சூரா 26 ஸூரத்துஷ்ஷுஃரா (கவிஞர்கள்)
-
وَالَّذِي يُمِيتُنِي ثُمَّ يُحْيِينِ
“மேலும் அவனே என்னை மரணிக்கச் செய்கிறான்; பிறகு அவனே என்னை உயிர்ப்பிப்பான்.”
26:81 -
وَالَّذِي أَطْمَعُ أَنْ يَغْفِرَ لِي خَطِيئَتِي يَوْمَ الدِّينِ
“நியாயத் தீர்ப்பு நாளன்று, எனக்காக என் குற்றங்களை மன்னிப்பவன் அவனே என்று நான் ஆதரவு வைக்கின்றேன்.
26:82 -
رَبِّ هَبْ لِي حُكْمًا وَأَلْحِقْنِي بِالصَّالِحِينَ
“இறைவனே! நீ எனக்கு ஞானத்தை அளிப்பாயாக. மேலும், ஸாலிஹானவர்களுடன் (நல்லவர்களுடன்) என்னைச் சேர்த்து வைப்பாயாக!”
26:83 -
وَاجْعَلْ لِي لِسَانَ صِدْقٍ فِي الْآخِرِينَ
“இன்னும், பின் வருபவர்களில் எனக்கு நீ நற்பெயரை எற்படுத்துவாயாக!”
26:84 -
وَاجْعَلْنِي مِنْ وَرَثَةِ جَنَّةِ النَّعِيمِ
“இன்னும், பாக்கியம் நிறைந்த சுவனபதியின் வாரிஸுக்காரர்களில் (ஒருவனாக) என்னை ஆக்கி வைப்பாயாக!”
26:85 -
وَاغْفِرْ لِأَبِي إِنَّهُ كَانَ مِنَ الضَّالِّينَ
“என் தந்தையாரையும் மன்னிப்பாயாக! நிச்சயமாக, அவர் வழி கெட்டவர்களில் (ஒருவராக) இருக்கிறார்.”
26:86 -
وَلَا تُخْزِنِي يَوْمَ يُبْعَثُونَ
“இன்னும் (மனிதர்கள் உயிர் கொடுத்து) எழுப்பப்படும் நாளில் என்னை நீ இழிவுக்குள்ளாக்காதிருப்பாயாக!”
26:87 -
يَوْمَ لَا يَنْفَعُ مَالٌ وَلَا بَنُونَ
“அந்நாளில் செல்வமும், பிள்ளைகளும் (யாதொரு) பயனுமளிக்க மாட்டா.”
26:88 -
إِلَّا مَنْ أَتَى اللَّهَ بِقَلْبٍ سَلِيمٍ
“எவரொருவர் பரிசுத்த இருதயத்தை அல்லாஹ்விடம் கொண்டு வருகிறாரோ அவர் (கண்ணியம் அடைவார்).”
26:89 -
وَأُزْلِفَتِ الْجَنَّةُ لِلْمُتَّقِينَ
“பயபக்தியுடையவர்களுக்கு அருகில் சுவனபதி கொண்டு வரப்படும்.”
26:90 -
وَبُرِّزَتِ الْجَحِيمُ لِلْغَاوِينَ
“வழி தவறியவர்களுக்கு எதிரே நரகம் கொண்டு வரப்படும்.”
26:91 -
وَقِيلَ لَهُمْ أَيْنَ مَا كُنْتُمْ تَعْبُدُونَ
“இன்னும், அவர்களிடம் கூறப்படும்| “நீங்கள் வணங்கி வழி பட்டவை எங்கே?” என்று.
26:92 -
مِنْ دُونِ اللَّهِ هَلْ يَنْصُرُونَكُمْ أَوْ يَنْتَصِرُونَ
“அல்லாஹ்வையன்றி (மற்றவற்றை வணங்கினீர்களே! இப்போது) அவை உங்களுக்கு உதவி செய்யுமா? அல்லது தங்களுக்குத் தாங்களேனும் உதவி செய்து கொள்ளுமா,”
26:93 -
فَكُبْكِبُوا فِيهَا هُمْ وَالْغَاوُونَ
பின்னர், அவை முகங்குப்புற அ(ந் நரகத்)தில் தள்ளப்படும் - அவையும் (அவற்றை) வணங்கி வழி தவறிப் போனவர்களும் -
26:94 -
وَجُنُودُ إِبْلِيسَ أَجْمَعُونَ
“இப்லீஸின் சேனைகளும் - ஆகிய எல்லோரும் (அவ்வாறு தள்ளப்படுவார்கள்).”
26:95 -
قَالُوا وَهُمْ فِيهَا يَخْتَصِمُونَ
அதில் அவர்கள் தங்களுக்குள் தர்க்கித்துக் கொண்டு கூறுவார்கள்|
26:96 -
تَاللَّهِ إِنْ كُنَّا لَفِي ضَلَالٍ مُبِينٍ
“அல்லாஹ்வின் மீது ஆணையாக, நாம் வெளிப்படையான வழிகேட்டிலேயே இருந்தோம்.”
26:97 -
إِذْ نُسَوِّيكُمْ بِرَبِّ الْعَالَمِينَ
“உங்களை நாங்கள் அகிலங்களுக்கெல்லாம் இறைவனாக இருப்பவனுடன் சரிசமான முள்ளவையாக ஆக்கி வைத்தோமே (அப்போது);
26:98 -
وَمَا أَضَلَّنَا إِلَّا الْمُجْرِمُونَ
இந்தக் குற்றவாளிகள் தாம் எங்களை வழி கெடுத்தவர்கள்.
26:99 -
فَمَا لَنَا مِنْ شَافِعِينَ
ஆகவே, எங்களுக்காகப் பரிந்து பேசுவோர் (இன்று) எவருமில்லை.
26:100
மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்