சூரா 56 ஸூரத்துல் வாகிஆ (மாபெரும் நிகழ்ச்சி)

  1. وَأَصْحَابُ الشِّمَالِ مَا أَصْحَابُ الشِّمَالِ

    இடது பாரிசத்திலுள்ளவர்களோ இடது பாரிசத்திலுள்ளவர்கள் யார்? (என்று அறிவீர்களா?)

    56:41
  2. فِي سَمُومٍ وَحَمِيمٍ

    (அவர்கள்) கொடிய அனல் காற்றிலும், கொதிக்கும் நீரிலும் -

    56:42
  3. وَظِلٍّ مِنْ يَحْمُومٍ

    அடர்ந்து இருண்ட புகையின் நிழலிலும் இருப்பார்கள்.

    56:43
  4. لَا بَارِدٍ وَلَا كَرِيمٍ

    (அங்கு) குளிர்ச்சியுமில்லை; நலமுமில்லை.

    56:44
  5. إِنَّهُمْ كَانُوا قَبْلَ ذَٰلِكَ مُتْرَفِينَ

    நிச்சயமாக அவர்கள் இதற்கு முன்னர் (உலகத்தில்) சுகபோகிகளாக இருந்தனர்.

    56:45
  6. وَكَانُوا يُصِرُّونَ عَلَى الْحِنْثِ الْعَظِيمِ

    ஆனால், அவர்கள் பெரும் பாவத்தின் மீது நிலைத்தும் இருந்தனர்.

    56:46
  7. وَكَانُوا يَقُولُونَ أَئِذَا مِتْنَا وَكُنَّا تُرَابًا وَعِظَامًا أَإِنَّا لَمَبْعُوثُونَ

    மேலும், அவர்கள்| “நாம் மரித்து மண்ணாகவும், எலும்புகளாகவும் ஆகி விட்டாலும், நாம் மீண்டும் நிச்சயமாக எழுப்பப்படுவோமா?” என்று கேட்டுக் கொண்டு இருந்தனர்.

    56:47
  8. أَوَآبَاؤُنَا الْأَوَّلُونَ

    “அல்லது, முன்னோர்களான நம் தந்தையருமா? (எழுப்பப்படுவர்?” என்றும் கூறினர்.)

    56:48
  9. قُلْ إِنَّ الْأَوَّلِينَ وَالْآخِرِينَ

    (நபியே!) நீர் கூறும்| “(நிச்சயமாக உங்களில்) முன்னோர்களும், பின்னோர்களும்.

    56:49
  10. لَمَجْمُوعُونَ إِلَىٰ مِيقَاتِ يَوْمٍ مَعْلُومٍ

    “குறிப்பிட்ட நாளின் ஒரு நேரத்தில் (நீங்கள் யாவரும்) ஒன்று கூட்டப்படுவீர்கள்.

    56:50
  11. ثُمَّ إِنَّكُمْ أَيُّهَا الضَّالُّونَ الْمُكَذِّبُونَ

    அதற்குப் பின்னர்| “பொய்யர்களாகிய வழி கேடர்களே! நிச்சயமாக நீங்கள்,

    56:51
  12. لَآكِلُونَ مِنْ شَجَرٍ مِنْ زَقُّومٍ

    ஜக்கூம் (என்னும் கள்ளி) மரத்திலிருந்தே நீங்கள் புசிப்பவர்கள்.

    56:52
  13. فَمَالِئُونَ مِنْهَا الْبُطُونَ

    ஆகவே, “அதைக் கொண்டே வயிறுகளை நிறப்புவீர்கள்.

    56:53
  14. فَشَارِبُونَ عَلَيْهِ مِنَ الْحَمِيمِ

    அப்புறம் அதன்மேல் கொதிக்கும் நீரையே குடிப்பீர்கள்.

    56:54
  15. فَشَارِبُونَ شُرْبَ الْهِيمِ

    “பின்னும் ஹீம் - தாகமுள்ள ஒட்டகை குடிப்பதைப் போல் குடிப்பீர்கள்.”

    56:55
  16. هَٰذَا نُزُلُهُمْ يَوْمَ الدِّينِ

    இதுதான் நியாயத் தீர்ப்பு நாளில் அவர்களுக்கு விருந்தாகும்.

    56:56
  17. نَحْنُ خَلَقْنَاكُمْ فَلَوْلَا تُصَدِّقُونَ

    நாமே உங்களைப் படைத்தோம். எனவே, (நாம் கூறுவதை) நீங்கள் உண்மையென்று நம்ப வேண்டாமா?

    56:57
  18. أَفَرَأَيْتُمْ مَا تُمْنُونَ

    (கர்ப்பப் பையில்) நீங்கள் செலுத்தும் இந்திரியத்தைக் கவனித்தீர்களா?

    56:58
  19. أَأَنْتُمْ تَخْلُقُونَهُ أَمْ نَحْنُ الْخَالِقُونَ

    அதை நீங்கள் படைக்கிறீர்களா? அல்லது நாம் படைக்கின்றோமா?

    56:59
  20. نَحْنُ قَدَّرْنَا بَيْنَكُمُ الْمَوْتَ وَمَا نَحْنُ بِمَسْبُوقِينَ

    உங்களுக்கிடையில் மரணத்தையும் நாமே ஏற்படுத்தியுள்ளோம்; எனவே நம்மை எவரும் மிகைக்க முடியாது.

    56:60

மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்