சூரா 56 ஸூரத்துல் வாகிஆ (மாபெரும் நிகழ்ச்சி)

  1. عَلَىٰ أَنْ نُبَدِّلَ أَمْثَالَكُمْ وَنُنْشِئَكُمْ فِي مَا لَا تَعْلَمُونَ

    (அன்றியும் உங்களைப் போக்கி விட்டு) உங்கள் போன்றோரை பதிலாகக் கொண்டு வந்து நீங்கள் அறியாத உருவத்தில் உங்களை உண்டாக்கவும் (நாம் இயலாதவர்கள் அல்ல).

    56:61
  2. وَلَقَدْ عَلِمْتُمُ النَّشْأَةَ الْأُولَىٰ فَلَوْلَا تَذَكَّرُونَ

    முதல் முறையாக (நாம் உங்களைப்) படைத்தது பற்றி நிச்சயமாக நீங்கள் அறிவீர்கள் - எனவே (அதிலிருந்து நினைவு கூர்ந்து) நீங்கள் உணர்வு பெற வேண்டாமா?

    56:62
  3. أَفَرَأَيْتُمْ مَا تَحْرُثُونَ

    (இப்பூமியில்) விதைப்பதை நீங்கள் கவனித்தீர்களா?

    56:63
  4. أَأَنْتُمْ تَزْرَعُونَهُ أَمْ نَحْنُ الزَّارِعُونَ

    அதனை நீங்கள் முளைக்கச் செய்கின்றீர்களா? அல்லது நாம் முளைக்கச் செய்கின்றோமா?

    56:64
  5. لَوْ نَشَاءُ لَجَعَلْنَاهُ حُطَامًا فَظَلْتُمْ تَفَكَّهُونَ

    நாம் நாடினால் திட்டமாக அதனைக் கூளமாய் ஆக்கிவிடுவோம் - அப்பால் நீங்கள் ஆச்சரியப்பட்டுக் கொண்டு இருப்பீர்கள்.

    56:65
  6. إِنَّا لَمُغْرَمُونَ

    “நிச்சயமாக நாம் கடன் பட்டவர்களாகி விட்டோம்.

    56:66
  7. بَلْ نَحْنُ مَحْرُومُونَ

    “மேலும், (பயிர்களிலிருந்து எதுவும் பெற முடியாதவர்களாகத்) தடுக்கப்பட்டு விட்டோம்” (என்றும் கூறிக் கொண்டிருப்பீர்கள்).

    56:67
  8. أَفَرَأَيْتُمُ الْمَاءَ الَّذِي تَشْرَبُونَ

    அன்றியும், நீங்கள் குடிக்கும் நீரைக் கவனித்தீர்களா?

    56:68
  9. أَأَنْتُمْ أَنْزَلْتُمُوهُ مِنَ الْمُزْنِ أَمْ نَحْنُ الْمُنْزِلُونَ

    மேகத்திலிருந்து அதை நீங்கள் இறக்கினீர்களா? அல்லது நாம் இறக்குகிறோமா?

    56:69
  10. لَوْ نَشَاءُ جَعَلْنَاهُ أُجَاجًا فَلَوْلَا تَشْكُرُونَ

    நாம் நாடினால், அதை உப்பாக ஆக்கியிருப்போம் (இவற்றுக்கெல்லாம்) நீங்கள் நன்றி செலுத்த வேண்டாமா?

    56:70
  11. أَفَرَأَيْتُمُ النَّارَ الَّتِي تُورُونَ

    நீங்கள் மூட்டும் நெருப்பை கவனித்தீர்களா?

    56:71
  12. أَأَنْتُمْ أَنْشَأْتُمْ شَجَرَتَهَا أَمْ نَحْنُ الْمُنْشِئُونَ

    அதன் மரத்தை நீங்கள் உண்டாக்கினீர்களா? அல்லது நாம் உண்டு பண்ணுகிறோமா?

    56:72
  13. نَحْنُ جَعَلْنَاهَا تَذْكِرَةً وَمَتَاعًا لِلْمُقْوِينَ

    நாம் அதனை நினைவூட்டுதாகவும், பயணிகளுக்கு பயனளிப்பதற்காகவும் உண்டாக்கினோம்.

    56:73
  14. فَسَبِّحْ بِاسْمِ رَبِّكَ الْعَظِيمِ

    ஆகவே, மகத்தான உம்முடைய ரப்பின் திருநாமத்தைக் கொண்டு தஸ்பீஹு செய்வீராக.

    56:74
  15. فَلَا أُقْسِمُ بِمَوَاقِعِ النُّجُومِ

    நட்சத்திர மண்டலங்களின் மீது நான் சத்தியம் செய்கிறேன்.

    56:75
  16. وَإِنَّهُ لَقَسَمٌ لَوْ تَعْلَمُونَ عَظِيمٌ

    நீங்கள் அறீவீர்களாயின் நிச்சயமாக இது மகத்தான பிரமாணமாகும்.

    56:76
  17. إِنَّهُ لَقُرْآنٌ كَرِيمٌ

    நிச்சயமாக, இது மிகவும் கண்ணியமும் சங்கையும் மிக்க குர்ஆன் ஆகும்.

    56:77
  18. فِي كِتَابٍ مَكْنُونٍ

    பாதுகாக்கப்பட்ட ஏட்டில் இருக்கிறது.

    56:78
  19. لَا يَمَسُّهُ إِلَّا الْمُطَهَّرُونَ

    தூய்மையானவர்களைத் தவிர (வேறெவரும்) இதனைத் தொட மாட்டார்கள்.

    56:79
  20. تَنْزِيلٌ مِنْ رَبِّ الْعَالَمِينَ

    அகிலத்தாரின் இறைவனால் இது இறக்கியருளப்பட்டது.

    56:80

மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்