாரை) நாம் மூழ்கடித்து விட்டோம்.

    26:66
  7. إِنَّ فِي ذَٰلِكَ لَآيَةً ۖ وَمَا كَانَ أَكْثَرُهُمْ مُؤْمِنِينَ

    நிச்சயமாக இதிலே அத்தாட்சி இருக்கிறது; எனினும் அவர்களில் பெரும் பாலோர் நம்பிக்கை கொள்பவர்களாக இல்லை.

    26:67
  8. وَإِنَّ رَبَّكَ لَهُوَ الْعَزِيزُ الرَّحِيمُ

    (நபியே!) நிச்சயமாக உம்முடைய இறைவன் (யாவரையும்) மிகைத்தவனாகவும், கிருபையுடையவனாகவும் இருக்கிறான்.

    26:68
  9. وَاتْلُ عَلَيْهِمْ نَبَأَ إِبْرَاهِيمَ

    இன்னும், நீர் இவர்களுக்கு இப்ராஹீமின் சரிதையையும் ஓதிக் காண்பிப்பீராக!

    26:69
  10. إِذْ قَالَ لِأَبِيهِ وَقَوْمِهِ مَا تَعْبُدُونَ

    அவர் தம் தந்தையையும், தம் சமூகத்தவரையும் நோக்கி| “நீங்கள் எதை வணங்குகிறீர்கள்?” என்று கேட்டபோது,

    26:70
  11. قَالُوا نَعْبُدُ أَصْنَامًا فَنَظَلُّ لَهَا عَاكِفِينَ

    அவர்கள்| “நாங்கள் சிலைகளை வணங்குகிறோம்; நாம் அவற்றின் வணக்கத்திலேயே நிலைத்திருக்கிறோம்” என்று கூறினார்கள்.

    26:71
  12. قَالَ هَلْ يَسْمَعُونَكُمْ إِذْ تَدْعُونَ

    (அதற்கு இப்ராஹீம்) கூறினார்| “நீங்கள் அவற்றை அழைக்கும் போது, (அவை காதுகொடுத்துக்) கேட்கின்றனவா?

    26:72
  13. أَوْ يَنْفَعُونَكُمْ أَوْ يَضُرُّونَ

    “அல்லது அவை உங்களுக்கு நன்மை செய்கின்றனவா; அல்லது தீமை செய்கின்றனவா? (எனவுங் கேட்டார்)

    26:73
  14. قَالُوا بَلْ وَجَدْنَا آبَاءَنَا كَذَٰلِكَ يَفْعَلُونَ

    (அப்போது அவர்கள்) “இல்லை! எங்கள் மூதாதையர் இவ்வாறே (வழிபாடு) செய்ய நாங்கள் கண்டோம்” என்று கூறினார்கள்.

    26:74
  15. قَالَ أَفَرَأَيْتُمْ مَا كُنْتُمْ تَعْبُدُونَ

    அவ்வாறாயின், “நீங்கள் எதை வணங்கிக் கொண்டிருந்தீர்கள்? என்பதை நீங்கள் பார்த்தீர்களா?” என்று கூறினார்.

    26:75
  16. أَنْتُمْ وَآبَاؤُكُمُ الْأَقْدَمُونَ

    “நீங்களும், உங்கள் முந்திய மூதாதையர்களும் (எதை வணங்கினீர்கள் என்று கவனியுங்கள்).”

    26:76
  17. فَإِنَّهُمْ عَدُوٌّ لِي إِلَّا رَبَّ الْعَالَمِينَ

    “நிச்சயமாக இவை எனக்கு விரோதிகளே - அகிலங்களின் இறைவனைத் தவிர (அவனே காப்பவன்).”

    26:77
  18. الَّذِي خَلَقَنِي فَهُوَ يَهْدِينِ

    “அவனே என்னைப் படைத்தான்; பின்னும், அவனே எனக்கு நேர்வழி காண்பிக்கிறான்.

    26:78
  19. وَالَّذِي هُوَ يُطْعِمُنِي وَيَسْقِينِ

    “அவனே எனக்கு உணவளிக்கின்றான்; அவனே எனக்குக் குடிப்பாட்டுகிறான்.”

    26:79
  20. وَإِذَا مَرِضْتُ فَهُوَ يَشْفِينِ

    “நான் நோயுற்ற காலத்தில், அவனே என்னைக் குணப்படுத்துகிறான்.

    26:80

மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்