சூரா 26 ஸூரத்துஷ்ஷுஃரா (கவிஞர்கள்)

  1. إِنَّ فِي ذَٰلِكَ لَآيَةً ۖ وَمَا كَانَ أَكْثَرُهُمْ مُؤْمِنِينَ

    நிச்சயமாக இதிலே ஓர் அத்தாட்சி இருக்கிறது; எனினும் அவர்களில் பெரும் பாலோர் ஈமான் கொள்வதில்லை.

    26:121
  2. وَإِنَّ رَبَّكَ لَهُوَ الْعَزِيزُ الرَّحِيمُ

    நிச்சயமாக உம்முடைய இறைவன் (யாவரையும்) மிகைப்பவனாகவும், கிருபையுடையவனாகவும் இருக்கின்றான்.

    26:122
  3. كَذَّبَتْ عَادٌ الْمُرْسَلِينَ

    ஆது (கூட்டத்தினரும், இறை) தூதர்களைப் பொய்ப்பித்தனர்.

    26:123
  4. إِذْ قَالَ لَهُمْ أَخُوهُمْ هُودٌ أَلَا تَتَّقُونَ

    அவர்களிடம் அவர்களுடைய சகோதரர் ஹூத் | “நீங்கள் (இறைவனை) அஞ்ச மாட்டீர்களா?” என்று கூறியபோது|

    26:124
  5. إِنِّي لَكُمْ رَسُولٌ أَمِينٌ

    “நிச்சயமாக நான் உங்களுக்கு நம்பிக்கைக்குரிய (இறை) தூதன் ஆவேன்.

    26:125
  6. فَاتَّقُوا اللَّهَ وَأَطِيعُونِ

    ஆகவே நீங்கள் அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள்; எனக்கும் கீழ்ப்படியுங்கள்.

    26:126
  7. وَمَا أَسْأَلُكُمْ عَلَيْهِ مِنْ أَجْرٍ ۖ إِنْ أَجْرِيَ إِلَّا عَلَىٰ رَبِّ الْعَالَمِينَ

    “மேலும், இதற்காக நான் உங்களிடம் யாதொரு கூலியும் கேட்கவில்லை; நிச்சயமாக எனக்குரிய கூலி அகிலங்களின் இறைவனிடமே இருக்கிறது.

    26:127
  8. أَتَبْنُونَ بِكُلِّ رِيعٍ آيَةً تَعْبَثُونَ

    “நீங்கள் ஒவ்வோர் உயரமான இடத்திலும் வீணாக சின்னங்களை நிர்மாணிக்கின்றீர்களா?

    26:128
  9. وَتَتَّخِذُونَ مَصَانِعَ لَعَلَّكُمْ تَخْلُدُونَ

    இன்னும், நீங்கள் நிரந்தரமாக இருப்போம் என்று, (அழகிய வேலைப்பாடுகள் மிக்க) மாளிகைகளை அமைத்துக் கொள்கின்றீர்களா?

    26:129
  10. وَإِذَا بَطَشْتُمْ بَطَشْتُمْ جَبَّارِينَ

    “இன்னும், நீங்கள் (எவரையும் ஏதுங் குற்றங்களுக்காகப்) பிடித்தால் மிகவும் கொடியவர்கள் போல் பிடிக்கின்றீர்கள்.

    26:130
  11. فَاتَّقُوا اللَّهَ وَأَطِيعُونِ

    “எனவே, நீங்கள் அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள்; எனக்கு கீழ்படிந்து நடங்கள்.

    26:131
  12. وَاتَّقُوا الَّذِي أَمَدَّكُمْ بِمَا تَعْلَمُونَ

    “மேலும், நீங்கள் அறிந்திருக்கும் (பாக்கியமான பொருள்களையெல்லாம் கொண்டு) உங்களுக்கு உதவியளித்தவனை அஞ்சுங்கள்.

    26:132
  13. أَمَدَّكُمْ بِأَنْعَامٍ وَبَنِينَ

    “அவன் உங்களுக்கு (ஆடு, மாடு, ஒட்டகை போன்ற) கால்நடைகளையும், பிள்ளைகளையும் கொண்டு உதவியளித்தான்.

    26:133
  14. وَجَنَّاتٍ وَعُيُونٍ

    “இன்னும் தோட்டங்களையும், நீரூற்றுக்களையும் (கொண்டு உதவியளித்தான்).

    26:134
  15. إِنِّي أَخَافُ عَلَيْكُمْ عَذَابَ يَوْمٍ عَظِيمٍ

    “நிச்சயமாக நான் உங்கள் மீது மகத்தான நாளின் வேதனைப் பற்றி அஞ்சுகிறேன்” (எனக் கூறினார்).

    26:135
  16. قَالُوا سَوَاءٌ عَلَيْنَا أَوَعَظْتَ أَمْ لَمْ تَكُنْ مِنَ الْوَاعِظِينَ

    (இதற்கு) அவர்கள்| “நீர் எங்களுக்கு உபதேசம் செய்தாலும் அல்லது நீர் எங்களுக்கு உபதேசம் செய்பவராக இல்லாதிருப்பினும் (இரண்டுமே) எங்களுக்கு சமம்தான்” எனக் கூறினார்கள்.

    26:136
  17. إِنْ هَٰذَا إِلَّا خُلُقُ الْأَوَّلِينَ

    “இது முன்னவர்களின் வழக்கமேயன்றி (வேறு) இல்லை.

    26:137
  18. وَمَا نَحْنُ بِمُعَذَّبِينَ

    “மேலும், நாங்கள் வேதனை செய்யப் படவும் மாட்டோம்.”

    26:138
  19. فَكَذَّبُوهُ فَأَهْلَكْنَاهُمْ ۗ إِنَّ فِي ذَٰلِكَ لَآيَةً ۖ وَمَا كَانَ أَكْثَرُهُمْ مُؤْمِنِينَ

    (இவ்வாறு கூறி) அவர்கள் அவரைப் பொய்ப்பித்தார்கள்; ஆதலின் நாம் அவர்களை அழித்தோம்; நிச்சயமாக இதிலே ஓர் அத்தாட்சி இருக்கிறது; எனினும் அவர்களில் பெரும்பாலோர் நம்பிக்கை கொள்வதில்லை.

    26:139
  20. وَإِنَّ رَبَّكَ لَهُوَ الْعَزِيزُ الرَّحِيمُ

    நிச்சயமாக உம்முடைய இறைவன் (யாவரையும்) மிகைப்பவனாகவும், கிருபையுள்ளவனாகவும் இருக்கின்றான்.

    26:140

மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்