சூரா 85 ஸூரத்துல் புரூஜ் (கிரகங்கள்), அயாஹ் 1 – 22
-
وَالسَّمَاءِ ذَاتِ الْبُرُوجِ
கிரகங்களுடைய வானத்தின் மீது சத்தியமாக,
85:1 -
وَالْيَوْمِ الْمَوْعُودِ
இன்னும், வாக்களிக்கப்பட்ட (இறுதி) நாள் மீதும் சத்தியமாக,
85:2 -
وَشَاهِدٍ وَمَشْهُودٍ
மேலும், சாட்சிகள் மீதும், சாட்சி சொல்லப்படுவதன் மீதும் சத்தியமாக,
85:3 -
قُتِلَ أَصْحَابُ الْأُخْدُودِ
(நெருப்புக்) குண்டங்களையுடையவர்கள் சபிக்கப்பட்டனர்.
85:4 -
النَّارِ ذَاتِ الْوَقُودِ
விறகுகள் போட்டு எரித்த பெரும் நெருப்புக் (குண்டம்).
85:5 -
إِذْ هُمْ عَلَيْهَا قُعُودٌ
அவர்கள் அதன்பால் உட்கார்ந்திருந்த போது,
85:6 -
وَهُمْ عَلَىٰ مَا يَفْعَلُونَ بِالْمُؤْمِنِينَ شُهُودٌ
முஃமின்களை அவர்கள் (நெருப்புக் குண்டத்தில் போட்டு வேதனை) செய்ததற்கு அவர்களே சாட்சிகளாக இருந்தனர்.
85:7 -
وَمَا نَقَمُوا مِنْهُمْ إِلَّا أَنْ يُؤْمِنُوا بِاللَّهِ الْعَزِيزِ الْحَمِيدِ
(யாவரையும்) மிகைத்தவனும், புகழுடையோனுமாகிய அல்லாஹ்வின் மீது அவர்கள் ஈமான் கொண்டார்கள் என்பதற்காக அன்றி வேறெதற்கும் அவர்களைப் பழி வாங்கவில்லை.
85:8 -
الَّذِي لَهُ مُلْكُ السَّمَاوَاتِ وَالْأَرْضِ ۚ وَاللَّهُ عَلَىٰ كُلِّ شَيْءٍ شَهِيدٌ
வானங்கள், பூமியின் ஆட்சி அவனுக்கே உரியது; எனவே அல்லாஹ் அனைத்துப் பொருள்கள் மீதும் சாட்சியாக இருக்கிறான்.
85:9 -
إِنَّ الَّذِينَ فَتَنُوا الْمُؤْمِنِينَ وَالْمُؤْمِنَاتِ ثُمَّ لَمْ يَتُوبُوا فَلَهُمْ عَذَابُ جَهَنَّمَ وَلَهُمْ عَذَابُ الْحَرِيقِ
நிச்சயமாக, எவர்கள் முஃமினான ஆண்களையும், முஃமினான பெண்களையும் துன்புறுத்திப் பின்னர், தவ்பா செய்யவில்லையோ அவர்களுக்கு நரக வேதனை உண்டு; மேலும், கரித்துப் பொசுக்கும் வேதனையும் அவர்களுக்கு உண்டு.
85:10 -
إِنَّ الَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ لَهُمْ جَنَّاتٌ تَجْرِي مِنْ تَحْتِهَا الْأَنْهَارُ ۚ ذَٰلِكَ الْفَوْزُ الْكَبِيرُ
ஆனால் எவர்கள் ஈமான் கொண்டு, ஸாலிஹான (நல்ல) அமல்கள் செய்கிறார்களோ, அவர்களுக்குச் சுவர்க்கச் சோலைகள் உண்டு, அவற்றின் கீழ் நதிகள் ஓடிக் கொண்டிருக்கும் - அதுவே மாபெரும் பாக்கியமாகும்.
85:11 -
إِنَّ بَطْشَ رَبِّكَ لَشَدِيدٌ
நிச்சயமாக, உம்முடைய இறைவனின் பிடி மிகவும் கடினமானது.
85:12 -
إِنَّهُ هُوَ يُبْدِئُ وَيُعِيدُ
நிச்சயமாக, அவனே ஆதியில் உற்பத்தி செய்தான், மேலும் (மரணத்தற்குப் பின்னும்) மீள வைக்கிறான்.
85:13 -
وَهُوَ الْغَفُورُ الْوَدُودُ
அன்றியும், அவன் மிகவும் மன்னிப்பவன்; மிக்க அன்புடையவன்.
85:14 -
ذُو الْعَرْشِ الْمَجِيدُ
(அவனே) அர்ஷுக்குடையவன்; பெருந்தன்மை மிக்கவன்.
85:15 -
فَعَّالٌ لِمَا يُرِيدُ
தான் விரும்பியவற்றைச் செய்கிறவன்.
85:16 -
هَلْ أَتَاكَ حَدِيثُ الْجُنُودِ
(நபியே!) அந்தப் படைகளின் செய்தி உமக்கு வந்ததா,
85:17 -
فِرْعَوْنَ وَثَمُودَ
ஃபிர்அவ்னுடையவும், ஸமூதுடையவும்,
85:18 -
بَلِ الَّذِينَ كَفَرُوا فِي تَكْذِيبٍ
எனினும், நிராகரிப்பவர்கள் பொய்ப்பிப்பதிலேயே இருக்கின்றனர்.
85:19 -
وَاللَّهُ مِنْ وَرَائِهِمْ مُحِيطٌ
ஆனால், அல்லாஹ்வோ அவர்களை முற்றிலும் சூழ்ந்திருக்கிறான்.
85:20 -
بَلْ هُوَ قُرْآنٌ مَجِيدٌ
(நிராகரிப்போர் எவ்வளவு முயன்றாலும்) இது பெருமை பொருந்திய குர்ஆனாக இருக்கும்.
85:21 -
فِي لَوْحٍ مَحْفُوظٍ
(எவ்வித மாற்றத்துக்கும் இடமில்லாமல்) லவ்ஹுல் மஹ்ஃபூளில் - பதிவாகி பாது காக்கப்பட்டதாக இருக்கிறது.
85:22
மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்