சூரா 26 ஸூரத்துஷ்ஷுஃரா (கவிஞர்கள்)
-
أَوْفُوا الْكَيْلَ وَلَا تَكُونُوا مِنَ الْمُخْسِرِينَ
“அளவையை நிறைவாக அளவுங்கள்; (அளவையைக்) குறைப்பவர்களாக இராதீர்கள்.
26:181 -
وَزِنُوا بِالْقِسْطَاسِ الْمُسْتَقِيمِ
“நேரான தராசைக் கொண்டு நிறுத்துக் கொடுங்கள்.
26:182 -
وَلَا تَبْخَسُوا النَّاسَ أَشْيَاءَهُمْ وَلَا تَعْثَوْا فِي الْأَرْضِ مُفْسِدِينَ
“மனிதர்களுக்கு கொடுக்க வேண்டிய பொருட்களை நீங்கள் குறைத்து விடாதீர்கள் - மேலும், நீங்கள் பூமியில் குழப்பம் செய்பவர்களாக அலையாதீர்கள்.
26:183 -
وَاتَّقُوا الَّذِي خَلَقَكُمْ وَالْجِبِلَّةَ الْأَوَّلِينَ
“அன்றியும், உங்களையும், உங்களுக்கு முன்னாலிருந்த படைப்புகளையும் படைத்த அவனுக்கே அஞ்சுங்கள்” (எனக் கூறினார்.)
26:184 -
قَالُوا إِنَّمَا أَنْتَ مِنَ الْمُسَحَّرِينَ
அவர்கள் சொன்னார்கள்| “நிச்சயமாக நீர் மிகுதம் சூனியம் செய்யப்பட்டவராக இருக்கின்றீர்.
26:185 -
وَمَا أَنْتَ إِلَّا بَشَرٌ مِثْلُنَا وَإِنْ نَظُنُّكَ لَمِنَ الْكَاذِبِينَ
“நீர் எங்களைப் போன்ற ஒரு மனிதரே அன்றி (வேறு) இல்லை; உம்மைப் பொய்யர்களில் ஒருவராகவே நிச்சயமாக நாங்கள் எண்ணுகிறோம்.
26:186 -
فَأَسْقِطْ عَلَيْنَا كِسَفًا مِنَ السَّمَاءِ إِنْ كُنْتَ مِنَ الصَّادِقِينَ
“எனவே, நீர் உண்மை சொல்பவராக இருந்தால், வானத்திலிருந்து ஒரு துண்டை எங்கள் மீது விழும்படிச் செய்யும்.”
26:187 -
قَالَ رَبِّي أَعْلَمُ بِمَا تَعْمَلُونَ
“நீங்கள் செய்து கொண்டிருப்பதை என் இறைவன் நன்கறிவான்” என்று அவர் கூறினார்.
26:188 -
فَكَذَّبُوهُ فَأَخَذَهُمْ عَذَابُ يَوْمِ الظُّلَّةِ ۚ إِنَّهُ كَانَ عَذَابَ يَوْمٍ عَظِيمٍ
பின்னரும், அவர்கள் அவரைப் பொய்ப்பித்தனர்; ஆகவே, (அடர்ந்திருண்ட) மேகத்துடைய நாளின் வேதனை அவர்களைப் பிடித்துக் கொண்டது; நிச்சயமாக அது கடினமான நாளின் வேதனையாகவே இருந்தது.
26:189 -
إِنَّ فِي ذَٰلِكَ لَآيَةً ۖ وَمَا كَانَ أَكْثَرُهُمْ مُؤْمِنِينَ
நிச்சயமாக இதிலே ஓர் அத்தாட்சி இருக்கிறது; எனினும் அவர்களில் பெரும்பாலோர் நம்பிக்கை கொள்வதில்லை.
26:190 -
وَإِنَّ رَبَّكَ لَهُوَ الْعَزِيزُ الرَّحِيمُ
மேலும், நிச்சயமாக உம் இறைவன் (யாவரையும்) மிகைப்பவனாகவும், கிருபையுடையவனாகவும் இருக்கின்றான்.
26:191 -
وَإِنَّهُ لَتَنْزِيلُ رَبِّ الْعَالَمِينَ
மேலும், நிச்சயமாக இ(ந்த வேதமான)து அகிலங்களின் இறைவனால் இறக்கி வைக்கப்பெற்றது.
26:192 -
نَزَلَ بِهِ الرُّوحُ الْأَمِينُ
ரூஹுல் அமீன் (எனும் ஜிப்ரீல்) இதைக் கொண்டு இறங்கினார்.
26:193 -
عَلَىٰ قَلْبِكَ لِتَكُونَ مِنَ الْمُنْذِرِينَ
(நபியே!) அச்சமூட்டி எச்சரிப்பவராக நீர் இருப்பதற்காக (இதை) உம் இதயத்தின் மீது (இவ்வேதத்தை இறக்கினார்) -
26:194 -
بِلِسَانٍ عَرَبِيٍّ مُبِينٍ
தெளிவான அரபி மொழியில்.
26:195 -
وَإِنَّهُ لَفِي زُبُرِ الْأَوَّلِينَ
நிச்சயமாக இது முன்னோர்களின் வேதங்களிலும் (அறிவிக்கப்பட்டு) இருக்கிறது.
26:196 -
أَوَلَمْ يَكُنْ لَهُمْ آيَةً أَنْ يَعْلَمَهُ عُلَمَاءُ بَنِي إِسْرَائِيلَ
பனூ இஸ்ராயீல்களில் உள்ள அறிஞர்கள் இதை(ப் பற்றி நன்கு) அறிந்திருப்பதே அவர்களுக்கு அத்தாட்சியல்லவா?
26:197 -
وَلَوْ نَزَّلْنَاهُ عَلَىٰ بَعْضِ الْأَعْجَمِينَ
இன்னும், நாம் இதனை அரபி (மொழி) அல்லாதவர்களில் ஒருவர் மீது இறக்கி வைத்திருப்போமாயின்;
26:198 -
فَقَرَأَهُ عَلَيْهِمْ مَا كَانُوا بِهِ مُؤْمِنِينَ
அவரும் இதை அவர்களுக்கு ஓதிக் காட்டி இருப்பாராயின் அவர்கள் இதன் மீது நம்பிக்கை கொண்டோராக இருக்க மாட்டார்கள்.
26:199 -
كَذَٰلِكَ سَلَكْنَاهُ فِي قُلُوبِ الْمُجْرِمِينَ
இவ்வாறே, நாம் குற்றவாளிகளின் இதயங்களிலும் இதனை புகுத்துகிறோம்.
26:200
மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்