முஸ்ஹப், பக்கம் 588

  1. كَلَّا إِنَّ كِتَابَ الْفُجَّارِ لَفِي سِجِّينٍ

    ஆகவே, நிச்சயமாக தீயோர்களின் பதிவேடு ஸிஜ்ஜீனில் இருக்கிறது

    83:7
  2. وَمَا أَدْرَاكَ مَا سِجِّينٌ

    “ஸிஜ்ஜீன்” என்பது என்னவென்று உமக்கு எது அறிவிக்கும்?

    83:8
  3. كِتَابٌ مَرْقُومٌ

    அது (செயல்கள்) எழுதப்பட்ட ஏடாகும்.

    83:9
  4. وَيْلٌ يَوْمَئِذٍ لِلْمُكَذِّبِينَ

    பொய்ப்பிப்பவர்களுக்கு அந்நாளில் கேடுதான்.

    83:10
  5. الَّذِينَ يُكَذِّبُونَ بِيَوْمِ الدِّينِ

    அவர்கள் நியாயத் தீர்ப்பு நாளையும் பொய்ப்பிக்கிறார்கள்.

    83:11
  6. وَمَا يُكَذِّبُ بِهِ إِلَّا كُلُّ مُعْتَدٍ أَثِيمٍ

    வரம்பு மீறிய, பெரும் பாவியைத் தவிர வேறெவரும் அதைப் பொய்ப்பிக்க மாட்டார்.

    83:12
  7. إِذَا تُتْلَىٰ عَلَيْهِ آيَاتُنَا قَالَ أَسَاطِيرُ الْأَوَّلِينَ

    நம்முடைய வசனங்கள் அவனுக்கு ஓதிக் காண்பிக்கப்பட்டால், “அவை முன்னோர்களின் கட்டுக் கதைகளே” என்று கூறுகின்றான்.

    83:13
  8. كَلَّا ۖ بَلْ ۜ رَانَ عَلَىٰ قُلُوبِهِمْ مَا كَانُوا يَكْسِبُونَ

    அப்படியல்ல| அவர்கள் சம்பாதித்துக் கொண்டிருந்தவை அவர்களுடைய இருதயங்கள் மீது துருவாகப் படிந்து விட்டன.

    83:14
  9. كَلَّا إِنَّهُمْ عَنْ رَبِّهِمْ يَوْمَئِذٍ لَمَحْجُوبُونَ

    (தீர்ப்புக்குரிய) அந்நாளில் அவர்கள் தங்கள் இறைவனை விட்டும் திரையிடப்பட்டவர்களாவார்கள்.

    83:15
  10. ثُمَّ إِنَّهُمْ لَصَالُو الْجَحِيمِ

    பின்னர் நிச்சயமாக அவர்கள் நரகில் புகுவார்கள்.

    83:16
  11. ثُمَّ يُقَالُ هَٰذَا الَّذِي كُنْتُمْ بِهِ تُكَذِّبُونَ

    “எதை நீங்கள் பொய்ப்பித்துக் கொண்டு இருந்தீர்களோ, அதுதான் இது” என்று பின் அவர்களுக்குச் சொல்லப்படும்.

    83:17
  12. كَلَّا إِنَّ كِتَابَ الْأَبْرَارِ لَفِي عِلِّيِّينَ

    நிச்சயமாக நல்லோர்களின் பதிவேடும் “இல்லிய்யீ”னில் இருக்கிறது.

    83:18
  13. وَمَا أَدْرَاكَ مَا عِلِّيُّونَ

    “இல்லிய்யுன்” என்பது என்னவென்று உமக்கு எது அறிவிக்கும்?

    83:19
  14. كِتَابٌ مَرْقُومٌ

    (அது) செயல்கள் எழுதப்பட்ட ஏடாகும்.

    83:20
  15. يَشْهَدُهُ الْمُقَرَّبُونَ

    (அல்லாஹ்விடம்) நெருங்கிய (கண்ணியம் மிக்க வான)வர்கள் அதை பார்ப்பார்கள்.

