சூரா 26 ஸூரத்துஷ்ஷுஃரா (கவிஞர்கள்)
-
إِذْ قَالَ لَهُمْ أَخُوهُمْ لُوطٌ أَلَا تَتَّقُونَ
அவர்களிடம் அவர்களுடைய சகோதரர் லூத்| “நீங்கள் (இறைவனை) அஞ்ச மாட்டீர்களா?” என்று கூறியபோது,
26:161 -
إِنِّي لَكُمْ رَسُولٌ أَمِينٌ
“நிச்சயமாக, நான் உங்களுக்கு நம்பிக்கைக்குரிய (இறை) தூதனாவேன்.
26:162 -
فَاتَّقُوا اللَّهَ وَأَطِيعُونِ
“ஆகவே, நீங்கள் அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள்; எனக்கு கீழ்படிந்து நடங்கள்.
26:163 -
وَمَا أَسْأَلُكُمْ عَلَيْهِ مِنْ أَجْرٍ ۖ إِنْ أَجْرِيَ إِلَّا عَلَىٰ رَبِّ الْعَالَمِينَ
“மேலும், இதற்காக நான் உங்களிடம் யாதொரு கூலியும் கேட்கவில்லை. நிச்சயமாக எனக்குரிய கூலி அகிலங்களின் இறைவனிடமே இருக்கிறது.
26:164 -
أَتَأْتُونَ الذُّكْرَانَ مِنَ الْعَالَمِينَ
“உலகத்தார்களில் நீங்கள் ஆடவர்களிடம் (கெட்ட நோக்கோடு) நெருங்குகின்றீர்களா?
26:165 -
وَتَذَرُونَ مَا خَلَقَ لَكُمْ رَبُّكُمْ مِنْ أَزْوَاجِكُمْ ۚ بَلْ أَنْتُمْ قَوْمٌ عَادُونَ
“இன்னும், உங்கள் இறைவன் உங்களுக்காகப் படைத்துள்ள உங்கள் மனைவிமார்களை விட்டு விடுகிறீர்கள்; இல்லை, நீங்கள் வரம்பு கடந்த சமூகத்தாராக இருக்கின்றீர்கள்.”
26:166 -
قَالُوا لَئِنْ لَمْ تَنْتَهِ يَا لُوطُ لَتَكُونَنَّ مِنَ الْمُخْرَجِينَ
அதற்கவர்கள்; “லூத்தே (இப்பேச்சையெல்லாம் விட்டு) நீர் விலகிக் கொள்ளாவிட்டால், நிச்சயமாக நீர் (இங்கிருந்து) வெளியேற்றப்படுவீர்” எனக் கூறினர்.
26:167 -
قَالَ إِنِّي لِعَمَلِكُمْ مِنَ الْقَالِينَ
அவர் கூறினார்| “நிச்சயமாக நான் உங்கள் செயல்களைக் கடுமையாக வெறுப்பவனாக இருக்கிறேன்.
26:168 -
رَبِّ نَجِّنِي وَأَهْلِي مِمَّا يَعْمَلُونَ
“என் இறைவனே! என்னையும், என் குடும்பத்தாரையும் இவர்கள் செய்து கொண்டிருக்கிற (தீய)வற்றிலிருந்து காப்பாயாக!” (எனப் பிரார்த்தித்தார்.)
26:169 -
فَنَجَّيْنَاهُ وَأَهْلَهُ أَجْمَعِينَ
அவ்வாறே, நாம் அவரையும், அவர் குடும்பத்தாரையும் யாவரையும் காத்துக் கொண்டோம்.
26:170 -
إِلَّا عَجُوزًا فِي الْغَابِرِينَ
(அழிந்து போவோரில் ஒருத்தியாக) பின் தங்கிவிட்ட கிழவியைத் தவிர
26:171 -
ثُمَّ دَمَّرْنَا الْآخَرِينَ
பின்னர் நாம் மற்றவர்களை அழித்து விட்டோம்.
26:172 -
وَأَمْطَرْنَا عَلَيْهِمْ مَطَرًا ۖ فَسَاءَ مَطَرُ الْمُنْذَرِينَ
இன்னும், நாம் அவர்கள் மீது (கல்) மாரி பொழியச் செய்தோம். அச்சமூட்டி எச்சரிக்கப்பட்ட (ஆனால் அதைப் புறக்கணித்)தவர்கள் மீது (அக்கல்) மாரி மிகவும் கெட்டதாக இருந்தது.
26:173 -
إِنَّ فِي ذَٰلِكَ لَآيَةً ۖ وَمَا كَانَ أَكْثَرُهُمْ مُؤْمِنِينَ
நிச்சயமாக இதிலே ஓர் அத்தாட்சி இருக்கிறது எனினும் அவர்களில் பெரும்பாலோர் நம்பிக்கை கொள்வதில்லை.
26:174 -
وَإِنَّ رَبَّكَ لَهُوَ الْعَزِيزُ الرَّحِيمُ
மேலும், நிச்சயமாக உம்முடைய இறைவன் (யாவரையும்) மிகைப்பவனாகவும், கிருபை உடையவனாகவும் இருக்கின்றான்.
26:175 -
كَذَّبَ أَصْحَابُ الْأَيْكَةِ الْمُرْسَلِينَ
தோப்பு வாசிகளும் (இறை) தூதர்களைப் பொய்ப் படுத்தினார்கள்.
26:176 -
إِذْ قَالَ لَهُمْ شُعَيْبٌ أَلَا تَتَّقُونَ
ஷுஐப் அவர்களிடம்| “நீங்கள் (இறைவனுக்கு) அஞ்ச மாட்டீர்களா?” எனக் கூறியபோது|
26:177 -
إِنِّي لَكُمْ رَسُولٌ أَمِينٌ
“நிச்சயமாக நான் உங்களுக்கு நம்பிக்கைக்குரிய (இறை) தூதனாவேன்.
26:178 -
فَاتَّقُوا اللَّهَ وَأَطِيعُونِ
“ஆகவே, அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள்; எனக்கு கீழ்படிந்து நடங்கள்.
26:179 -
وَمَا أَسْأَلُكُمْ عَلَيْهِ مِنْ أَجْرٍ ۖ إِنْ أَجْرِيَ إِلَّا عَلَىٰ رَبِّ الْعَالَمِينَ
“மேலும், இதற்காக நான் உங்களிடம் யாதொரு கூலியும் கேட்கவில்லை; நிச்சயமாக எனக்குரிய கூலி அகிலங்களின் இறைவனிடமே இருக்கிறது.
26:180
மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்