முஸ்ஹப், பக்கம் 600
-
وَحُصِّلَ مَا فِي الصُّدُورِ
மேலும், இதயங்களில் உள்ளவை வெளியாக்கப்படும் போது-
100:10 -
إِنَّ رَبَّهُمْ بِهِمْ يَوْمَئِذٍ لَخَبِيرٌ
நிச்சயமாக, அவர்களுடைய இறைவன் அவர்களைப்பற்றி, அந்நாளில் நன்கறிந்தவன்.
100:11 -
الْقَارِعَةُ
திடுக்கிடச் செய்யும் (நிகழ்ச்சி).
101:1 -
مَا الْقَارِعَةُ
திடுக்கிடச் செய்யும் (நிகழ்ச்சி) என்ன?
101:2 -
وَمَا أَدْرَاكَ مَا الْقَارِعَةُ
திடுக்கிடச் செய்யும் (நிகழ்ச்சி) என்ன வென்று உமக்கு எது அறிவித்தது?
101:3 -
يَوْمَ يَكُونُ النَّاسُ كَالْفَرَاشِ الْمَبْثُوثِ
அந்நாளில் சிதறடிக்கப்படட ஈசல்களைப் போன்று மனிதர்கள் ஆகிவிடுவார்கள்.
101:4 -
وَتَكُونُ الْجِبَالُ كَالْعِهْنِ الْمَنْفُوشِ
மேலும், மலைகள் கொட்டப்பட்ட பஞ்சைப் போன்று ஆகிவிடும்.
101:5 -
فَأَمَّا مَنْ ثَقُلَتْ مَوَازِينُهُ
எனவே, (அந்நாளில்) எவருடைய (நன்மையின்) நிறை கனத்ததோ-
101:6 -
فَهُوَ فِي عِيشَةٍ رَاضِيَةٍ
அவர் திருப்தி பொருந்திய வாழ்வில் இருப்பார்.
101:7 -
وَأَمَّا مَنْ خَفَّتْ مَوَازِينُهُ
ஆனால் எவனுடைய (நன்மையின்) நிறை இலேசாக இருக்கிறதோ-
101:8 -
فَأُمُّهُ هَاوِيَةٌ
அவன் தங்குமிடம் “ஹாவியா” தான்.
101:9 -
وَمَا أَدْرَاكَ مَا هِيَهْ
இன்னும் (“ஹாவியா”) என்ன என்று உமக்கு அறிவித்தது எது?
101:10 -
نَارٌ حَامِيَةٌ
அது சுட்டெரிக்கும் (நரகத்தின்) தீக்கிடங்காகும்.
101:11 -
أَلْهَاكُمُ التَّكَاثُرُ
செல்வத்தைப பெருக்கும் ஆசை உங்களை (அல்லாஹ்வை விட்டும்) பராக்காக்கி விட்டது-
102:1 -
حَتَّىٰ زُرْتُمُ الْمَقَابِرَ
நீங்கள் மண்ணறைகளைச் சந்திக்கும் வரை.
102:2 -
كَلَّا سَوْفَ تَعْلَمُونَ
அவ்வாறில்லை, விரைவில் (அதன் பலனை) நீங்கள் அறிந்து கொள்வீர்கள்.
102:3 -
ثُمَّ كَلَّا سَوْفَ تَعْلَمُونَ
பின்னர் அவ்வாறல்ல, விரைவில் (அதன் பலனை) நீங்கள் அறிந்து கொள்வீர்கள்.
102:4 -
كَلَّا لَوْ تَعْلَمُونَ عِلْمَ الْيَقِينِ
அவ்வாறல்ல - மெய்யான அறிவைக் கொண்டறிந்திருப்பீர்களானால் (அந்த ஆசை உங்களைப் பராக்காக்காது).
102:5 -
لَتَرَوُنَّ الْجَحِيمَ
நிச்சயமாக (அவ்வாசையால்) நீங்கள் நரகத்தைப் பார்ப்பீர்கள்.
102:6 -
ثُمَّ لَتَرَوُنَّهَا عَيْنَ الْيَقِينِ
பின்னும், நீங்கள் அதை உறுதியாகக் கண்ணால் பார்ப்பீர்கள்.
102:7 -
ثُمَّ لَتُسْأَلُنَّ يَوْمَئِذٍ عَنِ النَّعِيمِ
பின்னர் அந்நாளில் (இம்மையில் உங்களுக்கு அளிக்கப்பட்டிருந்த) அருட் கொடைகளைப் பற்றி நிச்சயமாக நீங்கள் கேட்கப்படுவீர்கள்.
102:8
மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்