    83:21
  16. إِنَّ الْأَبْرَارَ لَفِي نَعِيمٍ

    நிச்சயமாக அப்ரார்கள் (நல்லவர்கள்) “நயீம்” என்னும் சுவர்க்கத்தில் இருப்பார்கள்.

    83:22
  17. عَلَى الْأَرَائِكِ يَنْظُرُونَ

    ஆசனங்களில் அமர்ந்து (சுவர்க்கக் காட்சிகளைப்) பார்ப்பார்கள்.

    83:23
  18. تَعْرِفُ فِي وُجُوهِهِمْ نَضْرَةَ النَّعِيمِ

    அவர்களுடைய முகங்களிலிருந்தே (அவர்களுக்குக் கிட்டிய) பாக்கியத்தின் செழுமையை நீர் அறிவீர்.

    83:24
  19. يُسْقَوْنَ مِنْ رَحِيقٍ مَخْتُومٍ

    (பரிசுத்த) முத்திரையிடப்பட்ட தெளிவான (போதையோ, களங்கமோ அற்ற) மதுவிலிருந்து அவர்கள் புகட்டப்படுவார்கள்.

    83:25
  20. خِتَامُهُ مِسْكٌ ۚ وَفِي ذَٰلِكَ فَلْيَتَنَافَسِ الْمُتَنَافِسُونَ

    அதன் முத்திரை கஸ்தூரியாகும்; எனவே (அதற்காக) ஆர்வம் கொள்பவர்கள், (அதைப் பெற்றுக் கொள்வதற்கான நல்ல அமல்களில்) ஆர்வம் கொள்ளட்டும்.

    83:26
  21. وَمِزَاجُهُ مِنْ تَسْنِيمٍ

    இன்னும், அதனுடைய கலவை தஸ்னீமில் நின்றுமுள்ளதாகும்.

    83:27
  22. عَيْنًا يَشْرَبُ بِهَا الْمُقَرَّبُونَ

    அது (தஸ்னீம், ஓர் இனிய) நீர்ச்சுனையாகும். அதிலிருந்து (அல்லாஹ்விடம் நெருங்கியவர்கள்) முகர்ரபுகள் அருந்துவார்கள்.

    83:28
  23. إِنَّ الَّذِينَ أَجْرَمُوا كَانُوا مِنَ الَّذِينَ آمَنُوا يَضْحَكُونَ

    நிச்சயமாக, குற்றமிழைத்தார்களே அவர்கள், ஈமான் கொண்டவர்களைப் பார்த்து (உலகில்) சிரித்துக் கொண்டிருந்தார்கள்.

    83:29
  24. وَإِذَا مَرُّوا بِهِمْ يَتَغَامَزُونَ

    அன்றியும், அவர்கள் அண்மையில் சென்றால், (ஏளனமாக) ஒருவருக்கொருவர் கண்சாடை செய்துகொள்வார்கள்.

    83:30
  25. وَإِذَا انْقَلَبُوا إِلَىٰ أَهْلِهِمُ انْقَلَبُوا فَكِهِينَ

    இன்னும் அவர்கள் தம் குடும்பத்தார்பால் திரும்பிச் சென்றாலும், (தாங்கள் செய்தது பற்றி) மகிழ்வுடனேயே திரும்பிச் செல்வார்கள்.

    83:31
  26. وَإِذَا رَأَوْهُمْ قَالُوا إِنَّ هَٰؤُلَاءِ لَضَالُّونَ

    மேலும் அவர்கள் (முஃமின்களைப்) பார்த்தால், “நிச்சயமாக இவர்களே வழி தவறியவர்கள்” என்றும் கூறுவார்கள்.

    83:32
  27. وَمَا أُرْسِلُوا عَلَيْهِمْ حَافِظِينَ

    (முஃமின்களின் மீது) அவர்கள் பாதுகாவலர்களாக அனுப்பப்படவில்லையே!

    83:33
  28. فَالْيَوْمَ الَّذِينَ آمَنُوا مِنَ الْكُفَّارِ يَضْحَكُونَ

    ஆனால் (மறுமை) நாளில் ஈமான் கொண்டவர்கள் காஃபிர்களைப் பார்த்துச் சிரிப்பார்கள்.

    83:34

மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்